ஸ்ரீராமன் கடைப்பிடித்த ஏகபத்தினி விரதமும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஜானகி தேவியைத் தவிர வேறு ஒரு மங்கையை மணக்க இராமபிரான் ஒரு போதும் கனவில் கூட நினைத்ததில்லை. சீதாதேவியை வனவாஸத்திற்கு அனுப்பிய பிறகு, வேள்வி செய்ய மனைவி அருகில் இருக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டபோதுகூட சீதா தேவியைப்போல் பொன்னாலான ஒரு உருவை அமைக்கச் செய்து வேள்வியைச் செய்து முடித்தார். அவர் விரும்பியிருந்தால் அந்தச் சமயத்திலாவது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் உலகத்தில் அவருக்கு இழிசொல் எதுவும் ஏற்பட்டிருக்காது. ஆனால், பகவான் ஸ்ரீராமன் சிறந்த நடத்தைக்கு இலக்கணமாகவும், மாமனிதராகவும் திகழ்ந்தார். பதிவ்ரதா தர்மம் (கற்புநெறி) பெண்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதுபோல், ஆண்களுக்கும் ஒரு மனைவிக்கொள்கை மிகவும் அவசியம் என்பதைத் தாமே கடைப்பிடித்து உலகிற்குக் காட்டவேண்டி யிருந்தது. ஆண் - பெண் உறவு வெறும் இன்பம் துய்ப்பதற்காக அமைந்தது அன்று. ஆனால், அறவழிப்படி இருவரும் நடப்பதற்காக ஏற்பட்டது அது.
அன்னை சீதையை அரக்கன் கவர்ந்து சென்றபின், விவரிக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து சீதாதேவியின் மீது பகவான் ஸ்ரீராமனுக்கு எவ்வளவு அன்பு இருந்திருக்கிறது என்பதன் குறிப்பு ஸ்ரீமத் ராமாயணத்தில் கிடைக்கிறது. ஸ்ரீராமன் தைரியமானவர், பொறுமையுள்ளவர், மாபெரும் வீரர், அப்படி இருந்தும் அச்சமயத்தில் அவர் பிரிவாற்றாமையால், பித்துப்பிடித்த ஒரு சாதாரண மனிதனைப்போலவும்; விலங்குகள், பறவைகள், மரம் செடி, கொடிகள், மலைகள் ஆகியவற்றிடம் ஸீதையைப் பற்றிக் கேட்டுக்கொண்டும் பலவிதமாக அழுது புலம்பிக் கொண்டே காடுகளில் அலைந்தார். சில இடங்களில் துயரம் தாளாமல் நிலை குலைந்து மயக்கமடைந்து கீழே விழுந்தார். 'ஏ சீதே, ஏ சீதே’ என்று கூவினார். அந்தக் கட்டங்களின் வர்ணனை மிகவும் உருக்கம் நிறைந்தது. இதயத்தைப் பிளக்கவல்லதாக இருக்கிறது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/udvegakathaigal
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment