ஒருவனது முன்வினைப் பயனுக்கேற்ப அடுத்து அவனுக்கு எந்தவுடலைக் கொடுக்கலாம் என்பதை யமராஜனே தீர்மானிக்கிறார்
யமராஜனும் அவரது தூதர்களும் ஓர் உயிரினை நியாயத் தீர்ப்பிற்கு அழைத்துச் செல்லும் பொழுது, உயிர், உயிர்க் காற்று, மற்றும் ஆசைகள் என்னும் அவனது துணைவர்களும் அவனுடன் செல்கின்றனர். இது வேதங்களிலம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஓர் உயிர் எடுத்துச் செல்லப்படும் பொழுதோ அல்லது யமராஜனால் (தம் உத்க்ராமந்தம்) கைது செய்யப்படும்பொழுதோ உயிர்க்காற்றும் அவனுடன் சேர்ந்தே செல்கிறது (ப்ராணோ (அ)னுத்க்ரமதி). இவ்வாறு உயிர்க்காற்று செல்லும் பொழுது (ப்ராணம் அனுத்க்ராமந்தம்) அனைத்துப் புலன்களும் (ஸர்வே ப்ராணா:) அதனுடன் சேர்ந்து செல்கின்றன. (அனுத்க்ராமந்தி). உயிரும், உயிர்க் காற்றும் செல்லும் பொழுது நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்னும் ஐம்பூதங்களினால் செய்யப்பட்ட விஷயம் புறக்கணிக்கப்ப்டடு, பின் தள்ளப்படுகிறது. பின்னர் அவன் யமராஜானின் நீதிஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே அவன் எந்த உடலைப் பெறப்போகிறான் என்பதை யமராஜன் தீர்மானிக்கிறார். இம்முறை நவீன விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு உயிரும் இம்மையில் தான் செய்யும் செயலுக்கு அவனே யமராஜனின் நீதி ஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவன் அடுத்துப் பெறப்போகும் உடல் என்னவென்று தீர்மானிக்கப்படுகிறது. பூதவுடல் நீங்கியபோதிலும், உயிரும், அவனது ஆசைகளும், அவனது முந்தைய வினைப் பயன்களும் தொடர்ந்து வருகின்றன. ஒருவனது முன்வினைப் பயனுக்கேற்ப அடுத்து அவனுக்கு எந்தவுடலைக் கொடுக்கலாம் என்பதை யமராஜனே தீர்மானிக்கிறார்.
(ஸ்ரீமத்-பாகவதம் 4.28.23 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment