புண்ணியச் செயல்களை திருநாம கீர்த்தனத்துடன் ஒருபோதும் ஒப்பிட கூடாது.
கோடி அஷ்வமேத ஏக க்ரிஷ்ண நாம ஸம
ஜேஇ கஹ ஸே பாஷண்டீ தண்டே தாரே ஜம
வேத இலக்கியங்கள் கூறுவது யாதெனில்.
கோ கோடி தானம் க்ரஹணே ககஸ்ய
ப்ரயாக கங்கோ தக கல்ப வாஸ:
யஜ்ஞாயுதம் மேரு ஸுவர்ண தானம்
கோவிந்த கீர்தேர் ந ஸமம்'ஷதாம்ஷை
"ஒருவன் சூரிய கிரகணத்தின் போது ஒரு கோடி பசுக்களை தானமளித்தாலும்,பல கோடி ஆண்டுகள் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில். வாழ்ந்தாலும் தங்க மலையிணை பிராமணர்களுக்கு தானமளித்தாலும் அவன் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தால் அடையப்படும் பலனில் நூற்றில் ஒரு பங்குகூட அடைவதில்லை..
வேறுவிதமாக கூறினால் ஹரே கிருஷ்ண உச்சாடனத்தினை ஏதோவொரு புண்ணிய. செயலாக ஏற்பவன் நிச்சயமாக முற்றிலும் தவறாக வழிநடதப்பட்டுள்ளான். ஹரே கிருஷ்ண கீர்த்தனை என்பது நிச்சயமாக ஒரு புண்ணிய செயலே.ஆயினும் உண்மை என்னவென்றால் கிருஷ்ணரும் அவரது திருநாமும் தெய்வீகமானவையாக இருப்பதால் எல்லா பௌதீக புண்ணிய செயல்களைக் காட்டிலும். அவை மிக மிக உயர்ந்தவை.புண்ணிய செயல்கள் பௌதீக தலத்தில் செய்ய படுகின்றன. ஆனால் கிருஷ்ணரின் திருநாம கீர்த்தனமானது. முற்றிலும் ஆன்மீக தளத்தில் செய்யப்படுகிறது. எனவே பாஷாண்டிகள் இவற்றை புரிந்து கொள்ளாவிடினும் புண்ணியச் செயல்களை திருநாம கீர்த்தனத்துடன் ஒருபோதும் ஒப்பிட கூடாது.
சைதன்ய சரித்தாமிருதம் ஆதிலீலை 3.79
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment