பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே மிகவுயர்ந்த
வெற்றியைச் சுலபமாக ஒருவனால் அடைந்துவிட முடியும் என்பதால், பல வேதக் கிரியைகள் இருப்பதும்
அவற்றால் மக்கள் கவரப்படுவதும் ஏன் என்று ஒருவர் கேட்கக்கூடும். பகவத்கீதை (15.15) பின்வருமாறு கூறுகிறது, வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ
வேத்ய: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை அணுகுவதே வேதக் கல்வியின் உண்மையான
நோக்கமாகும். துரதிர்ஷ்டவசமாக, வேத யக்ஞங்களின் பகட்டில் மதிமயங்கியுள்ள அறிவிலிகள்,
ஆடம்பரமாக யாகங்கள் செய்யப்படுவதைக் காண விரும்புகின்றனர். வேத மந்திரங்கள் ஓதப்படுவதையும்,
இத்தகைய சடங்குகளுக்கு ஏராளமான பொருள் செலவிடப்படுவதையும் இவர்கள் விரும்புகின்றனர்.
சில சமயங்களில் இத்தகைய புத்தியற்ற மனிதர்களை திருப்திப்படுத்துவதற்காக நாம் வேதக்
கிரியைகளை அணுஷ்டிக்க வேண்டியுள்ளது. பிருந்தாவனத்தில், பெரிய கிருஷ்ண பலராமர் ஆலயம்
ஒன்றை சமீபகாலத்தில் நாம் நிறுவினோம். அப்பொழுது உள்ளூர் பிராமணர்களால் நடத்தப்பட்ட
வேதக் கிரியைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டது. ஏனெனில் பிருந்தாவன வாசிகள்,
குறிப்பாக ஸ்மார்த்த - பிராமணர்கள் ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் உண்மையான,
தகுதியுடைய பிராமணர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்விதமாக நாம் அதிகமாகச் செலவாகும்
யக்ஞங்களைச் செய்ய பிராமணர்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது. ஒருபுறம் இந்த யக்ஞங்கள்
நடந்து கொண்டிருக்க, மறுபுறம் என இயக்கத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள், மிருதங்களுடன்
உரக்க சங்கீர்த்தனத்தைச் செய்து கொண்டிருந்தனர். வேதக் கிரியைகளை விட சங்கீர்த்தனம்
அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாம் கருதுகிறோம். ஒரே சமயத்தில் கிரியைகளும்,
சங்கீர்த்தனமும் நடந்தன. கிரியைகள், சுவர்க்க லோகங்களுக்கு ஏற்றம் பெற, வேதச் சடங்குகளில்
நாட்டம் கொண்டவர்களுக்கு உரியவையாகும் (ஜடீ - க்ருத - மதிர் மது - புஷ்பிதாயாம்). ஆனால்
சங்கீர்த்தனமோ, பரமபுருஷரை திருப்திப்படுத்துவதில் நாட்டம் ோண்டுள்ள தூய பக்தர்களுக்கு
உரியவையாகும். சங்கீர்த்தனத்தை மட்டும் நாம் செய்திருப்போம். ஆனால் பிருந்தாவன வாசிகள்
இந்த பிராணப் பிரிதஷ்டைச் சடங்கை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இங்கு விளக்கப்பட்டுள்ளது
போல், வேதச் சடங்குகள், வேதங்களின் மலர்ச் சொற்களால் புத்தி மழுங்கிப் போனவர்களுக்கு
உரியவையாகும்.
குறிப்பாக இக்கலியுகத்தில், சங்கிர்த்தனம் ஒன்றே
போதுமானதாகும். உலகின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள நமது ஆலயங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள்,
ஆலயத்திலுள்ள விக்கிரகங்களின் முன், குறிப்பாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் முன் சங்கீர்த்தனத்தைத்
தொடர்ந்து செய்வார்களானால், அவர்கள் எப்பொழுதும் பூரணமானவர்களாகவே இருப்பார்கள். வேறெதையும்
செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆயினும், பழக்கங்களையும், மனதையும் பரிசுத்தமாக வைத்துக்
கொள்வதற்கு விக்கிரக வழிபாடும், மற்ற கட்டுப்பாட்டு விதிகளும் தேவைப்படுகின்றன. ஸ்ரீல
ஜீவ கோஸ்வாமி கூறுகிறார்: பூரணத்துவம் அடைவதற்குச் சங்கீர்த்தனம் ஒன்றே போதும் என்றாலும்,
பக்தர்கள் பரிசுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பதற்கு விக்கிரக வழிபாடும் (அர்ச்சனா)
தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே ஒரே சமயத்தில் இவ்விரு முறைகளையும் ஒருவன்
பின்பற்ற வேண்டும் என்று ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுரர் சிபாரிசு செய்துள்ளார்.
விக்கிரக வழிபாடு, சங்கீர்த்தனம் ஆகிய இரண்டையும் செய்வதெனும் அவரது கொள்கையை நாம்
உறுதியாகப் பின்பற்ற வேண்டும். இதை நாம் தொடரவேண்டும்.
ஶ்ரீமத் பாகவதம் 6.3.25 - பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment