மோதாத்ருமத்வீபம்




 மோதாத்ருமத்வீபம்


🔆🔆🔆🔆🔆🔆

இந்த தீவு தாஸ்யம், அல்லது சேவகம் எனும் பக்தி சேவையை பிரதிபலிக்கிறது.

ஸ்ரீ விருந்தாவன தாஸ தாகூரருடைய புனித ஸ்தலம், வாசுதேவ தத்தரின் புனித ஸ்தலம், ஸ்ரீ  சாரங்க முராரியின் புனித ஸ்தலம் மற்றும் அர்க திலா ஆகிய இடங்கள் இந்த தீவில் நீங்கள் சென்று காணக்கூடிய இடங்களாகும்.

ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் தன்னுடைய நவத்வீப-பாவ -தரங்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

"பீஷ்ம-திலாவில் பீஷ்மரிடமிருந்து ஆசி பெற்ற பிறகு அழுதுகொண்டே றநான் மோதாத்ரும த்வீபத்திற்கு செல்வேன். வ்ரஜ பூமியிலிருக்கும் பாந்திராவனத்திற்கும்  மோதாத்ரும த்வீபத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை . அங்கிருக்கும் அனைத்து மிருகங்களும் பறவைகளும் உன்னதமானவையாகும். ஸ்ரீ கௌர ஹரி  மற்றும் சீதா இராமருடைய புனித நாமங்களை, இங்கிருக்கும் கிளிகள் மற்றும் பறவைகள் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கின்றன.



கருணையோடு நிழல் கொடுத்து அந்த  பகுதியையே அழகுபடுத்தி சூரியனை மறைத்திருக்கும்  பல ஆல மரங்கள் இந்த பாந்திராவனத்தில் இருக்கின்றன. மேலும் பகவான்  ஸ்ரீ பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடைய லீலைகள் என் கண்களுக்கு எப்போது புலப்படும்? இவ்வாறு உலாவிக் கொண்டே வானத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஸ்ரீ இராமச்சந்திரருடைய ஆசிரமத்தை கண்டேன். காவி உடை தரித்திருந்த பகவான் இராமச்சந்திரரின் அருகில் ஸ்ரீ லக்ஷ்மணர் மற்றும் சீதாதேவி இருப்பதை நான் காண்பேன்.

பகவானின் இந்த மிகவும்  வசீகரிக்கும் ரூபத்தைக் கண்டு நான் நந்தவனத்தில் மயக்கமடைந்து கீழே விழுவேன். அப்போது என் உடலில் பிரேமை எனும் நிலையின் அறிகுறிகள் தென்படும். என்னால் அதற்கு மேல் பேச முடியாமல் பரவசத்தில் மூழ்கியிருப்பேன். என் கண்கள் முழுமையாக திருப்தி அடையும் வரை இந்த அழகான வடிவத்தை நான் அருந்திக் கொண்டிருப்பேன். பகவான் இராமச்சந்திரரின் இளைய சகோதரனான ஸ்ரீ லட்சுமணரின் மீது கருணை கொண்டு என் அருகே வந்து தன்னுடைய தாமரை பாதத்தை என் தலைமீது வைத்திடுவார். சில பழங்களை எனக்கு கொடுத்து, "'அன்பு மகனே! இந்தப் பழங்களை உண்பாயாக. நாம் தற்போது வனத்தில் வாழ்வதால் நம்மைத் தேடி வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் உதவும் ஒரே செல்வம் இந்த பழங்களேயாகும்.' என்று கூறுவார். அந்த லீலைகள் இவ்வாறு நிறைவடைந்து அதன்பின் பகவான் அங்கிருந்து மறைந்திடுவார். பிரிவினால் அழுதுகொண்டே பழங்களை நான் உண்பேன். நவ-தூர்வா-தலா எனும் வடிவத்தை (பசும்புல்லின் பச்சை நிறம்) நான் எப்போதாவது காண்பேனா?

ஆஹா, ஆன்மீக ரத்தினங்கள் இருக்கும் நிலம் பாந்திராவனமாகும். இந்த வனத்தை விடுத்துச் செல்வதால் பிரிவுணர்சியில் நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறேன். பசுக்களை மேய்ப்பதற்கு முன்பு இந்த இடத்தில் ஸ்ரீ பலராமரும் ஸ்ரீ கிருஷ்ணரும் பல லீலைகளை புரிந்துள்ளனர். கௌர சந்திரர் அதே வனத்தில் தன் சஹாக்களுடன் சங்கீர்த்தனம் செய்யும் போது போதை அருந்தியதைப் போல பக்தி பரவசத்தில் இருந்தார்."

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇

https://t.me/suddhabhaktitamil

ஆன்மீக கதைகளை படிக்க 👇

https://t.me/udvegakathaigal

Whatsapp :-

🍁🍁🍁🍁🍁

https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR

உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more