மொழிபெயர்ப்பு
அதன் பிறகு, விஷ்ணுவின் அங்கங்களின் மீது ஒவ்வொன்றாக, முழு உடலைப் பற்றிய கருத்திலிருந்து விலகி விடாமல் நீர் தியானிக்க வேண்டும். இவ்வாறாக, அனைத்துப் புலன் பொருட்களிலிருந்தும் மனம் விடுபடுகிறது. வேறெதைப் பற்றியும், நினைக்கக் கூடாது. பரம
புருஷ பகவானாகிய
விஷ்ணுவே பரம சத்தியமாக இருப்பதால், அவரில் மட்டுமே மனதால் பூரணமாக ஒத்துப்போக முடியும்.
விஷ்ணுவின் புறச் சக்தியால் தடுமாற்றத்திற்கு உள்ளாகும் மூடர்கள்,
இன்பத்தைத் தேடி அலைவதன் இறுதி இலட்சியம் முழு முதற்கடவுளாகிய ஸ்ரீ விஷ்ணுவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதுதான் என்பதை அறிவதில்லை. விஷ்ணு-தத்துவம் எனப்படுவது முழுமுதற்
கடவுளின் எண்ணிலடங்காத உன்னத உருவங்களின் விரிவங்கங்களாகும். மேலும் விஷ்ணு-தத்துவத்தின் மூல உருவமாக இருப்பவர் எல்லாக் காரணங்களுக்கும் பரம காரணமான கோவிந்தன்
அல்லது ஸ்ரீகிருஷ்ணராவார். எனவே, விஷ்ணுவைப் பற்றி எண்ணுவது அல்லது விஷ்ணுவின் உன்னத உடலை தியானிப்பது, குறிப்பாக
ஸ்ரீ கிருஷ்ணரைத் தியானிப்பதே தியானம் எனும் விஷயத்தில் கடைசிச் சொல்லாகும். இத் தியானத்தை பகவானின் முழு உருவத்திலிருந்து ஒருவன் விலகிச் செல்லவோ அல்லது அதை மறந்துவிடவோ கூடாது; இப்படியாக, அவரது உன்னத உடலின் வெவ்வேறு பகுதிகளை ஒவ்வொன்றாக ஒருவன் நினைக்கப் பழக வேண்டும். இப்பதத்தில், பரமபுருஷர் அருவமானவரல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஒருநபராவார். ஆனால் அவரது உடல் நம்மைப் போன்ற பந்தப்பட்ட நபர்களின் உடலாலாருந்து வேறானதாகும். இல்லாயெனில், “பிரணவ” (ஓங்கார) மந்திரத்திலிருந்து துவங்கி, விஷ்ணுவின் சரீரத்திலுள்ள அங்கங்கள் வரை தொடரும் தியானத்தை, முழுமையான ஆன்மீக பக்குவத்தை அடைவதற்காக சுகதேவ கோஸ்வாமி சிபார்சு செய்திருக்க மாட்டார். எனவே, இந்தியாவின் பெரும் ஆலயங்களிலுள்ள விஷ்ணு மூர்த்திகளின் வழிபாடு, குறைந்த அறிவுள்ள ஒரு பிரிவினரால் தப்பான அர்த்தம் கற்பிக்கப்படுவதைப் போல், வெறும் சிலை வழிபாட்டுக்குரிய ஏற்பாடுகள் அல்ல; மாறாக, அவை விஷ்ணுவின் தேகத்திலுள்ள உன்னத அங்கங்களை தியானிப்பதற்காக உள்ள வெவ்வேறு ஆன்மீகக் கேந்திரங்கள் ஆகும். பகவானின் அற்புத சக்தியினால், விஷ்ணு ஆலயத்திலுள்ள வழிபாட்டுக்குரிய விக்கிரகத்துக்கும், பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கும் வேறுபாடு இல்லை. எனவே, பெரும் அதிகாரியாகிய சுகதேவ கோஸ்வாமி இங்கு சிபார்சு செய்துள்ளதைப் போல், நிலையாக ஓரிடத்தில் அமர்ந்து, பிரணவ ஓம்காரத்தின் மீதோ அல்லது விஷ்ணுவின் உடல் அங்கங்களின் மீதோ மனதை ஒருமுனைப்படுத்த இயலாதவர்களுக்கு, ஆலயத்திலுள்ள விஷ்ணுவின் அங்கங்களின் மீது மேற்கொள்ளும் மன ஒருமை அல்லது தியானம், ஓர் எளிய வாய்ப்பாகும். ஏற்கனவே விளக்கப்பட்டதைப் போல, அ-உ-ம் எனப்படும் ஆன்மீக சேர்க்கையாகிய ஓங்காரத்தின் மீது தியானத்தைச் செலுத்துவதை விட, ஆலயத்திலுள்ள விஷ்ணுவின் ரூபங்களின் மீது மனதை ஒருமுனைப் படுத்துவதால் அதிக நன்மையை சாதாரண மனிதன் அடைய முடியும். ஓங்காரத்துக்கும், விஷ்ணு ரூபங்களுக்கும் வேறுபாடு இல்லை. ஆனால் பரிபூரண மெய்ப்பொருளைப் பற்றிய விஞ்ஞானத்தில் பழக்கம் இல்லாதவர்கள், விஷ்ணு ரூபங்களுக்கும், ஓங்காரத்துக்கும் இடையில் வேறுபாட்டைக் காண்பதன் மூலமாக சச்சரவை உண்டாக்குகின்றனர். விஷ்ணு ரூபமே தியானத்தின் இறுதியான இலட்சியம் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. மேலும் இக்காரணத்தினால், உருவமற்ற ஓங்காரத்தின் மீது மனதை ஒருமுனைப்படுத்துவதை விட விஷ்ணுவின் உருவங்களின் மீது மன ஒருமை மேற்கொள்வது சிறந்ததாகும். அதோடு ஓங்கார தியானம், விஷ்ணு ரூப தியானத்தை விட அதிக கஷ்டமானதாகும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment