தாயிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)




தாயிடம் பக்தி


🍁🍁🍁🍁


இராமபிரானுக்குத் தம்முடைய தாயிடம் இருந்த பக்தி சிறந்த ஆதர்சனமானது, (பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது). அதை முழுவதும் விவரிப்பது என்பது இயலாது. எனவே இங்கே சுருக்கமாக மட்டுமே எழுதப்படுகிறது.


அன்னை கைகேயி தம்மிடம் தயையில்லாமல் நடந்துகொண்ட போதிலும், அவரிடத்தில் ஸ்ரீராமன் நடந்து கொண்ட விதம் எப்போதுமே பக்தியும். மரியாதையும் நிரம்பியதாக இருந்தது. அன்னை கௌசல்யாவின் அரண்மனையிலிருந்து திரும்பி வருகின்றபோது அவர் லக்ஷ்மணனிடம், பின்வருமாறு சொல்கிறார்;


யஸ்யா மதபிஷேகார்தே மாநஸம் பரிதப்யதே

மாதா ந: ஸா யதா ந ஸ்யாத் ஸவிங்கா ததா குரு 

தஸ்யா: ஸங்காமயம் துகம் முஹூர்தமபி நோத்ஸஹே

 மநஸி ப்ரதிஸஞ்ஜாதம் ஸௌமித்ரேக்ஷஹமுபேக்ஷிதும்

ந புத்தி பூர்வம் நாபுத்தம் ஸ்மராமீஹ கதாசந

மாத்ரூணாம் வா பிதுர்வாஹம் க்ருதமல்பம் சவிப்ரியம்


(வால்மீகி இராமாயணம் 2/22/6-8)


"லக்ஷ்மணா! என்னுடைய முடிசூடுதலின் காரணமாக யாருடைய மனம் கொதிக்கின்றதோ, அந்த என் தாய்க்கு என் மேல் ஒரு சந்தேகமும் ஏற்படாதபடி நீ நடந்து கொள். சந்தேகத்தின் காரணமாக அவர் உள்ளத்தில் எழுகின்ற துக்கத்தை நான் ஒரு முகூர்த்தம் கூடத் தாளமுடியாது. நான் அறிந்தோ அறியாமலோ, தாய்மார்களுக்கோ, தந்தைக்கோ, சிறிதும் ப்ரியமில்லாத காரியத்தை ஒருபோதும் செய்ததாக எனக்கு நினைவில்லை." என்று கூறினார்.




இராமபிரான் தாயார் மீது கொண்டிருந்த பக்திக்கு இதைத்தவிர வேறு பல எடுத்துக் காட்டுக்களும் கிடைக்கின்றன. பரதன் சித்திரகூடத்திலிருந்து திரும்பும்போது இராமபிரான் பரதனிடம், "தம்பி பரதா! நீ அரசை அடையவேண்டும் என்ற விருப்பத்தாலோ அல்லது ராஜ்யத்தின் மேல் உள்ள ஆசையாலோ, உன் தாய் கைகேயி செய்துள்ளதை மனதில் வைத்துக் கொள்ளாதே! வணங்குதற்குரிய ஒரு தாயாரிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைப்படியே அவரிடம் நடந்துகொள்' என்றார்.


அப்பொழுது அவர் சத்ருக்னனிடம், 'என் மீதும், சீதையின் மீதும் நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். தாய் கைகேயியிடம் நீ ஒரு பொழுதும் கோபித்துக்கொள்ளாதே. எப்பொழுதும் அவருக்குப் பணியாற்றிக்கொண்டிரு'. என்றாலும் காட்டில் இருக்கும்போது ஒருமுறை லக்ஷ்மணன் கைகேயியை நிந்தித்தார். அப்பொழுதும் இராமபிரான் 'தம்பீ, தாய் கைகேயியை நீ நிந்திக்கக்கூடாது' என்றே கூறினார். இதிலிருந்து மற்ற தாய்மார்களிடம் இராமபிரானுக்கு எவ்வளவு மதிப்பும், பக்தியும் இருந்தது என்பது தெளிவாகிறது. 



அவர் காட்டிற்குப் போகும் போது தசரதனுடைய மற்ற ராணிகள் 


க்ருத்யேஷ்வசோதி த: பித்ரா ஸர்வஸ்யாந்த:புரஸ்ய ச 

கதிஸ்ச ஸரணம் சாஸீத் ஸ ராமோத்,ய ப்ரவத்ஸ்யதி 

கௌஸல்யாயாம் யதா யுக்தோ ஜநந்யாம் வர்ததே ஸதா 

ததைவ வர்ததேஸ்மாஸு ஜந்மப்ரப் ருதி ராகவ:


(வால்மீகி இராமாயணம் 2/20/2-3)


'நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றித் தந்தை எதுவும் கூறாதிருந்தபோதும் அந்தப்புரம் முழுவதற்கும் கதியாகவும், ஆதரவாகவும் இருந்த அந்த ராமனே இன்று காட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். அவன் தன்னுடைய தாயான கோசலையிடம் எவ்வளவு கொண்டானோ, கவனமாக நடந்து அதேபோல் எங்கள் அனைவரிடமும் நடந்துகொண்டான்' என்று சொல்லிப் புலம்பி அழுதனர். ஸ்ரீராமன் தாயிடம் கொண்ட பக்திக்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு என்ன இருக்கமுடியும்?


தொடரும் . . . 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more