யஸ் த்வ இஹ வை பூதானாம் ஈஸ்வரோபகல்பித வ்ருத்தினாம் அவிவிக்த - பரவ்யதானாம் ஸ்வயம் புருஷோபகல்பித - வ்ருதத்தில் லிலிக் பர - வ்யதோ - வ்யதாம் ஆசரதி ஸ பரத்ராந்தகூபே தத் - அபி ராஹேண நிபததி தத்ர ஹாஸௌ தைர் ஜந்துபி பஸு - ம்ருக - பக்ஷி - ஸரீஸ்ருபைர் மஸக யூகா மத்குண மக்ஷிகாதிபிர் யே கே சாபித்ருக்தாஸ் தை: ஸர்வதோ (அ) பித்ருஹ்யமாணஸ் தமஸி விஹத - நித்ரா நிர்வ்ருதிர் அலப்தாவஸ்தான: பரிக்ராமதி யதா ருஸரீரே ஜீவ:
பரம புருஷ பகவானின் ஏற்பாட்டின் பேரிலேயே இழிந்த உயிர்களான மூட்டைப் பூச்சிகளும், கொசுக்களும் மனிதன் மற்றும் விலங்கின் இரத்தத்தினை உறிஞ்சி வாழ்கின்றன. இவ்விழிந்த பூச்சிகளுக்குத் தாம் மனிதனைக் கடிப்பதினால் அவன் வேதனை அடைகிறான் என்பது தெரியாது. ஆயினும் முதல்தர மனிதர்களான அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அறிவு வளர்ச்சி பெற்றவர்கள் அதனால் கொல்லப்படுவது எத்துணை துன்பமானது என்பதை அவர்கள் நன்கறிவர். பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் எந்தவித பேதமுற்ற இழிந்த ஜந்துக்களைக் கொன்றாலோ அல்லது துன்புறுத்தினாலோ அவன் நிச்சயம் பாவம் செய்தவனேயாவான். பரமபுருஷ பகவான் அவனை அந்த கூபம் என்னும் நரகத்தில் தள்ளுவதின்மூலம் தண்டிக்கிறார். அங்கே அவன், அவனால் முன்பு துன்புறுத்தப்பட்ட பறவைகள், ஈக்கள் போன்றவற்றினால் தாக்கப்படுகிறான். அவை அவனை எல்லா பக்கங்களிலும் தாக்கி அவன் நித்திரை சுகத்தினைத் திருடிக் கொள்கின்றன. ஒய்வில்லாத காரணத்தினால் அவன் இருளில் தொடர்ந்து இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறு அந்த கூபத்தில் அவன் அனுபவிக்கும் துன்பமானது இழிந்த பூச்சிகள் அனுபவிக்கும் துன்பம் போன்றதாகும்.
பொருளுரை
இச்சுலோகத்தின் உபதேசத்திலிருந்து மனிதர்களைத் துன்புறுத்துவதற்காக ஜட இயற்கையினால் படைக்கப்பட்ட இழிந்த விலங்குகள் தண்டனைக்கு ஆளாவதில்லை என்று நாம் பாடம் கற்கிறோம். மனிதன் உணர்ச்சியில் வளர்ச்சி பெற்றிருப்பதினால் கண்டனத்திற்காளாகாது வர்ணா ஸ்ரம தர்மங்களுக்கு எதிராக அவனால் எதும் செய்ய முடியாது. பகவத்கீதையில்(4.13) கிருஷ்ணர், “சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ” அதாவது ஜட இயற்கையின் முக்குணங்களுக்கேற்பவும், செய்கைகளுக்கேற்பவும் என்னால் நான்கு மனித குலங்கள் படைக்கப்பட்டன” என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு எல்லா மனிதர்களும் அந்தணர், சத்திரியர், வைசியர் சூத்திரர் என்று நான்காகப் பிரிக்கப்படவேண்டும். மேலும் அவர்கள் அவர்களுக்குரிய ஒழுங்கு முறைகளுக்கேற்ப செயல்படவும் வேண்டும். அவர்களால் அவர்களது குறிப்பிட்ட ஒழுங்கு முறைவிதிகளிலிருந்து மாறிச் செல்ல முடியாது. இவற்றில் ஒன்று, மனிதர்களைத் துன்புறுத்திய போதிலும், அவ்விலங்குகளுக்கு ஒருவன் தீமை செய்யக் கூடாது என்பதாகும். ஒரு புலி ஒரு மிருகத்தைத் தாக்கிக் கொன்று தின்றாலும் அது பாவமாகாது, ஆனால் பகுத்தறிவுடைய ஒரு மனிதன் இதனைச் செய்தால் அவன் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவான். இதனையே ஒரு மனிதன் தனது வளர்ச்சி பெற்ற அறிவினை பயன்படுத்தாது மிருகத்தைப் போல் நடந்து கொண்டால் நிச்சயம் அவன் பல்வேறு நரகங்களில் துன்புற வேண்டியதிருக்கும் என்றும் கூறலாம்.
(ஸ்ரீமத்-பாகவதம் 5.26.17 / பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment