மனதைக் கொன்று விடக்கூடாது. மனத்தை அல்லது ஆசையை நிறுத்தவும் முடியாது. ஆனால் ஆன்மீகத் தன்னுணர்வை இலக்காகக் கொண்டே ஓர் ஆசையை விருத்தி செய்து கொள்வதற்காக, மன ஈடுபாட்டின் தரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். சுறுசுறுப்பான புலன் இயக்கங்களுக்கு மனமே ஆதாரமாக இருக்கின்றது. இதனால் எண்ணம், உணர்ச்சி மற்றும் இச்சை ஆகியவற்றின் தரத்தை மாற்றினால், புலன்களால் இயற்றப்படும் செயல்களின் தரமும் தானாகவே மாறிவிடும்
ஶ்ரீமத் பாகவதம் 2.1.17 / பொருளுரை
பரம புருஷரின் உன்னதமான நாமம், உருவம், இயல்புகள் மற்றும் திருவிளையாடல்கள் போன்றவைகளை தற்போதைய ஜடப் புலன்களால் அறிவது சாத்தயமல்ல என்பதால், இத்தகைய தெய்வீகத் தன்னுணர்வை, புலன் இயக்கங்களுக்கு மையமாக உள்ள மனதின் மூலமாக செயற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஶ்ரீமத் பாகவதம் 2.1.17 / பொருளுரை
படிப்படியாக, மனம் ஆன்மீக முன்னேற்றம் அடைய அடைய, புலன் நுகர்விலிருந்து அதைப் பின்னுக்கு இழுத்துக்கொள்ள வேண்டும். பிறகு புத்தியால் புலன்கள் அடக்கப்பட்டுவிடும். ஜடச் செயல்களில் அளவுக்கதிகமாக ஆழ்ந்துள்ள மனதை முழுமுதற் கடவுளின் தொண்டில் ஈடுபடுத்தி, உன்னத உணர்வில் முழுமையாக அதை நிலைக்கச் செய்ய வேண்டும்.
ஶ்ரீமத் பாகவதம் 2.1.18
புலன் நுகர்வைப் பற்றி எண்ணுவதை மனம் இப்போதை நிறுத்திவிட்டாலும், உள்ளுணர்வு நிலையிலுள்ள கடந்தகால புலன் நுகர்வுச் செயல்களை அது நினைவுபடுத்திக் கொண்டு, தன்னுணர்வில் பூரணமாக ஒருவன் ஈடுபடுவதற்கு இடைஞ்சலாகி விடுகிறது
ஶ்ரீமத் பாகவதம் 2.1.18 / பொருளுரை
மனதை ஆன்மீகமாக தூய்மை செய்த பின், கேட்டல், பாடுதல் போன்ற வெவ்வேறு பக்தித் தொண்டுகளின் மூலமாக பகவானின் உன்னத அன்புத் தொண்டில் தன்னை ஒருவன் உடனே ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குழம்பிய மனதுடையவராக இருப்பினும், சரியான வழிகாட்டலின் கீழ் செயலாற்றினால், இதுவே முன்னேற்றத்திற்குரிய உறுதியான வழியாகும்.
ஶ்ரீமத் பாகவதம் 2.1.18 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment