ஓர் அக்ஷௌணி என்பது, 21,870 தேர் மற்றும் யானைகளையும்,
109,350 காலாப்படை வீரர்களையும், மற்றும் 65,610 குதிரைகளையும் கொண்டதொரு படையின் அணிவகுப்பைக்
குறிக்கிறது. இதைப்பற்றிய சரியான விவரம் மகாபாரதத்தில், ஆதி பர்வத்தின் இரண்டாம் அத்தியாயத்தில்
பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
“ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்படை வீரர்கள்
மற்றும் மூன்று குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டது ஒரு பத்தி என்று கற்றறிந்த யுத்த சாஸ்திரிகளால்
அழைக்கப்படுகிறது. மூன்று பத்திகள் ஒரு சேனாமுகம் என்பதையும் அவர்கள் அறிவர். மூன்று
சேனா முகங்கள் ஒரு குல்மம் என்றும், மூன்று குல்மங்கள் ஒரு கணம் என்றும், மூன்று கணங்கள்
ஒரு வாஹினி என்றும் அழைக்கப்படுகின்றன. மூன்று வாஹினிகள் ஒரு பிருதனம் என்றும் மூன்று
பிருதனங்கள் ஒரு சமூ என்றும், மூன்று சமூக்கள் ஒரு அனீகினி என்றும் கற்றோர் குறிப்பிடுகின்றனர்.
பத்து அனீகினிகள் ஓர் அக்ஷௌணி என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இருபிறப்பு எய்தியவர்களில்
சிறந்தவரே, ஓர் அக்ஷௌணியிலுள்ள தேர்கள் 21,870 என்றும், அதிலுள்ள யானைகளும் அதே எண்ணிக்கையைக்
கொண்டவையே என்றும் போர்க்கலையை அறிந்தவர்களால் கணக்கிடப்படுகின்றன. காலாட்படை வீரர்களின்
எண்ணிக்கை 109,350 மற்றும் குதிரைகளின் எண்ணிக்கை 65,610. இவற்றைக் கொண்டது ஓர் அக்ஷௌணி
என்று அழைக்கப்படுகிறது.”
(ஸ்ரீமத்-பாகவதம் 9.15.30 / பொருளுரை )
Comments
Post a Comment