சம்பாஹட்டி

 



சம்பாஹட்டி


🔆🔆🔆🔆🔆🔆

தன்னுடைய நவத்வீப-பாவ-தரங்கத்தில்  ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"கோலத்வீபத்திற்கு வடக்கே சம்பாஹட்டி என்ற ஒரு இடமுள்ளது. நவத்வீபத்தின் எல்லா இடங்களிலும் இதுவே மிகவும் அழகான இடமாகும். சம்பாஹட்டா கிராமம் என்பது ஒரு உயர்ந்த தீர்த்தமாகும் மேலும் இங்கு கௌர கதாதரரை கவி. ஜெயதேவர் வழிபட்ட மிக அழகிய இடம். வாணிநாதருடைய இல்லத்தில் ஸ்ரீ சச்சி நந்தனர் தன் சகாக்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்தார். சம்பாஹட்டா எனும் கிராமத்தில் சம்பக மலர்கள் இருக்கும் ஒரு வனத்தில் தான் சம்பகலதா சகி பூக்களை பறிக்க வருவார். வ்ரஜ பூமியில் கிருஷ்ணரும் பலராமரும்  ஓய்வெடுத்த கதிரவனத்திற்க்கும்  நவத்வீபத்திலிருக்கும் இந்த இடத்திற்கும்  எந்த வேறுபாடுமில்லை."

சம்பாஹட்டி என்று எதனால் இந்த இடம் அழைக்கப்படுகிறது?

🔆🔆🔆🔆🔆

பகவான் நித்யானந்தர் , ஸ்ரீஜீவ கோஸ்வாமி , ஸ்ரீவாச பண்டிதர் மற்றும் பல  பக்தர்களுடன்  நவத்வீப தாம பரிக்கிரமா செல்லும் பொழுது சம்பாஹட்டி எனும் கிராமத்தை அடைந்தனர். பகவான் கௌரங்கரின் மிக உயர்ந்த பக்தரான த்வஜ வாணிநாதருடைய இல்லத்தில் இவர்கள் அனைவரும் ஓய்வெடுத்தனர். மதிய வேளையில் சம்பாஹட்டி கிராமத்தை சுற்றிப் பார்க்க அனைவரும் நடந்து சென்றனர். அப்போது இந்த இடத்தைப் பற்றி பகவான் நித்தியானந்தர் ஸ்ரீ ஜீவருக்கு விளக்கினார்

ஓ. வல்லவரின் மைந்தனே! நான் கூறுவதை தயவுசெய்து கேட்பாயாக. இந்த இடத்தில் முன்பு சம்பகா மலர் தோட்டம் இருந்தது. இது பார்ப்பதற்கு அழகாகன மற்றும் மிகவும் ரம்மியமான இடம்.   மேலும் இது விருந்தாவனத்தில் இருக்கும் கதிரவனத்தின் ஒரு பகுதியாகும். ஸ்ரீ சம்பகாலதாசஹி , சம்பகா மலர்களைக் பறித்து அவற்றைக் கொண்டு பூமாலைகளை தொடுத்து அனுதினமும்  ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்காக உருவாக்குவார். முன்பு இந்த இடம் ஶ்ரீ சம்பகாஹட்டா எற்ற பெயரை அழைக்கப்பட்டது. தற்போது  சம்பாஹட்டி என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

இதன் மூலமாக சம்பக மலர்களை விற்கும் சந்தை நிறுவப்பட்டது.

சம்மா என்றால் என்றால் செண்பக மலர்
ஹட்டா என்றால் சந்தை

செண்பக மலர்களை விற்பனை செய்யும் சந்தை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇

https://t.me/suddhabhaktitamil

ஆன்மீக கதைகளை படிக்க 👇

https://t.me/udvegakathaigal

Whatsapp :-

🍁🍁🍁🍁🍁

https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR

உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more