பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகாலய மன்னருக்கு கீழ் படைத்தளபதி பொறுப்பு வகித்தவர் 'லால்பேகா'. இவர் ஜெகன்னாதரின் பக்தை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் தந்தைக்கும் சநாதன தர்மத்தை சார்ந்த ஜெகந்நாதரின் பக்தைக்கும் பிறந்தவர் தான் சாலபேகா.
லால்பேகாவை போன்று, சாலபேகாவும் மிகச் சிறந்த போர் வீரராகத் திகழ்ந்தார். தன் தந்தைக்கு பின், சலபேகா போர் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு சாதனைகள் பல படைத்தார்.
ஒருசமயம் நடந்த போரில், எதிரிகளின் கடுமையான தாக்குதல்களால் படுகாயம் அடைந்தார் சாலபேகா. எத்தனையோ மருந்துகள் அளித்தும் பயனளிக்கவில்லை. வேதனையால் மிகவும் துடித்தார் சாலபேகா. அப்போது அவரது தாயார், ஜெகன்னாதரை வழிபடுமாறு அறிவுரை கூறினார். தாயின் அறிவுரையை ஏற்ற சால பேகா, ஜெகன்னாதரின் திருநாமங்களை உச்சரித்து மனம் உருகி வழி பட்டார்.
ஆச்சர்யப்படத் தக்க வகையில் சாலபேகா அன்றிரவே, ஜெகன்னாதரின் அருளால் பூரண குணம் அடைந்தார்.
ஜெகன்னாதரை தரிசிக்க முதல் முயற்சி
🌷🌷🌷🌷🌷🌷
உடல் நலம் பெற்ற உடனேயே சாலபேகா, ஜெகன்னாதரை தரிசித்து நன்றி செலுத்த வேண்டும் என்று, ஜெகன்னாதர் கோயிலுக்கு விரைந்து சென்றார். ஜெகன்னாத் புரி கோயிலில் இந்துக்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவர் என்பது வழக்கம் என்பதால், சாலபேகா, கோயில் கோபுரங்களை தரிசித்து ,கோயில் வாசல் முன்பாக நின்று, ஜெகன்னாதரின் திருநாமங்களை உச்சரித்து தன் மனதைத் தேற்றிக் கொண்டார்.
விருந்தாவனத்தில் சாலபேகா.
🌷🌷🌷🌷🌷🌷🌷
அதன்பிறகு பக்தர்கள் சிலரின் அறிவுரையின் படி, ஜெகன்னாதரை கிருஷ்ணராக மிக அருகில் பார்க்க முடியும் என்று கிருஷ்ணரின் தெய்வீக லீலைகள் நடந்த புண்ணிய ஸ்தலமான விருந்தாவனத்திற்கு சென்றார். அங்கே பல சாதுக்களின் மத்தியில் கிருஷ் ணரின் நாமங்களை உச்சரித்தும், கிருஷ்ண லீலைகளை கேட்டும் கிருஷ்ணரை பக்தியுடன் வழிபட்டு வந்தார். இப்படி ஏறக்குறைய பன்னிரெண்டு மாதங்கள் சென்றிருக்கும்.
ஜெகன்னாத் புரியில், ஜெகன்னாதர் ரதயாத்திரை நடக்கிறது என்று கேள்விபட்டார். இதன் முக்கிய விசேஷம், ஜெகன்னாதரை எல்லோரும் தரிசிக்கலாம் என்பதே. அதாவது ஜெகன்னாதர் தனது இருப்பிடத்திலிருந்து வெளியே வந்து ரதத்தில் ஏறி எல்லா மக்களுக்கும் கருணை வழங்கும் பொருட்டு இப்படி ரதவலம் வருகிறார் என்று அறிய நேரிட்டார். சாலபேகா.
ஜெகன்னாதரை தரிசிக்க இரண்டாம் முறை செல்லுதல்
,🌷🌷🌷🌷🌷🌷
எனவே, மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர், உடனே விருந்தாவனத்தை விட்டுக் கிளம்பினார், தனது பிரியமிகு ஜெகன்னாதரை நேருக்கு நேர் தரிசிக்க! மனமெல்லாம் ஜெகன்னாதரின் நினைவுகள் நிறைய, தன்னை படுகாயத்தில் இருந்து எப்படி ஜெகன்னாதர் விடுவித்தார் என்பதை எண்ணி எண்ணி பக்தி மேலிட்டார்.
இதே நினைவில் அவரது கண்களும், கால்களும் ஜெகன்னாத்புரியை நோக்கி விரைந்து நடந்தன. சாலபேகா, இன்னும் சில நாட்களில் நான் ஜெகன்னாதரை காணப் போகிறேன், கருணா மூர்த்தியான என் ஜெகன்னாதரை காணப் போகிறேன், பரிதவிப்பவர்களின் நண்பரான ஜெகன்னாதரை தரிசிக்கப் போகிறேன் என்று ஆர்வத்துடன் விரைந்து கொண்டிருந்தார் ஜெகன்னாத் புரியை நோக்கி நாட்கள் பல சென்றன. பசி, தூக்கம், இரவு, பகல் பாராது நடந்து கொண்டிருந்தார். ஜெகன்னாத் புரியை அடைய இன்னும் சில நாட்களே இருந்தன. வேகத்தை விரைவுபடுத்தினார் சாலபேகா.
ஆனால் திடீரென்று ஓரிடத்தில் உடல்நிலை குலைந்து படுத்த படுக்கையானார். ஓரிரவு, இரு பகலானது. இன்னும் உடல் தேறாது இருந்தது. நடப்பதற்கு உடலில் பலமும் குன்றியது. ஜெகன்னாதர் ரதயாத்திரைக்கோ ஒரு சில நாட்களே இருந்தன.
உடல்நலம் சரியாகாவிட்டால், நிச்சயம் ஜெகன்னாதர் ரதயாத்திரை முடிந்து, மீண்டும் ஜெகன்னாதர் கோயிலுக்குள் சென்று விடுவார். நம்மால் இப்போதும் தரிசிக்க முடியாது போய் விடுமே என்று வருந்தினார்.
என்ன இது சோதனை? ஜெகன்னாதரை நோக்கி பிரார்த்தனை செய்தார் சாலபேகா. 'பிரபு ஜெகன்னாதரே, நான் வரும் வரைக்கும் தயவு செய்து தாங்கள் எனக்காக காத்திருக்க வேண்டும்' என்று மனமுருகி வேண்டினார். சாலபேகாவின் பிரார்த்தனையால் பகவான் ஜெகன்னாதர் பெரும் திருப்தி கொண்டார்.
வழக்கம்போல் ஜெகன்னாதரின் ரத யாத்திரை துவங்கியது. கோயிலில் இருந்து ஜெகன்னாதரை மிக பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்து, ரதத்தில் ஏற்றினர். ரதத்தில் ஜெகன்னாதருக்கு விசேஷ நைவேத் யங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
பூரி மன்னர், ரதவீதியை சுத்தம் செய்ய ஜெகன்னாதர் தேர் கிளம்பியது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர். லட்சக் கணக்கானோர், ஜெகன்னாதரின் திருநாமங்களை, கிருஷ்ணரின் திருநாமங்களை பாடி ஆடி வழிமுழுதும் நாமசங்கீர்த்தனம் செய்தனர். ஆனால் இன்னும் சாலபேகா, ஜெகன்னாத் புரியை நெருங்கவில்லை. உடல் நலமின்மை காரணமாக அவர் மிக மெதுவாக வந்து கொண்டிருந்தார்.
கடைசியில் ரதம், குண்டிச்சா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, ஜெகன்னாதர் குண்டிச்சா கோயிலில் குறிப்பிட்ட நாட்கள் தங்கினார்.
இப்போதும் சாலபேகா வரவில்லை. பிறகு ஜெகன்னாதர் மீண்டும் தனது இருப்பிடத்திற்கு திரும்பும் ரத யாத்திரை விழா நடைபெற்றது. அதன்படி ஜெகன்னாதர் குண்டிசா கோயிலில் இருந்து மீண்டும் தேரில் ஏறி, ஜெகன்னாதர் கோயிலுக்கு வருவார்.
துவக்க ரதயாத்திரை போன்றே எல்லாம் நடக்கும். ஆனால் இது திரும்பும் படலம் ஆகும். இப்போதாவது சாலபேகா வந்தால் ஜெகன்னாதரை தரிசித்து விடலாம்.
ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை.சாலபேகா இன்னும் வரவில்லை.
பக்தருக்காக காத்திருந்தார் பகவான்
🌷🌷🌷🌷🌷🌷
ஜெகன்னாதர் ரதம் கிளம்பி, ஜெகன்னாதர் கோயிலை நெருங்கும் தருவாயில், திடீரென்று ஓரிடத்தில் ஜெகன்னாதர் ரதம் அப்படியே நின்று விட்டது. எவ்வளவு முயன்றும் ரதத்தை நகற்ற முடியவில்லை.
ஜெகன்னாதருக்கு பூஜை செய்யும் பக்தர்கள் மிகவும் கவலைக்குள்ளாயினர், குறித்த நேரத்தில். ஜெகன்னாதரை கோயிலுக்குள் கொண்டு செல்ல வேண்டுமே என்று வருந்தினர். இருப்பினும் இது ஜெகன்னாதரின் ஏற்பாடாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டனர். எனவே அவர்கள் உட்பட அனைவரும் ஜெகன்னாதரை வேண்டி வழிபட்டனர்.
இந்நிலையில், சில மணி நேரங்கள் கழித்து ஜெகன்னாத்புரி எல்லையை அடைந்தார் சாலபேகா. வழியெல்லாம் அவர் கேட்டது இது தான். "என்னவோ தெரியவில்லை. ஜெகன்னாதர் தேர் இன்னும் திரும்பவில்லையாம். ஜெகன்னாதர் எதற்காக இப்படி நகராமல் உள்ளார் என்று யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது" என்று மக்கள் எல்லாம் பேசிக் கொண்டனர்.
ஆனால் சாலபேகாவின் காதினுள்ளோ இவை அனைத்தும் செல்லவில்லை. ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது, 'ஜெகன்னாதர் இன்னும் ரதம் இறங்கவில்லை" என்று. அவ்வளவுதான்.
ஜெகன்னாதரின் ரதத்தை நோக்கி விரைந்தார். சொல்லி வைத்தார் போல், அந்த அகலமான சாலையின் நடுமையத்தின் ஓரிடத்தில் ஜெகன்னாதர் தேர் நின்றிருந்தது.
உள்ளே மிக பிரம்மாண்டமாக விசேஷ அலங்காரத்தில் ஜெகன்னாதர் வீற்றிருந்தார்.
நேருக்கு நேர் ஜெகன்னாதரை தரிசித்ததும் அப்படியே தண்டம் போல் கீழே விழுந்தார் சாலபேகா. அவர் கண்களில் இருந்து நீர் ததும்பியது. ஜெகன்னாதரின் காரணமற்ற கருணையை எண்ணி அப்படியே மெய்சிலிர்த்து போனார்.
பிறகு தன்னிலையை தேற்றிக் கொண்டு ஜெகன்னாதரை புகழ்ந்து பாடலானார். தொடர்ந்து ஏராளமான பாடல்களை பாடினார். இவரது துதிப் பாடல்களால் மனம் மகிழ்ந்த ஜெகன்னாதர், தன் ரதம் நகர இசைந்தார்.
ஜெகன்னாத் புரியே, சாலபேகாவின் பக்தியால் நனைந்தது. சாலபேகாவிற்காகத் தான் ஜெகன்னாதர் காத்திருந்தார் என்று அறிந்தோர் எல்லாம் அவரது பக்தியின் உயர்வை போற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் சாலபேகாவும் அவ்விடத்திலேயே தன் கடைசி காலம் வரை தங்கி, ஜெகன்னாதரை வழிபட்டு வந்தார். பகவானை புகழ்ந்து பாடிய பாடல்கள், இன்றும் இவர் ஒரிஸாவில் மிக மிக புகழ்பெற்று விளங்குகிறது. இதே இடத்தில் தான் அவரது திருசமாதியும் நிறுவப் பட்டுள்ளது. இன்றும் சாலபேகாவின் பெருமைகளை நினைவுபடுத்தும் விதமாக, ஜெகன்னாதர் ரதயாத்திரை அன்று, ஜெகன்னாதரின் ரதம், சிறிது நேரம் இந்த இடத்தில் நின்று செல்கிறது.
இப்படியாக பகவான் ஜெகன்னாதர் தன் பக்தனுக்காக காத்திருந்த வைபவம் பெரும் புகழுக்குரியதானது.
குறிப்பு: ஒரிசா ஜெகன்னாதர் ரதயாத்திரை போன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் கோயில்களில் வருடந்தோறும் ஜெகன்னாதர் ரத யாத்திரை நடைபெறுகிறது. சுவாமி பிரபுபாதாவால் துவக்கி வைக்கப்பட்ட இந்த ரத யாத்திரை மக்களிடையே மன அமைதியையும், தெய்வ சிந்தனையையும் ஏற்படுத்தி வருகிறது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment