மனிதர்கள் அறியாமையால் செய்யும் செயல்கள், அவனை பல்வேறு வகையான உடல்களை ஏற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துகின்றது
எல்லாப் பக்கங்களிலும் தன்னைச் சுற்றி ஆபத்து சூழ்ந்திருந்த போதிலும் அதனை அறியாது அம்மான் ஓர் அழகிய
நந்தவனத்தில் புல்லை மேய்ந்த கொண்டிருந்தது. மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் குடும்பவாழ்க்கையின்
நடுவில் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தான் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நந்தவனத்தில் தும்பிகளின் இனிய ஒசையினைக் கேட்டுக் கொண்டு வாழ்வது, குடும்பத்திற்கு எழில்சேர்க்கும் மனைவியுடன் ஒவ்வொருவரும் வாழ்வது போன்றதாகும. தும்பிகளின் இனிய இசை குழந்தைகளின் மழலைமொழியோடு ஒப்பிடக் கூடியது. மானைப் போன்ற மனிதன் தன் முன்னே காலம்
என்னும் புவி தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதை அறியாமல் இல்லற
வாழ்வில் மகிழ்ந்து கொண்டிருக்கிறான். உயிர்ப்பொருள்கள் செய்யும் செயல்கள் மற்றொருவகையான ஆபத்தினை உருவாக்கி அவனைப் பல்வேறு வகையான உடல்களை ஏற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துகின்றது. பாலை வனத்தில் ஒன்றல்ல. சிற்றின்பத்திலும் மானுக்குத் தீராத
மோகமுண்டு. இதன் முடிவு என்னவென்றால் மானைப் போல் வாழ்பவன் உரிய காலத்தில் கொல்லப்படுவான். அதனால்தான் வேத இலக்கியங்கள் நாம் நமது உண்மை
நிலையினைப் புரிந்து கொண்டு மரணம்
வருவதற்கு முன்பக்தித் தொண்டில் ஈடுபட
வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.
பாகவதத்தில் (11.9.29) இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:
பல்வேறு பிறவிகளுக்குப் பிறகே
நாம் மனிதர்களாகப் பிறந்திருக்கின்றோம்;
ஆதலினால் மரணம் வருமுன்னர் பகவானின் அன்புத் தொண்டில் நாம்
நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதுவே மனித வாழ்வின் நிறைவாகும்.
(ஸ்ரீமத்-பாகவதம் 4.29.53 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment