(ஞானினஸ் தத்வ-தர்சின: தத்துவதர்சிகளால் எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் படிக்க வேண்டும்.
அறிஞரென்ற பட்டம் பெற்றிருப்பதால், கல்வியில்
முன்னேறியிருப்பதாக காட்டிக் கொள்ளும் நவீன இராட்சஸர்கள், பகவான் ராமச்சந்திரர் பரமபுருஷரல்ல
என்றும், அவர் ஒரு சாதாரண மனிதர்தான் என்றும் நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால் கற்றுணர்ந்தவர்களும்,
ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்களும் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்;
பகவான் ராமச்சந்திரரையும், அவரது செயல்களையும், பரமசத்தியத்தை அறிந்த தத்துவ தரிசிகளால்
அளிக்கப்படும் விளக்கங்களுக்கேற்ப மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பகவத்கீதையில்
(4.34) பகவான் கூறுகிறார்:
“ஆன்மீக குருவை அடைந்து உண்மையை அறிய முயற்சிசெய்.
அவருக்குத் தொண்டு செய்து, அவரிடம் அடக்கமாக கேள்வி கேள். தன்னுணர்வு பெற்ற ஆத்மாவான
அவர் உண்மையைக் கண்டவராதலால், அவரால் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” ஒருவர் பரம
சத்தியத்தைப் பூரணமாக அறிந்த ஒரு தத்துவ தரிசியாக இருந்தால் தான் அவரால் பரமபுருஷரைப்
பற்றிய செயல்களை விவரிக்க இயலும். எனவே பல இராமாயண உரைகள் இருந்த போதிலும், அவற்றில்
சில அதிகாரப்பூர்வமானவை அல்ல. சிலசமயங்களில் பகவான் ராமச்சந்திரரின் செயல்கள் ஒருவரது
சொந்த மனக் கற்பனைகளுடனும், பௌதிக உணர்ச்சிகளுடனும் விவரிக்கப்படுகின்றன. ஆனால் பகவான்
ராமச்சந்திரரின் சிறப்பியல்புகளை வெறும் கற்பனையாக எண்ணி கையாளக் கூடாது. பகவான் ராமச்சந்திரரின்
நட வடிக்கைகளைப் பற்றி நீர் முன்பே கேட்டிருக்கிறீர்” என்று சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து
மகாராஜனிடம் கூறினார். எனவே, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் பல இராமாயணங்கள் இருந்ததாகத்
தெரிகிறது. இன்றும் உள்ளன. ஆனால் தத்துவதர்சிகளால் (ஞானினஸ் தத்வ-தர்சின:) எழுதப்பட்ட
நூல்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெயரளவேயான அறிஞர் பட்டம் பெற்றுள்ளவர்களின்
நூல்களை அல்ல. இதைத்தான் சுகதேவ கோஸ்வாமி எச்சரிக்கிறார்.
(ஸ்ரீமத்-பாகவதம் 9.10.3 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment