புத் என்ற நரகத்தில் தந்தை தண்டனை பெறுவதிலிருந்து
மகன் அவரை விடுவிக்கிறான். இதனால் அவன் புத்திரன் என்று அழைக்கப்படுகிறான். இந்த நியதியின்படி,
தாய்க்கும் தந்தைக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்படும் பொழுது, புத்திரனானவன் தன்
தந்தையைத் தான் விடுதலை செய்கிறானேயொழிய தாயை அல்ல. இவ்வாறாக வேத இலக்கியத்தில் விவாகரத்து
என்பதே கிடையாது. ஒரு மனைவி தன் கணவனிடம் எப்பொழுதும் விசுவாசமும், பதிபக்தியும் கொண்டிருக்கும்படி
பயிற்சி அளிக்கப்படுகிறாள். ஏனெனில், எந்த ஒரு வெறுக்கத்தக்க பௌதிக சூழ்நிலையிலிருந்தும்
விடுதலையடைய இது அவளுக்கு உதவியாக இருக்கும். புத்ரோ நயதி நரதேவ யம-க்ஷயாத் என்று இச்சுலோகம்
தெளிவாகக் கூறுவது போல், “புத்திரன் யமராஜனின் காவலிலிருந்து தன் தந்தையைக் காப்பாற்றுகிறான்”.
அது, புத்ரோ நயதி மாதரம், “புத்திரன் தன் தாயைக் காப்பாற்றுகிறான்” என்று ஒருபோதும்
கூறவில்லை. வித்தளிக்கும் தந்தைதான் விடுவிக்கப்படுகிறார். கிடங்கின் அதிகாரியான தாய்
அல்ல. ஆகவே கணவனும் மனைவியும் எந்த சூழ்நிலையிலும் பிரியக்கூடாது. ஏனெனில், ஒரு வைஷ்ணவனாக
தங்களுடைய புத்திரனை அவர்கள் வளர்த்து வருவார்களானால், அத்தகைய ஒரு மகனால் தன் பெற்றோர்களை,
யமராஜனின் காவலிலிருந்தும், நரக வாழ்வில் தண்டிக்கப்படுவதிலிருந்தும் காப்பாற்ற முடியும்.
(ஸ்ரீமத்-பாகவதம் 9.20.22 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment