யார் அந்தணர்கள் ?



பகவான் எப்பொழுதும் அந்தணர்களிடத்தும், பசுக்களினிடத்தும் மிகுந்த கருணையுடையவராக இருக்கிறார். ஆகையினாலேயே கோ ப்ராஹ்மண ஹிதாய ச என்று சொல்லப்பட்டிருக்கிறது. பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவான முழுமுதற் கடவுள் அந்தணர்களினால் வழிபடப்படும் தெய்வம் ஆவார். வேத இலக்கியங்களில் குறிப்பாக ரிக் வேதத்தின் மந்திரங்கள் உண்மையான அந்தணர்கள் எப்பொழுதும் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளையே நோக்குகின்றனர் என்று கூறுகின்றன; ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் முழுமுதற் கடவுளின் விஷ்ணு வடிவத்தினையே அதாவது கிருஷ்ணர், ராமர் மற்றும் விஷ்ணு அம்சங்களையே வழிபடுகின்றனர். அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஒரு அந்தணனின் செயல்கள் வைணவர்களுக்கு எதிரானதாக இருந்ததென்றால் அவன் அந்தணனாகக் கருதப்படமாட்டான். ஏனென்றால் அந்தணன் என்றால் வைணவன் என்றும் வைணவன் என்றால் அந்தணன் என்றே பொருளாகும். பகவானுக்குப் பக்தனான ஒருவனும் அந்தணனே ஆவான். ப்ரஹ்ம ஜானாதி ப்ராஹ்மண: என்பது சூத்திரம். பிரம்மத்தை உணர்ந்தவன் அந்தணன் (பிராம்மணன்) ஆவான். அதுபோல் முழுமுதற் கடவுளை உணர்ந்தவன் வைணவன் ஆகிறான். பிரம்மத்தை உணர்வதென்பது முழுமுதற் கடவுளை உணர்வது என்பதின் ஆரம்பமேயாகும். முழுமுதற் கடவுளை உணர்ந்த ஒருவன் முழுமுதற் கடவுளின் அருவத்தன்மையான பிரம்மத்தையும் கூட உணர்ந்தவனே ஆகிறான். ஆகையினால் வைணவன் என்பவன் ஓர் அந்தணன்தான். இங்கு குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இந்த அத்தியாயத்தில் அந்தணர்களைப் பற்றித் தாமே பகவான் பாராட்டிப் பேசும் வார்த்தைகள் எல்லாம் அவருடைய பக்தர்களான அந்தணர்கள் அல்லது வைணவர்களையேக் குறிப்பிடுவதாகும். இதனை, அந்தணர் குடும்பங்களில் பிறந்து அதற்கான தகுதிகள் சிறிதும் இல்லாதிருந்தும் தம்மை பெயரால் அந்தணர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களைக் குறிப்பிடுவதாக யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.


ஶ்ரீமத் பாகவதம் 3.16.4 - பொருளுரை



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇



https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more