முன்பு மனிதர்களால் செய்யப்பட்ட எல்லாச் செயல்களும் விஷ்ணுவுடன் சம்பந்தப்பட்டிருந்தன. ஆனால் சத்திய யுகத்திற்குப் பிறகு, வைஷ்ணவர்களுக்கிடையில் அவமரியாதையான நடவடிக்கைகளின் அறிகுறிகள் காணப்பட்டன. மற்றவர்கள் வைஷ்ணவர்களாக மாறுவதற்கு எவன் உதவுகிறனோ, அவனே ஒரு வைஷ்ணவன் என்று ஸ்ரீல பக்தி வினோத தாகுரர் கூறியுள்ளார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ளதற்குச் சிறந்த உதாரணம் நாரத முனிவராவார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ள சக்திவாய்ந்த ஒரு வைஷ்ணவர் வழிபடத் தகுந்தவராவார். ஆனால் பௌதிக களங்கத்தின் காரணத்தால், சிலசமயங்களில் இத்தகைய மேலான வைஷ்ணவர்கள் மற்ற சாதாரண வைஷ்ணவர்களால் அவமதிக்கப்படுகின்றனர். இந்த களங்கத்தைக் கண்ட சிறந்த முனிவர்கள் ஆலயத்தில் விக்கிரக வழிபாட்டை அறிமுகப்படுத்தினர். இது திரேதா யுகத்தில் துவங்கப்பட்டது என்றாலும், குறிப்பாக துவாப யுகத்தில் இது மேலோங்கி இருந்தது. “த்வாபரே பரிசர்யாயாம்”. ஆனால் கலியுகத்தில் விக்கிரக வழிபாடு அலட்சியம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நடைமுறைக்கேற்ற ஓர் உதாரணத்தை அமைத்துக் காட்டியுள்ளார். அதாவது அவர் ஆலயங்களையோ, விக்கிரகங்களையோ ஸ்தாபிப்பதற்குப் பதிலாக, மிகப் பெரிய சங்கீர்த்தன இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். ஆகவே கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்பவர்கள், குறிப்பாக உன்னத இலக்கியங்களை அதிகமாக விநியோகிப்பதன் மூலமாக, சங்கீர்த்தன இயக்கத்தை அதிகமாக வலியுறுத்த வேண்டும். இது சங்கீர்த்தன இயக்கத்திற்கு உதவியாக இருக்கும். விக்கிரக வழிபாட்டிற்குச் சாத்தியம் ஏற்படும் பொழுது பல ஆலயங்களை நாம் நிறுவலாம். ஆனால் பொதுவாக நாம் உன்னத இலக்கியங்களை விநியோகிப்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் மக்களைக் கிருஷ்ண உணர்வு உள்ளவர்களாக மாற்றுவதற்கு இது அதிக பயனுள்ளதாக இருக்கும்.
ஶ்ரீமத் பாகவதம் 7.14.39 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment