ஸமாஷ்ரிதா யே பத-ப்லவம்
பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம்
பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம்
"முக்தியை அளிப்பவரும், முகுந்தன் என்னும் பெயர் பெற்றவரும், பிரபஞ்சத் தோற்றத்தின் அடைக்கலமுமான பகவானின் பாத கமலங்கள் என்னும் படகை ஏற்றுக் கொண்டவனுக்கு, பௌதிக உலகம் என்னும் பெருங்கடல், கன்றின் குளம்பில் தேங்கிய நீரைப் போன்றதாகும். அவனது நோக்கம் பௌதிக துன்பங்களற்ற வைகுண்டமே (பரமபதமே) —ஒவ்வொரு அடியிலும் அபாயம் இருக்கக்கூடிய இடமல்ல." ( ஶ்ரீமத் பாகவதம் (10.14.58) )
இவ்வுலகம், ஒவ்வொரு அடியிலும் அபாயங்கள் நிறைந்த துன்பகரமான இடம் என்பதை அறியாமையினால் ஒருவன் அறிவதில்லை. அதன் காரணத்தினாலேயே, சிற்றறிவுடையோர், செயல்களின் பலன்கள் தங்களை மகிழ்விக்கும் எனக் கருதி பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையை சரி செய்ய முயற்சி செய்கின்றனர். முழு பிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பௌதிக உடலும் துயரற்ற வாழ்வைத் தர இயலாது என்பதை அவர்கள் அறிவதில்லை. வாழ்வின் துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை , நோய் ஆகியவை பௌதிக உலகம் முழுவதும் உள்ளன. ஆனால் பகவானது நித்தியத் தொண்டன் எனும் தனது உண்மையான ஸ்வரூபத்தையும் பகவானுடைய உன்னத நிலையும் அறிந்தவன், அவரது திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபடுகின்றான். இதன் மூலம், வைகுண்ட லோகங்களுக்குச் செல்லத் தகுதியுடையவனாகிறான். அங்கே துன்பமயமான பௌதிக வாழ்க்கையோ, காலம் மற்றும் மரணத்தின் தாக்கமோ இல்லை. தனது ஸ்வரூப நிலையை உணர்வது என்றால் பகவானுடைய தன்னிகரற்ற உயர் நிலையையும் கடவுளின் நிலையும் ஒன்றே என்று தவறாக நினைப்பவன், இருளில் இருப்பதாக அறியப்பட வேண்டும். இதனால் அவன் பக்தித் தொண்டில் ஈடுபட முடியாது. தன்னையே எஜமானனாக நினைக்கும் அவன், பிறப்பு இறப்பின் தொடர்ச்சிக்கு வழிவகுத்துக் கொள்கிறான். ஆனால், தனது நிலை 'தொண்டு புரிவது' என்பதை உணர்பவன், இறைத் தொண்டிற்குத் தன் வாழ்வை மாற்றிக் கொள்வதன் மூலம், உடனேயே வைகுண்ட லோகத்திற்குச் செல்லத் தகுதி பெறுகிறான். இறைவனுக்காக தொண்டாற்றுவதே கர்ம யோகம், அல்லது புத்தி யோகம், அல்லது எளிமையாகச் சொன்னால் பக்தித் தொண்டு என்று அழைக்கப்படுகிறது.
(பொருளுரை / பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் இரண்டு / பதம் 51)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment