ஆதர்சபுருஷர் இராமபிரான்
(பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் ஆதர்ச குணம்)
🍁🍁🍁🍁🍁🍁🍁
ரகுகுலத்திற்கு அணிகலமாக விளங்குபவரும் சிறந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரின் குணங்கள் மற்றும் பண்புகளின் எல்லையைக் காக்கும் பகவான் ஸ்ரீராமசந்திரனுக்கு ஒப்பானவராக வேறு ஒருவர் இதுவரை பிறந்ததில்லை என்று சொல்வது மிகையாகாது. 'இராமபிரான் பூரண பிரம்மமான பரமாத்மாவே. அவர் தர்மத்தைக் காக்கவும், உலகை உய்விக்கவுமே அவதரித்தார் எனினும் நன்னடத்தை கொண்ட ஓர் ஆதர்ச மனிதராகவே எல்லோரிடமும் நடந்து கொண்டார். ஆதர்சலீலைகள் கொண்ட அவருடைய சரித்திரத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், நினைப்பதாலும் இதயத்தில் மிகவும் தூய உணர்வு அலைகள் கிளர்ந்தெழுகின்றன. மனம் களிக்கிறது. அவருடைய ஒவ்வொரு செயலும் பிறர் பின்பற்றி நடக்கத்தக்கதாக இருந்தது.
அவர் நற்குணங்களின் பெருங்கடல். படைக்கலங்களைப் பயன்படுத்தும் கலையில் அவர் உண்மை நல்லெண்ணம், தயவு,பொறுமை, மென்மை, வீரம், ஆழம், தேர்ச்சி, பராக்கிரமம், அச்சமின்மை, பணிவு, அமைதி, சகிப்புத்தன்மை, மனஅமைதி, அடக்கம், பற்றின்மை, நீதி காக்கும் தன்மை, திறமை, அன்பு, தியாகம், மரியாதை காத்தல், பிறன் மனை நோக்காப் பேராண்மை, மக்களின் மனதைக் கவரும் நடத்தை, அந்தணர்களிடம் பக்தி, தாய்-தந்தையர் மீது பக்தி, குரு பக்தி, உடன்பிறந்தோர் மீது பாசம், நல்லோரைக் காத்தல், நட்பு, அடைக்கலம் புகுந்தோரிடம் அன்பு, எளிமை, செயல்திறன்,கொடுத்த வாக்கைக் காத்தல், ஸாதுக்களைக் காத்தல், துஷ்டர்களை அழித்தல், பகையின்மை, எல்லோருக்கும் இனியவராயிருத்தல், புறங்கூறாமை, பலவும் அறிந்திருத்தல், தர்மஞானம், தர்மத்தின் வழிநடத்தல், தூய்மை முதலிய நற்குணங்கள் அனைத்துமே இராமபிரானிடம் முழுமை பெற்று விளங்கின. உலகில் இவ்வளவு மகத்தான குணங்கள் எந்த ஒரு மனிதனிடமும் ஒருங்கே காணப்படவில்லை. வால்மீகிராமாயணத்தில் பால, அயோத்யா காண்டங்களின் தொடக்கத்தில் பகவான் ஸ்ரீராமனுடைய குணங்களின் அழகிய வர்ணனை இடம் பெறுகிறது. அதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
தாய்-தந்தையர், உற்றார்-உறவினர், மனைவி-மக்கள், வேலைக்காரர், குடிமக்கள் அனைவரிடமும் அவர் எவ்விதமான, அசாதாரணமான, ஆதர்சமான நடத்தை கொண்டிருந்தார் என்று எண்ணிப்பார்த்தாலே மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அவரிடம் மக்கள் வைத்திருந்தது போன்ற அன்பை வேறு எங்கும் காண்பது அரிது. அவர் இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் அன்பும், இனிமையும் கொண்ட அவரது நடத்தையினால் உள்ளம் நெகிழாதவர் யாருமே இருந்ததில்லை.
பகவானது திருவுள்ளப்படியும், தேவர்களின் தூண்டுதலினாலும், உலக நன்மையின் பொருட்டும், இராமபிரானிடம் கைகேயி அன்பில்லாது கடுமையாக நடந்து கொண்டாள். இதிலிருந்து கைகேயிக்கு ஸ்ரீராமனிடம் அன்பில்லை என்று முடிவு செய்துவிடக் கூடாது. ஏனென்றால், இராமபிரானுக்கு எதிராகக் கைகேயியைத் தூண்டிவிட மந்தரை முயன்ற போது கைகேயியே என்ன பதில் கூறினார் பாருங்கள்:
தர்மஜ்ஞோ குணவாந் தாந்த: க்ருதஜ்ஞ: ஸத்யவாஞ்சுசி:
ராமோ ராஜஸுதோ ஜ்யேஷ்டோ யௌவராஜ்யமதோர்ஹதி
ப்ராத்ரூந் ப்ருத்யாம்ஸ்ச தீர்காயு: பித்ருவத் பாலயிஷ்யதி
ஸந்தப்யஸே: கதம் குப் ஜே ஸ்ருத்வா ராமாபிஷேசநம்
யதா வை பரதோ மாந்யஸ்ததா பூயோபி ராகவ:
கௌஸல்யாதோ திரிக்தம் சமம ஸுஸ்ரூஷதே பஹு
ராஜ்யம் யதி ஹி ராமஸ்ய பரதஸ்யாபி தத்ததா
மந்யதே ஹி யதா த்மாநம் ததா ப்ராத்ரூம்ஸ்து ராகவ:
(வால்மீகி .இராமாயணம் 2/8/14-15,18-19)
'மந்தரையே! ராமன் தர்மம் அறிந்தவன்; குணநலன்கள் உள்ளவன்; புலன்களை வென்றவன்; செய்ந்நன்றியுள்ளவன்; உண்மை பேசுபவன்; தூய்மை மிக்கவன். மேலும் மாமன்னரின் மூத்த மகன். எனவே இளவரசன் ஆவதற்கு அவனே தகுந்தவன். அவன் நெடுநாள் வாழ்ந்து உடன் பிறந்தோரையும், பணியாளர்களையும் ஒரு தந்தையைப் போல் காப்பான். அப்படியிருக்க அவன் பட்டாபிஷேகத்தைக் கேட்டு, உனக்கு ஏன் இப்படி எரிச்சல்? பரதன் எப்படி எனக்குப் பிரியமானவனோ, வேண்டியவனோ, அவ்விதமே ஏன், இன்னும் அதிகமாக ஸ்ரீராமன் எனக்குப் பிரியமானவன். அவனது அன்னை கௌஸல்யா தேவிக்கு செய்வதைவிட அதிகமாக இராமன் எனக்குப் பணிசெய்கிறான். இராமனுக்குக் கிடைத்த ராஜ்யம் பரதனுக்கே கிடைத்ததாக எண்ணிக் கொள். ஏன் என்றால் இராமன் தம்பிகளையும் தன்னைப் போலவே கருதுகிறான்' என்கிறார். எவ்வளவு உயர்ந்த வாத்ஸல்யம் (பிள்ளைப் பாசம்). ஸ்ரீராமன் மீது கைகேயிக்குத் தான் எவ்வளவு அன்பு! எவ்வளவு நம்பிக்கை! இதிலிருந்தே கைகேயி செய்த கொடுஞ்செயல் அவருடைய இயற்கைக் குணத்தின் காரணத்தால் நடந்ததன்று; பகவானுடைய விருப்பத்தினால் நடந்தது என்பது தெளிவாகிறது.
தொடரும் . . . .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/udvegakathaigal
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment