தாமேஸ்வர் மஹாபிரபு ஆலயம்
🔆🔆🔆🔆🔆
இந்த ஆலயத்தில் இருக்கும் பகவான் சைதன்ய மஹாபிரபு விக்கிரஹத்தை பகவான் சைதன்ய மஹாபிரபுவின் மனைவியான ஸ்ரீமதி விஷ்ணுபிரியா, அவர் சந்நியாசம் ஏற்ற பிறகு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பகவான் சைதன்ய மஹாபிரபுவின் இந்த விக்கிரஹத்துடைய இரு கரங்களும் அன்புடன் பக்தர்களை ஏற்றுக்கொள்ளும் விதமாக நீட்டப்பட்டு இருக்கிறது. பகவான் சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்றுக் கொண்ட போது விஷ்ணுபிரியா பதினாறு வயது உடையவராக இருந்தார். இந்த ஜடவுலகில் இருந்து தொண்ணூற்றாறு வயதில் மறைந்தார். சுமார் எண்பது ஆண்டுகள் இந்த விக்ரஹத்தை அவர் வழிபட்டுள்ளார். இந்த ஆலயத்திலிருக்கும் மரக் காலணிகள் பகவான் சைதன்யர் அனிந்ததாக கூறப்படுகிறது.
விஷ்ணுபிரியா தேவியின் மறைவிற்குப் பிறகு அவருடைய உறவினர் இந்த விக்கிரஹத்தை தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். அச்சமயம் கங்கையின் கிழக்குப் பகுதியில் அவர் வாழ்ந்து வந்தார். கங்கையின் நீரால் அவருடைய இல்லம் அடித்து செல்லப்பட்டது. கங்கையின் மேற்கு பகுதியில் இருக்கும் குலியா கிராமத்திற்கு இடம் பெயர்ந்தார். குலியா கிராமம் என்பது தற்போது நவத்வீப நகரமாக அறியப்படுகிறது. அவர்களுடைய குடும்பத்திற்கே கௌரங்க மஹாபிரபு மருமகன் ஆவார். ஆகவே இன்றளவும் இந்த விக்ரகத்தை தங்களுடைய மறு மகனாக பாவித்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/udvegakathaigal
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment