ஜீவன்கள் பகவானின் நுண்ணிய அணுவைப் போன்ற அம்சங்களாக இருப்பதால், பக்தித் தொண்டானது அவர்களில் ஏற்கனவே உள்ளது, ஆனால் செயலற்ற நிலையில் உள்ளது. ஸ்ரவணம், கீர்த்தனம் (செவியுறுதல், உரைத்தல்) முதலியவற்றுடன் பக்தித் தொண்டு தொடங்குகின்றது. ஒரு மனிதன் உறங்கிக் கொண்டிருக்கையில், அவனை சப்தத்தினால் எழுப்ப முடியும்; எனவே, தூய வைஷ்ணவரால் உச்சரிக்கப்பட்ட ஹரே கிருஷ்ண மந்திரத்தினைக் கேட்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு கட்டுண்ட ஆத்மாவிற்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கேட்பவன் ஆன்மீக உணர்வு அல்லது கிருஷ்ண உணர்விற்கு எழுப்பப்படுகிறான். இவ்விதமாக ஒருவனின் மனம் படிப்படியாகத் தூய்மையடைகிறது என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார் (சேதோ-த ர்பண-மார்ஜனம்). மனம் தூய்மையடையும்போது புலன்களும் தூய்மையடைகின்றன. புலன்களைப் புலனுகர்ச்சியில் உபயோகிப்பதற்கு பதிலாக, கிருஷ்ண உணர்வை எழுப்பிய பக்தன் தனது புலன்களை பகவானின் தெய்வீக அன்புத் தொண்டில் ஈடுபடுத்துகிறான். உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ண பிரேமையை எழுப்புவதற்கு இதுவே வழிமுறையாகும்.
ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் . மத்திய லீலை 22.105 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment