ஸ வை மண: க்ருஷ்ண - பதார விந்தயோ- னதை பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்துவதே மானிடர்களின் கடமையாகும்
யாவல் லிங்கபன்விதேோ ஹி ஆத்மா தாவத் கர்ம - நிபந்தனம்
தேதா விபர்யய: க்லே சோ மாயா - யோகோ ‘நுவர்த்ததே
மொழிபெயர்ப்பு
ஆத்மாவானவன் மனம், புத்தி, பொய், அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் மூடப்பட்டிருக்கும் வரை, அவனது கர்ம பலன்களால் அவன் பந்திக்கப்படுகிறான். இந்த மறைப்பின் காரணத்தால் ஆத்மா ஜட சக்தியுடன் சம்பந்தப்படுவதால், அதற்கேற்ப அவன் தொடர்ந்து பிறவிக்குப்பின் பிறவியாக பௌதிக சூழ்நிலைகளையும் எதிரிடையான சூழ்நிலைகளையும் அனுபவிக்க வேண்டும்.
பொருளுரை
ஜீவராசியானவன் மனம், புத்தி, பொய் அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் பந்திக்கப்படுகிறான். ஆகவே மரணத்தருவாயில் ஏற்படும் மனநிலையே அடுத்த உடலுக்குக் காரணமாகிறது. பகவத் கீதை (8.6) உறுதி செய்வதுபோல், யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜதி அந்தே கலேவரம். மரணத்தருவாயில் ஆத்மா வேறொரு வகையான உடலுக்கு மாறுவதற்கு மனமே அடிப்படைத் தத்துவமாக அமைகிறது. ஒரு ஜீவராசி தன் மனதின் உத்தரவை எதிர்த்து, மனதை பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுத்துவானாயின், அவனுடைய மனதால் அவனை இழிவு படுத்தமுடியாது. எனவே மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்துவதே மானிடர்களின் கடமையாகும் (ஸ வை மண: க்ருஷ்ண - பதார விந்தயோ:). மனம் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது புத்தி தூய்மையடைகிறது. அதன்பிறகு புத்தி பரமாத்மாவிடமிருந்து அகத் தூண்டுதலைப் பெறுகிறது (ததாமி புத்தி யோகம் தம்). இவ்விதமாக ஜீவராசி பௌதிக பந்தத்திலிருந்து முக்தியை நோக்கி முன்னேறுகிறான். தனிப்பட்ட ஜீவாத்மா கர்ம விதிகளுக்கு கட்டுப்பட்டுள்ளான். ஆனால் பரமாத்மாவோ தனிப்பட்ட ஜீவராசியின் கர்மங்களால் பாதிப்படைவதில்லை. வேத உபநிஷத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது போல, இரு பறவைகளுக்கு ஒப்பிடப்படும் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் உடலுக்குள் அமர்ந்துள்ளனர். ஜீவாத்மா உடலின் செயல்கள் என்ற பழங்களை உண்பதன் மூலம் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிக்கிறது. ஆனால் இத்தகைய பந்தத்திலிருந்து விடுப்பட்டுள்ள பரமாத்மா தனிப்பட்ட ஆத்மாவின் விருப்பங்களுக்கேற்ப அவனுடைய செயல்களுக்கு சாட்சியாக இருந்து, அதற்கு அனுமதியளிக்கிறார்.
(ஸ்ரீமத்-பாகவதம் 7.2.47 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment