சீமந்தத்வீபம்
🔆🔆🔆🔆🔆
“ஸத்ய-யுகத்தில் ஒருசமயம் சிவபெருமான், கௌராங்கரின் நாமத்தை உச்சரித்தபடி பயங்கரமாக நடனமாடத் தொடங்கினார். அவரிடம் பார்வதிதேவி வினவினாள். 'தயவுசெய்து கௌரங்கர் யார்? என்று எனக்குக் கூறுங்கள்; தங்களின் ஆச்சரியமான நடனத்தைக் கண்டும், கௌரங்கரின் நாமத்தைக் கேட்டும் எனது இதயம் உருகுகிறது. இதுவரை, இந்த மந்திர-தந்திரங்களின் வழியில் நான் கேட்டவை அனைத்தும் இவ்வுயிர்வாழிகளுக்கு இன்னும் நெருக்கமான பந்தத்திற்கே வழிகாட்டுகின்றன. அன்புள்ள பிரபுவே, கௌராங்கரைப் பற்றிய விஷயங்களைக் கூறுங்கள். அவரை வழிபடுவதின்மூலம் நான் உண்மையான வாழ்வை அடைய இயலுமா?'
மஹாதேவன் கூறினார். “இராதையின் முழுமை பகுதியும், அனைத்து ஆற்றல்களும் சக்தியும் (ஆதி சக்தி) நீயேயாவாய், ஒரு ரகசியமான உண்மையை இப்போது உனக்குக் கூறுகிறேன். இராதாராணியின் மனோபாவத்தை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மாயாப்பூரில் சச்சி தேவியின் கருவிலிருந்து கௌரங்க என்ற பெயர் கொண்டு பிறக்கவிருக்கிறார். நாம சங்கீர்த்தனம் அதாவது பகவானுடைய புனித நாமங்கள் ஜபம் செய்வதில் பகவான் கௌரங்கர் பித்துப் பிடித்தவனைப் போல காணப்படுவார். தகுதியுடையவர் தகுதியில்லாதவர் என்று அனைவருக்குமே எந்த விதமான பேதமின்றி பிரேமை எனும் செல்வத்தை அவர் வினியோகம் செய்வார். புனித நாமம் எனும் வெள்ளத்தில் மிதப்பதற்கு ஆர்வம் இல்லாமல் ஆடம்பரமான விஷயங்களுக்கு தனது வாழ்வின் பொன்னான நேரத்தை செலவு செய்வாராயின் அவரே மிகவும் துரதிஷ்டவசமானவராவார்.
தேவி , தான் வருவதாக பகவான் அளித்த உறுதிமொழியை நினைத்து பகவத் பிரேமையில் மூழ்கி எனது வாழ்நாளை கடத்துகிறேன். என்னுடைய மனதை என்னால் கட்டுப்படுத்த முடியாததால், என்னுடைய சொந்த நகரமான காசி தாமத்தை (வாரணாசி) விட்டு தற்போது மாயாபூரின் கங்கையின் நதிக் கரையோரமாக ஒரு குடில் அமைத்து கௌரங்க பஜனையில் என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ள விருக்கிறேன்.'' என்று பகவான் கௌரங்கரை தியானித்தவாறு பார்வதிதேவி கூறியதைக் கேட்டு மஹாதேவன் அவருக்கு பதில் கூறினார்.
மஹாதேவரிடம் இதை கேட்டவுடனேயே சீமந்த த்வீபத்திற்கு பார்வதிதேவி உடனடியாக வந்தார். ஸ்ரீ கௌரங்கரின் மீது தியானம் செய்து கொண்டு பேரன்புடன் அவரது புனித நாமத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தார். சில தினங்களுக்கு பிறகு பகவான் கௌரங்க மஹாபிரபு பார்வதிதேவி முன்பு தன்னுடைய சஹாக்களுடன் தோன்றினார். அவர் மிகுந்த உயரம் கொண்டவராகவும் அவருடைய திருமேனி உருக்கிய தங்கத்தின் நிறத்தை உடையதாக இருந்தது. அதிக சுருள் முடிகள் அவருடைய தலை அலங்கரித்தது. மேலும் அவருடைய அங்கங்கள் அனைத்தும் மிகவும் வசீகரத்துடன் இருந்தது. மூன்று மடிப்புகளை கொண்ட வேஷ்டியைத் அணிந்திருந்தார் மேலும் அவருடைய கழுத்து மிகவும் அழகான ஒரு பூமாலையால் கவரப்பட்டிருந்தது. "என் அன்பிற்குரிய பார்வதியே! நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய் என்பதை தயவு செய்து என்னிடம் கூறு" என்று மெய்மறந்த நிலையில் இருந்த கௌரங்க ராயர் தழு தழுக்கும் குரலில் கூறினார்.
பிரபஞ்சத்தின் இறைவனான பகவானின் திருவடிகளில் பார்வதி நமஸ்கரித்து தன்னுடைய பரிதாபமான நிலையை கூறினார். பிரபு ஜகந்நாதரே, அனைவருக்கும் கருணை உடையவராக இருந்தும் தாங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள். வீழ்ந்த ஆத்மாக்களுக்கு விடுதலை அளிப்பவரே, தங்களிடம் வெறுப்புற்ற ஜீவராசிகளை இப்பௌதிக உலகில் பந்தப்படுத்தி வைப்பதற்காகவே தாங்கள் என்னை நியமித்துள்ளீர்கள். இந்த வேலையைச் செய்வதற்காகவே நான் இப்பௌதிக உலகிற்கு வந்துள்ளேன். இவ்வாறாக, தங்களின் அளவற்ற பிரேமையிலிருந்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள். கிருஷ்ணர் எங்கிருக்கிறாரோ அங்கு மாயா இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். அதனால், நான் தங்களின் ஆன்மீக பிரதேசத்திற்கு வெளியே இருக்கும் இப்பௌதிக உலகிலேயே எப்போதும் இருக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறேன். எனவே, நான் எவ்வாறு தங்களின் லீலைகளைக் காண முடியும்? தாங்கள் இதற்கு ஒரு விமோசனம் அளிக்காவிடில், எனக்கு நம்பிக்கையற்றுப் போய்விடும்.' "இவ்வாறு கூறிக்கொண்டு, பார்வதிதேவி, பகவான் கௌரங்கரின் பாத தூளியைத் தனது ஸீமந்தத்தில் (தலை வகுடில்) பெரும் வருத்தத்துடன் தடவிக் கொண்டாள். அதிலிருந்து இவ்விடத்திற்கு 'ஸீமந்த-த்வீபம்' என்ற பெயர் வந்தது. அறியாமையிலுள்ள மக்கள் இவ்விடத்தை 'ஸிமுலியா' என்றழைக்கின்றனர்.
பார்வதிதேவியின் வார்த்தை கேட்க கௌரங்க மஹாபிரபு தனது இதயத்தில் திருப்தியும் மகிழ்ச்சியுற்றார்.பின்னர் "பார்வதியிடம் கூறினார், 'தேவியே, என்னுடைய வார்த்தைகளை கவனமுடன் கேட்பாயாக. நீ எனது சக்தி. நீ தனித்தவளோ என்னிலிருந்து வேறுபட்டவளோ அல்ல. என்னுடைய ஒரு சக்திக்கு இரு ரூபங்கள் உண்டு. ஆன்மீக இராஜ்யத்தினுள் என்னுடைய ஆதி-சக்தி ஸ்ரீ ராதா என்ற ஒரே ரூபத்தில் உள்ளது. ஆனால், பௌதிக உலகின் செயல்களை நிறைவேற்றுவதற்காக அவளின் விரிவாங்கமாக நீ இருக்கிறாய். நீ இல்லாமல் எனது லீலைகள் முழுமை பெறாது. ஏனெனில், எனது லீலைகளில் யோக-மாயையின் வடிவில் இருப்பது அவசியம். வ்ரஜ-தாமத்தில் நீ பௌர்ணமாஸீ எனும் பெயரில் நித்தியமாக வாசம் செய்கிறாய். நவ-த்வீபத்தில் ப்ரௌடா-மாயாவாக இந்த தாமத்தின் பாதுகாவலராக-சேத்ரபாலகரான சிவபெருமானுடன் நித்யமாக வாஸம் செய்கின்றாய்.' 'இவ்வாறு கூறிய கௌரங்கர், அங்கிருந்து மறைந்தார். பார்வதிதேவி அன்பு மிகுதிக்கு ஆளானாள். பார்வதிதேவி ஸீமந்த-த்வீபத்தில் ஓர் உருவத்திலும், மாயாபுரில் வேறோர் உருவத்தில் ப்ரௌடா-மாயாவாகவும் இருக்கிறாள்.
"ஒரே முறையேனும் இந்த சீமந்த த்வீபத்தினை எவரொருவர் காண்கிறாரரோ அவர் தன்னுடைய வாழ்வில் எல்லா விதமான வெற்றிகளையும் அடைந்திருப்பார். ஜடயிருப்பின் மீது இருக்கும் தனது பயத்திலிருந்தும் அவர் மிக எளிதாக விடுபடுவார். எந்தவிதமான துன்பங்கள் ஆனாலும் அல்லது இடையூறுகள் ஆனாலும் இங்கிருக்கும் பார்வதிதேவியை வழிபட்டால் அதிலிருந்து விடுபடுகின்றனர்.
( பக்தி ரத்தினாஹரா )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/udvegakathaigal
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment