கீழ்கண்ட லீலைகள் ஶ்ரீ ராஜாபூர் ஜகந்நாதரின் கோயிலை இஸ்கான் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற பிறகு நடந்தது.
பாழடைந்த நிலையில் இருந்த ராஜாபூர் ஜகந்நாதரின் கோவிலை நன்றாக பராமரிக்கவும் ஜகந்நாதரின் நித்திய பூஜைகள், நைவேத்தியம் போன்றவைகள் தடையின்றி நடைபெற ஜகந்நாதரின் கட்டளை பேரில் இஸ்கான் அமைப்பிற்கு கோவில் உரிமையாளர் தர தீர்மானித்தார்.
இஸ்கான் அமைப்பு பாதுக்காக்கும் பொறுப்பேற்ற சமயம் ராஜாபூர் கோவிலில் சமையல் செய்வதற்கு ஏற்ற இடவசதி இல்லாமல் இருந்ததாகையால், இஸ்கான் அமைப்பின் மற்றொரு கோவில்லான ஸ்ரீ மாயாபூர் ராதா மாதவரின் சந்த்ரோதய மந்திரில் அதிகமாக சமைத்து பின்னர், ஒரு பூஜாரி அதனை ஒரு உணவு பாத்திரத்தில் வைத்து கொண்டு மிதிவண்டியில் ஜகந்நாதர் கோயிலுக்கு எடுத்து வருவார். ஒரு நாள் நைவேத்தியத்திற்கான உணவு வகைகளை (ராஜ போக்) தயார் செய்த பிறகு, தான் துளசி இலையை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தார். அப்போது ராஜாபூர் ஜகந்நாதரின் கோவில் மிகவும் பழையதாகவும் சிதைந்த நிலையில் இருந்தமையால். கதவுகளை சரியாக மூட முடியாது. அவர் யோசிக்க ஆரம்பிதார் "நான் சென்று துளசி எடுத்து வருவதற்குள் சில குழந்தைகள் உள்ளே வந்து விடுவார்கள், இல்லையெனில் நாய்கள் உள்ளே வந்துவிடும்." என்று குழம்பிப்போனார்.
ஆனால் பகவானின் நைவேத்தியம் நேரம் நெருங்கி விட்டதால் அவர் ஜகந்நாதரிடம் கூறினார் "எனது பகவானே! பிரபு ஜகந்நாதா ! பக்தர்களை காக்கும் பிரியமான பகவானே ! நீங்கள் துளசி இலை இல்லாத உணவு பதார்த்தங்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர் என்பதை நான் அறிவேன், ஆனால் சூழ்நிலையை புரிந்து கொண்டு, தயவு செய்து இதனை எற்றுக் கொள்ளவும்" என்றார். இவ்வாறாக அவர் பகவான் ஜகன்னாதருக்கு உணவை படைத்துவிட்டு, காயத்ரி மந்திரம் கூற சென்றார். தீபாராதனைங்கு நேரம் வந்ததும், கதவை திறந்து, பிரசாதத்தட்டுகளை எடுக்க செல்லும் பொழுது, பத்து அங்குலம் உயரமுள்ள துளசி இலை உள்ள கிளை, சாதத்தின் நடுவில் இருந்ததை கண்டு பூஜாரி ஆச்சரியத்தில் மூழ்கினார்.
கருணாமூர்த்தியான பிரபு ஜகந்நாதரின் லீலையில் பூரித்த பூஜாரி, ஜகந்நாத ஸ்வாமி கி ஜெய்!! துளசி மஹாராணி கி ஜெய்!! என கூறினார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment