தொடக்கத்தில், பரிசுத்த உணர்வு
நிலை அல்லது
கிருஷ்ணர் பற்றிய
தூய உணர்வு
எனும் நிலையிலிருந்து முதல்
மாசு தோன்றியது. இது பொய் அகங்காரம் அல்லது
உடலைத் தானாக
எண்ணிக்கொள்ளுதல் ஆகிய தவறு என்று
அழைக்கப்படும். உயிரினம் கிருஷ்ணர் பற்றிய உணர்வின் இயல்பான நிலையில் உள்ளது. ஆனால் உயிர்களுக்கு அளவோடு
கூடிய சுதந்திரமும் உள்ளது. இது தான் கிருஷ்ண
உணர்வினை மறக்கச்
செய்கிறது. அதாவது உண்மையில், தூய கிருஷ்ணர் பற்றிய உணர்வு
இருக்கிறது; ஆனால் அளவோடு கூடிய
சுதந்திரத்தைத் தவறாகப்
பயன்படுத்துவதால், கிருஷ்ணரை மறக்கும் வாய்ப்பும் உள்ளது. இது உண்மையான வாழ்வில் காட்டப்படுகிறது; கிருஷ்ணர் பற்றிய உணர்வில் உள்ள சிலர்
திடீரென்று மாறுவது
போன்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன. அதனால், ஆன்மீக உணர்தலுக்கான வழி கூர்மையான முனையினை உடைய
கக்தி போன்றது
என்று உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்
சான்று மிகச்
சரியானது. ஒருவர் தன் கன்னங்களைக் கூர்மையான கத்தி கொண்டு
மிகவும் நன்றாக
மழிக்கிறார். ஆனால் அவருடைய கவனம்
அந்தச் செயலிலிருந்து திசை
திருப்பப்பட்ட உடன்,
அவர் அந்தக்
கத்தியைத் தவறாகக்
கையாளுவதால், தன் கன்னத்தை தானே வெட்டிக் கொள்கிறார்.
ஒருவர் தூய கிருஷ்ண உணர்வு
நிலைக்கு வந்தால்
மட்டும் போதாது. அவர் மிகவும்
கவனமுடனும் இருக்க
வேண்டும். எந்தக் கவனமின்மையும் அல்லது
எச்சரிக்கை இன்மையும் கீழே விழக்
காரணம் ஆகலாம். இது பொய் அகங்காரதால் ஏற்படுவதாகும். தூய உணர்வு நிலையிலிருந்து, சுதந்திரத்தைத் தவறாகப்
பயன்படுத்துவதால், பொய் அகங்காரம் பிறக்கிறது. தூய உணர்வு நிலையிலிருந்து பொய் அகங்காரம் ஏன் தோன்றுகிறது என்று
நாம் வாதிட
முடியாது. உண்மையில், இப்படி
நடக்கக்கூடிய வாய்ப்பு எப்போதும் இருப்பதால், ஒருவர்
மிகவும் கவனமாக
இருக்க வேண்டும். ஜட இயற்கையின் போக்கில் செயல்படுத்தப்படும் பொய் அகங்காரம் எல்லா
ஜட செயல்களுக்கான அடிப்படைத் தத்துவமாகும். ஒருவர் தூய கிருஷ்ண உணர்விலிருந்து விலகிய
பின்னர் மண்ணுலகில் அவரது பிடிப்பு அதிகரிக்கிறது. உலகியல் வாதத்தில் சிக்கிக் கொள்வதால் லோகாயத உணர்வும், அதையொட்டிப் புலன்
உணர்வுகளும் பொறிகளும் வெளிப்படுகின்றன.
ஶ்ரீமத் பாகவதம் 3.26.24 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment