பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு நாகரீகமாகிவிட்டது.
பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் நேரடியாகத் தோன்றி, மனித சமூகத்தின் நன்மைக்காக அவரது உபதேசங்களை விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரை ஒரு சாதாரண மனிதனென்று நினைக்கும் மூடர்களும், அயோக்கியர்களும், தங்களது புலன் திருப்திக்காக பகவத்கீதையின் உபதேசங்களைத் திரித்துக் கூறுகின்றனர். பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு நாகரீகமாகிவிட்டது இத்தகைய தப்பான கருத்துரைக்களால், தங்களுடைய வாழ்வை மட்டுமல்லாமல், பிறருடைய வாழ்வையும் இவர்கள் நாசமாக்கிவிடுகின்றனர். ஆனால் கிருஷ்ணர் உண்மையானவர் அல்ல, குருட்சேத்திர யுத்தமும் உண்மையல்ல மற்றும் பகவத்கீதையிலுள்ள விஷயங்களும் உண்மையல்ல என்ற இந்த எதிர் வாதத்தை கிருஷ்ணபக்தி இயக்கம் எதிர்த்து வருகிறது. விஷயம என்னவாக இருப்பினும், வாழ்வில் வெற்றிபெற விரும்புபவர், பகவத்கீதை உண்மையுருவில் என்ற நூலைப் படிப்பதால் அதை அடைய முடியும். குறிப்பாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பகவத்கீதையின் உபதேசங்களை வலியுறுத்தியுள்ளார்; யாரே தேக, தாரே கஹ, ‘கிருஷ்ண’ -உபதேச. வாழ்வில் மிகவுயர்ந்த வெற்றியை அடைய விரும்பும் ஒருவர், பகவத் கீதையை, பரமபுருஷரால் பேசப்பட்டது போலவே ஏற்றுக்கொள்ள வேண்டும். பகவத்கீதையை இவ்வாறு ஏற்றுக் கொள்வதால், மனித சமுதாயம் முழுவதும் பூரணத்துவமும், மகிழ்ச்சியும் உடையதாக மாறும்.
(ஸ்ரீமத்-பாகவதம் 10.3.45 / பொருளுரை )
Comments
Post a Comment