சில நேரங்களில் இக்கிருஷ்ண பக்தி இயக்கம் பிற
தேவ வழிபாட்டினை விலக்கி விட்டு கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் ஏன் பரிந்துரைக்கிறது என்று
சிலர் கேட்கின்றனர். உரிய பதில்
இச்சுலோகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மரத்தில் அடிவேரில் நீர் வார்ப்பது பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் சான்று மிகவும் பொருத்தமுடையதாகும். பகவத் கீதையில்(15.1) “ஊர்த்வ மூலம் அத:
ஸாகம்” அதாவது இப்பிரபஞ்சம் கீழ்நோக்கி விரிவடைந்திருக்கிறது. அதன் வேராக
மேலேயுள்ள முழுமுதற் கடவுள் விளங்குகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.
மேலும் பகவான் பகவத் கீதையில் (10.8) உறுதி செய்கிறார்,” அஹம்
ஸர்வஸ்ய ப்ரபவ:” என்று. இதன்
பொருள் “நானே அனைத்து ஆன்மீக மற்றும் பரு உலகங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றேன்” என்பதாகும். கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆணி
வேராக இருக்கின்றார்; அதனால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வது (கிருஷ்ண ஸேவா)
என்பதற்குப் பொருள் அனைத்துத் தேவர்களுக்கும் தாமாகவே தொண்டு செய்து போன்றதாகும். சில நேரம்
கர்மம் மற்றும் ஞானத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றப் பக்தியின் கலவை
தேவைப்படுகிறது என்று விவாதம் செய்யப்படுகிறது. அதுபோல் சில நேரம்
பக்திக்கும் கூட அது இறுதியில் வெற்றி பெற கர்மமும் ஞானமும் தேவைப்படுகிறது என்றும் கூறுவர். கர்மமும், ஞானமும் பக்தியின்றி வெற்றியடைய முடியாது என்பதே உண்மை. ஆனால்
பக்திக்கு கர்மம் மற்றும் ஞானத்தில் உதவி தேவைப்படுவதில்லை. உண்மையில் ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி “அன்யாபிலாஷிதா ஸூன்யம் ஜ்ஞான கர்மாதி அநாங்ருதம்”: பக்தித் தொண்டு கர்மம் மற்றும் ஞானத்தின் தொடர்பினால் தூய்மை கெடக் கூடாது; நவீன சமுதாயம் பல்வேறு வகையான சமுதாய நலப்பணிகள் மற்றும் மனிதாபிமானச் சேவை
போன்றவற்றில் ஈடுபடுகிறது. ஆனால் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் இவற்றிற்கு நடுநாயகராக கொண்டு வரப்படாவிட்டால் இச்செயல்கள் ஒரு
நா ளும் வெற்றி பெறப்
போவதில்லை என்பதை மக்கள் அறிவதில்லை. கிருஷ்ணரை வழிபடுவதற்கும் அவரது
பாகங்களான பல்வேறு தேவர்களை வழிபடுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று ஒருவன் கேட்கலாம். இதற்கான பதிலும் இச்சுலோகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கூறிக் கொள்ள வேண்டியது வயிற்றுக்குச் சோறிடும்பொழுது “இந்திரியங்கள்” அதாவது புலன்கள் அனைத்தும் தாமாகவே திருப்தியுறுகின்றன. ஒருவன் தன்
கண்களுக்கு அல்லது காதுகளுக்குத் தனியாக உணவளிக்க முயன்றால் முடிவு பேரழிவாகும். வயிற்றுக்கு உணவிடுவதின் மூலம் நாம் மற்ற
எல்லாப் புலன்களையும் திருப்திப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு புலனுக்கும் தனித்தனியே சேவை
செய்வது செய்யத்தக்கதுமல்ல, தேவையற்றதுமாகும். இதன்
முடிவு என்னவென்றால் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதின் மூலம் (க்ருஷ்ண ஸேவயா) எல்லாம் நிறைவு பெறுகின்றன. “சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்ய 22.62) “க்ருஷ்ணே பக்தி
கைலே ஸர்வ கர்ம க்ருத
ஹய:” அதாவது ஒருவன் முழுமுதற் கடவுளான பகவானுக்குத் தொண்டு செய்யும் பொழுது எல்லாம் தாமே நிறைவடைகின்றன; என்று
உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
(ஸ்ரீமத்-பாகவதம் 4.31.14 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment