பாகவத உபன்யாசகர் ஒருவர் தமது உபன்யாசத்தில், பகவான் கிருஷ்ணர் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு காட்டில் மாடுகளை மேய்க்கச் செல்வதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அந்த உபன்யாசத்தில் ஒரு திருடனும் இருந்தான். உபன்யாசத்தைக் கேட்ட அவன். 'நான் ஏன் விருந்தாவனக் காட்டிற்கு சென்று கிருஷ்ணரிடமுள்ள நகைகளைக் கொள்ளையடிக்கக் கூடாது?' என்று யோசிக்கலானான். அவன் இதைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தான். ''கிருஷ்ணரைக் கண்டு அவர் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடித்தால், ஒரே நாளில் நான் கோடீஸ்வரனாகி விடுவேன்" என்று தீவிரமாக சிந்திக்கலானான்.
கிருஷ்ணரைக் காண வேண்டும் என்ற உணர்வு திருடனிடம் இருந்தது. அதுவே அவனது தகுதி. அவனது அந்த ஆர்வமிகுதியுடன் விருந்தாவனத்திற்குச் செல்ல. அங்கே அவன் பகவான் கிருஷ்ணரை நேரில் கண்டான். பாகவத உபன்யாசகர் விவரித்த விதத்திலேயே அவன் கிருஷ்ணரைக் கண்டான். அப்போது, அவன் கிருஷ்ணருக்கு அருகில் சென்று. ''கிருஷ்ணா! நீ மிகவும் நல்ல பையன். செல்வந்த குடும்பத்தைச் சார்ந்தவன், நான் உனது நகைகளைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளட்டுமா?" என்று கூறினான்.
கிருஷ்ணர். "இல்லை, இல்லை. என் அம்மா கோபம் கொள்வாள்! ஆகையால், என்னால் தர இயலாது." என்றார். இவ்வாறாக, கிருஷ்ணர் ஒரு குழந்தையைப் போல லீலை செய்தார். கிருஷ்ணரின் குழந்தைத்தனத்தினால் கவரப்பட்ட அவனுக்கு கிருஷ்ணரின் மீதான ஆர்வம் மேன்மேலும் வளரத்துவங்கியது. இறுதியில், கிருஷ்ணர் நகைகளை எடுத்துக்கொள்ள அவனை அனுமதித்தார். ஆயினும். அச்சமயத்தில் அவன் கிருஷ்ணரது சங்கத்தினால் தூய்மை அடைந்திருந்தான். அதனால் அவன் உடனடியாக பக்தனாக மாறினான். இவ்வாறாக. எவ்வகையிலாவது நாம் கிருஷ்ணரின் சங்கத்தைப் பெற்றால் நாமும் தூய்மை பெறுவோம்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment