பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்

 



பரமபுருஷராகிய நரசிம்மதேவர் எப்படி பிரகலாத மகாராஜனை மகிழ்வித்த பின் மறைந்தருளினார் என்பதைப் பற்றியும், சிவபெருமானால் அருளப்பட்ட ஒரு வரத்தைப் பற்றியும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.


பகவான் நரசிம்மதேவர் ஒன்றன்பின் ஒன்றாக பிரகலராத மகாராஜனுக்கு வரங்களை அருள விரும்பினார். ஆனால் அவற்றை ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடைகளாக எண்ணிய பிரகலாதர் அவற்றில் ஒன்றைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவர் பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவன் சொந்த புலன் நுகர்வுக்காக பகவானிடம் பிரார்த்திப்பானாயின், அவனைத் தூய பக்தன் என்று அல்லது பக்தன் என்றுகூட அழைக்க முடியாது. கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியாகவே அவன் அழைக்கப்படுவான். அது போலவே, தன் சேவகனிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொண்ட பின் அவனை திருப்திப்படுத்த விரும்பும் எஜமானரும் உண்மையான எஜமானரல்ல” என்று கூறினார். எனவே பிரகலாதர் பகவானிடமிருந்து எதையும் யாசிக்கவில்லை. மாறாக, பகவான் தனக்கு வரமருள விரும்பினால், பௌதிக வரங்களுக்கு தான் மயங்கிவிடாதிருக்கும் வரத்தை அருளும்படி பகவானிடம் அவர் வேண்டினார். பக்தித்தொண்டிற்குப் பதிலாக சிற்றின்ப சுகங்களை வேண்டுவது எப்பொழுதும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சிற்றின்ப ஆசைகள் தலை தூக்கிய உடனேயே ஒருவனது மனம், வாழ்வு, ஆத்மா, சமயக் கோட்பாடுகள், பொறுமை, புத்தி, வெட்கம், அழகு, பலம், ஞாபகசக்தி, உண்மை ஆகிய அனைத்தும் வெற்றி கொள்ளப்படுகின்றன. மனதில் பௌதிக ஆசைகள் இல்லாதிருக்கும் பொழுதுதான் ஒருவனால் தூய பக்தித் தொண்டைச் செய்ய முடியும்.


பரமபுருஷர் பிரகலாதரின் தூய பக்தியைக் கண்டு அவரிடம் மிகவும் திருப்தியடைந்தார். இருப்பினும், பிரகலாதர் இவ்வுலகில் பூரண மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, அடுத்த பிறவியில் வைகுண்டத்தில் வாழ்வார் என்ற வரத்தை பகவான் அருளினார். பிரகலாதர் மனவந்தர யுகத்தின் முடிவுவரை இந்த ஜட உலகில் அரசராக இருப்பார் என்ற வரத்தையும். அவர் ஜட உலகில் இருந்தபோதிலும், பகவானுக்குத் தூய பக்தி யோகத்தைச் செய்துகொண்டு, பகவானுடைய மகிமைகளைக் கேட்கும் வசதிகளைப் பெற்று, பகவானையே முற்றிலும் சார்ந்திருப்பார் என்ற வரத்தையும் பெற்றார். பக்தி யோகத்தின் மூலமாக யக்ஞங்கள் செய்யும் படி பகவான் பிரகலாதருக்கு அறிவுரை கூறினார். ஏனெனில், இது தான் ஓர் அரசரின் கடமையாகும்.

பகவானால் அருளப்பட்டதையெல்லாம் ஏற்றுக் கொண்ட பிரகலாதர் தன் தந்தைக்கு நல்ல கதியை அருளும்படி வேண்டினார். பகவானும் பிரகலாதரின் இந்த பிரார்த்தனைக்கு மறுமொழியாக, பிரகலாதரைப் போன்ற ஒரு தூய பக்தரின் குடும்பத்தில், அந்த பக்தரின் தந்தை மட்டுமின்றி, இருபத்தொரு தலைமுறைகளைச் சேர்ந்த அவரது முன்னோர்களும் முக்தியடைவார்கள் என்று உறுதியளித்தார். மேலும் பிரகலாதர் மரணமடைந்த தன் தந்தையின் அந்திம கிரியைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பகவான் கேட்டுக் கொண்டார்.


பிறகு அங்கிருந்த பிரம்மதேவர், பிரகலாதருக்கு வரங்களைக் கொடுத்ததற்காக பகவானுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறி, பலவிதமாக பகவானைத் துதித்தார். இரண்யகசிபுவிற்குக் கொடுத்தது போன்ற வரத்தை இனிமேல் வேறெந்த அசுரனுக்கும் கொடுக்க வேண்டாம் என்று பகவான் பிரம்மதேவருக்கு அறிவுரை கூறினார். ஏனெனில் அத்தகைய வரங்கள் அவர்களை இஷ்டப்படி செயற்படத் தூண்டும். பிறகு பகவான் நரசிம்மதேவர் மறைந்தருளினார். அன்றை தினமே பிரகலாத மகாராஜன் உலக சிம்மாசனத்தில் பிரம்மதேவராலும், சுக்ராசாரியராலும் அமர்த்தப்பட்டார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,

ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more