தந்தையிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)

 


தந்தையிடம் பக்தி


🍁🍁🍁🍁🍁


பகவான் ஶ்ரீ ராமர் தனது தந்தையிடம் கொண்டிருந்த பக்தியும் மிகமிக அற்புதமானது. தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதில் ஸ்ரீராமரது மனத்தில் எவ்வளவு உற்சாகமும், துணிவும், திடமான உறுதியும் இருந்தது என்ற விஷயம் வால்மீகி ராமாயணத்தைப் படிப்பவர்களுக்குப் புலப்படாமல் போகாது! தாயான கைகேயியிடம் ஸ்ரீராமன் சொல்வதை வால்மீகி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். 



அஹம் ஹி வசநாத்  ராஜ்ஞ: பதேயமபி பாவகே 

பக்ஷயேயம் விஷம் தீஷ்ணம் பதேயமபி சார்ணவே |


(வால்மீகி இராமாயணம் 2/18/28-29)


ந ஹ்யதோ தர்மசரணம் கிஞ்சித ஸ்தி மஹத்தரம்

யதா பிதரி ஸுஸ்ரூஷா தஸ்ய வா வசநக்ரியா


(வால்மீகி இராமாயணம் 2/19/22)


'மன்னர் சொன்னால் நான் நெருப்பில் குதிப்பேன். கொடிய நஞ்சையும் உண்பேன். கடலிலும் விழுவேன். ஏனென்றால் தந்தைக்குப் பணிவிடை செய்வதையும், அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதையும் விடப் பெரிய தர்மம் உலகில் வேறு ஒன்றுமில்லை' என மொழிகிறார்.


அங்கே இதேபோன்ற மொழிகள் பல காணப்படுகின்றன. பிறகு அன்னை கௌசல்யா தேவியிடம் அவர்


நாஸ்தி பக்தி: பிதுர்வாக்யம் ஸமதிக்ரமிதும் மம 

ப்ரஸாதயே த்வாம் ஸிரஸா கந்துமிச்சாம்யஹம் வநம்


(வால்மீகி இராமாயணம் 2/21/30)


'உங்கள் திருவடிகளில் வணங்கி உங்களை மகிழ்ச்சியுடன் இருக்கும்படி நான் வேண்டிக் கொள்கிறேன். தந்தையின் சொல்லைத் தட்டுவதற்கு என்னிடம் சக்தி இல்லை. எனவே நான் வனம் செல்லவே விரும்புகிறேன்' என்றே சொல்கிறார்.


இதைத் தவிர லக்ஷ்மணன், பரதன் மற்றும் ரிஷி முனிவர்களுடன் உரையாடும்போதும் பித்ரு - பக்தியைப் பற்றி இராமபிரான் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.வால்மீகி முனிவர், இராமபிரானது இளமைப் பருவத்தைப் பற்றிச் சுருக்கமாக வர்ணிக்கும்போதுகூட, தந்தைக்கு சேவை செய்வதிலேயே இராமபிரான் எப்போதும் ஈடுபட்டிருந்தார் என்று கூறுகிறார்.



தொடரும் . . . 



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more