.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் எப்போதெல்லாம் அவதரிக்கிறாரோ அப்போதெல்லாம், அவரது புனித ஸ்தலம், தீர்த்தங்கள், பிரியமான நண்பர்கள். நித்யமான சேவகர்கள் மற்றும் அவரது உபகரணங்களும் அவருடன் அவதரிக்கின்றனர், பகவானின் நித்ய வாசஸ்தலத்திலிருந்து அவரது லீலைகளில் பங்குகொள்ள அவதரிப்பதால் இந்த ஸ்தலங்களில் எவ்வித பேதங்களும் இல்லை. அதனால் இவ்விடம் புனிதமான "தாமமாக"( புண்ணிய ஸ்தலமாக) கருதப்படுகிறது.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்காகவும், அவரை கவர்ந்து இழுக்கவும் ஶ்ரீமதி ராதா ராணி தனிப்பட்ட முறையில் தனது பிரேமையால் உருவாக்கிய மிகவும் அற்புதமான ஸ்தலம் இந்த நவதீபம்
சிவபெருமான் பார்வதிக்கு நவத்வீப-தாமத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் போது இந்த அற்புதமான லீலைகளை விவரித்தார். "தாமரை மலரில் தேனீ எப்படி விளையாடிக் கொண்டு இருக்குமோ அது போல" "கிருஷ்ணர் விருந்தாவனத்தின் இனிமையான காட்டுத் தோப்புகளில் விரஜா என்ற கோபியுடன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார்.
சகி (தோழி) ஒருத்தி மூலம் இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற , நிலவை போன்ற முகத்தைக் கொண்டவரும், பெண் மானின் கண்களைக் கொண்டவருமாகிய ராதா கிருஷ்ணரை கண்டு பிடிப்பதற்காக அவசரமாக அந்த இடத்தை நோக்கி ஓடினார். ஶ்ரீமதி ராதை அங்கு வருவதை கண்ட கிருஷ்ணர் திடீரென்று அங்கிருந்து மறைந்து விட்டார். அதே போல் விரஜா நதியாக மாறினாள். ஸ்ரீமதி ராதாராணி அங்கு வந்தபோது அவ்விருவரையும் அவரால் காண முடியவில்லை. விராஜாவிடமிருந்து கிருஷ்ணரை எப்படி கவர்வது என்பதைப் பற்றி கிருஷ்ணருடைய ஸ்மரணத்திலேயே இருந்த ராதாராணி எண்ணத் துவங்கினார்.
"ஶ்ரீமதி ராதாராணி தன்னுடைய பிரியமான சகிகள் அனைவரையுமே கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கிடையே ஒன்று திரட்டினார். மரங்கள், செடி கொடிகள் மேலும் ஆண் மற்றும் பெண் தேனீக்களால் அலங்கரிக்கப்பட்டு நிரம்பிய ஒரு அழகான இடத்தை உருவாக்கினார். ஆண் மற்றும் பெண் மான்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கே உலாவிக் கொண்டிருந்தன. மேலும் மல்லிகை, முல்லை மற்றும் மாலதி மலர்களின் நறுமணத்தால் அந்த இடம் நிரம்பியிருந்தது. துளசி வனத்தாலும் பல்வேறு ரம்மியமான இடங்களை ராதையின் கட்டளையின்பேரில் உருவாக்கப்பட்டன. மேலும் வசந்த காலத்துடன் மன்மதனும் கூட நித்தியமாக அங்கேயே வாழ்கிறார். மேலும் மங்களகரமான கிருஷ்ணரின் நாமத்தை அங்கிருக்கும் பறவைகள் தொடர்ச்சியாக பாடிக் கொண்டிருக்கின்றன.
"கிருஷ்ணரை கவர்வதற்காக வண்ணமயமான ஆடைகளை அணிந்திருந்த ராதை ஒரு அழகான மெல்லிசையை தன் புல்லாங்குழலை கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். கிருஷ்ணர் அந்த அழகான மெல்லிசையில் மயங்கி அந்த மயக்கம் ஏற்படுத்தும் மிகவும் ரம்மியமான இருக்கும் அந்த இடத்தில் தோன்றினார்.
கிருஷ்ணரின் மனதை கவருபவரான ராதை, கிருஷ்ணர் அவ்விடத்தில் வந்துவிட்டதைக் கண்டதும் அவர் கைகளை பற்றியவாறு பிரேமத்தில் மூழ்கினார். ராதையின் மனதை அறிந்த பகவான் கிருஷ்ணர் ராதாபிரேமத்தில் வசப்பட்டு குரல் அடைபட்ட நிலையில் பேசினார்.
"ஓ பிரேம மயி ராதே ! நீயே என் வாழ்வு. உன்னைவிட எனக்கு மிகவும் பிரியமானவர் எவருமில்லை. ஆகவே உன்னை ஒருபோதும் விடமாட்டேன். தேனீக்கள் ரீங்காரம் கொண்டாடும் புத்தம் புது சோலைகள், பூத்துக்குலுங்கும் மலர்கள், பலவிதமான கனி மரங்கள் போன்ற இந்த அற்புதமான இடத்தை எனக்காகவே நீ உருவாக்கி இருக்கிறாய். இந்த இடத்தில் உன்னுடன் தங்கி நான் இந்த இடத்தை மாற்றுகின்றேன். புதிய (நவ) விருந்தாவனம் என்று பக்தர்கள் இந்த இடத்தை புகழ்வார்கள். இந்த இடமானது த்வீபத்தை (தீவு) போல இருப்பதால் சான்றோர்கள் இதனை நவத்வீபம் என்று அழைப்பார்கள். எல்லா புனித இடங்களும் என்னுடைய கட்டளையினால் இங்கு தோன்றியிருக்கும். என்னுடைய மகிழ்ச்சிகாகவே இந்த இடத்தை நீ உருவாக்கியதால் நான் நித்தியமாக இந்த இடத்தில் வீற்றிருப்பேன். இந்த இடத்திற்கு வந்து நம்மை வழிபடும் மக்கள் சகிகளின் மனோபாவத்தில் நித்தியமான நம் சேவையை அடைவார்கள். அன்பு இராதையே, இந்த இடமும் பிருந்தாவனத்தை போல மிகவும் தூய்மையானதாகும். இந்த இடத்திற்கு ஒரே முறை வந்தாலும் கூட எல்லா இடங்களுக்கும் சென்ற பலனை ஒருவர் பெறுகிறார். நம்மை திருப்திப்படுத்தும் ஆன்மீக சேவையை விரைவாக ஒருவர் இதன்மூலம் பெறுவார்."
"ஓ பார்வதி, நவத்வீபம் தோன்றியதற்கான காரணத்தை நான் உனக்கு விளக்கி இருக்கிறேன். மனிதர்கள் இதைக் கேட்கும் பொழுது அவர்களுடைய அனைத்து பாவங்களும் களையப்பட்டு அவர்களின் தூய பக்தி தொண்டு உறுதிபடுத்தபடுகிறது. எவரொருவர் அதிகாலையில் எழுந்து கெளரங்கரின் மீதிருக்கும் பக்தியினால் இந்த நவத்வீபத்தின் தோற்றத்தை பற்றிய கதையை படிக்கிறாரோ அல்லது கேட்கிறாரோ நிச்சயமாக அவர் கௌரங்கரை அடைய முடியும்." என்று பகவான் சிவன் கூறினார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment