நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி
🔆🔆🔆🔆🔆
ஸ்ரீ நவத்வீப தாம் மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் தேவபள்ளி என்ற மிகவும் சக்திவாய்ந்த இடத்தை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மற்றும் ஸ்ரீவாச தாகூரருடன் சுவர்ண விஹாருக்கு சென்றபிறகு பகவான் நித்தியானந்தர் நரசிம்மபள்ளி என்னும் கிராமத்திற்கு முன்னேறிச் சென்றார். இந்த இடத்தை நரசிம்மபள்ளி என்றும் தேவபள்ளி என்றும் அழைப்பார்கள்.
சத்ய யுக காலத்திலிருந்தே பகவான் நரசிம்மதேவருக்கென்று பிரத்தியேகமான ஒரு ஆலயம் இந்த கிராமத்தில் இருக்கிறது என்பதை பகவான் ஶ்ரீ நித்யானந்தர், விளக்கினார். தன்னுடைய பிரியமான பக்தனான பிரகலாதனின் மீது கொண்ட பெரும் கருணையால் , பிரஹலாதருக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுத்து வந்த அவனுடைய தந்தையான ஹிரண்யகசிபுவை பகவான் நரசிம்மர் வதம் செய்த பின்னர் இந்த இடத்திற்கு ஓய்வெடுக்க வருகிறார் என்பதை அறிந்த பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும் அந்த இடத்தில் தங்களுக்குத் தேவையான இல்லங்களை அமைத்து ஒரு கிராமத்தையே உருவாக்கினார். மந்தாகினி நதியில் கரையோரமாக இருக்கும் சிறு குன்றின் மீது தங்களுடைய இல்லங்களை அமைத்து பகவானின் சேவையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போதிருந்து நவத்வீப தாமத்தில் இருக்கும் நரசிம்ம ஷேத்திரம் என்று இந்த இடத்தை அழைக்கிறார்கள். இந்த இடம் உள்ளத் தூய்மைக்கு சிறந்த இடம் என்று சாஸ்திரங்கள் விவரிக்கின்றன. பிரம்மா. சூரியதேவன். கணேசன் மற்றும் இந்திரன் போன்றவர்களுடைய இல்லங்கள் சிறு சிறு குன்றுகளாக முன்பு இங்கு இருந்தது. கற்களால் நூற்றுக்கணக்கான இல்லங்களை விஷ்வகர்மா கட்டினார். காலப்போக்கில மந்தாகினி நதி வறட்சியடைந்து அங்கிருந்து அனைத்து இல்லங்களும் அழிக்கப்பட்டன தற்போது உங்களால் சிறு சிறு குன்றுகளை காண முடியும் ஆனால் அங்கு சுற்றி இருக்கும் இடத்தில் பல கற்களை அதாவது தேவர்களுக்கு உருவாக்கப்பட்ட கற்களை காண முடியும். இந்த ஆலயத்தின் அருகே இருக்கும் குளத்தில் தான் பகவான் நரசிம்மர் தன்னுடைய கைகளை கழுவிய தாக கூறப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு உயர்ந்த நபர் அல்லது அரசன் இங்கு வந்து பகவான் நரசிம்மருடைய கருணையால் இங்கே நரசிம்ம பகவானுக்கென்று ஒரு ஆலயத்தை எழுப்பி அவருடைய வழிபாடுகளை மீண்டும் துவக்குவார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/udvegakathaigal
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment