ஹேரா- பஞ்சமி




"ஜகந்நாதர் கோயிலிலிருந்து குண்டிசாவிற்குச் செல்லும் வீதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பல்வேறு லீலைகளை நிகழ்த்தினார். கிருஷ்ணதாஸர் எனும் பிராமணர் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரவிற்கு அபிஷேக நிகழ்ச்சியினை நடத்தினார்."


"குண்டிசா கோயிலில் நடனமாடிய பின்னர், மஹாபிரபு தமது பக்தர்களுடன் நீரில் விளையாடினார், ஹேரா- பஞ்சமி தினத்தன்று அவர்கள் அனைவரும் செல்வத் திருமகளான லக்ஷ்மி தேவியின் செயல்களைக் கண்டனர்."


- ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 1.144-145


ஹேரா-பஞ்சமி உற்சவம் என்பது ரத யாத்திரைக்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் வருகிறது. பகவான் ஜகந்நாதர் தமது மனைவி லக்ஷ்மியினைக் கைவிட்டு குண்டிசா கோயிலான விருந்தாவனத்திற்குச் சென்று விட்டார். பகவானின் பிரிவினால், லக்ஷ்மி தேவி அவரைக் காண்பதற்காக குண்டிசாவிற்கு வர முடிவு செய்கிறாள். லக்ஷ்மி தேவி குண்டிசாவிற்கு வருவது ஹேரா-பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது. சில நேரங்களில் இது ஹரா - பஞ்சமி என்று அதிவாடீ, மக்களுக்கு மத்தியில் தவறாக உச்சரிக்கப்படுகிறது. ஹேரா என்னும் சொல் "பார்ப்பதற்கு" என்று பொருள்படுகிறது, இது பகவான் ஜகந்நாதரைப் பார்ப்பதற்காக லக்ஷ்மி தேவி சென்றதைக் குறிப்பிடுகிறது. பஞ்சமீ என்னும் சொல் நிலாவின் ஐந்தாவது நாளைக் குறிப்பிடுகிறது. பகவான் ஜகந்நாதர் தமது தேர் திருவிழாவினை தொடங்குவதற்கு முன்பாக, மறுநாளே திரும்பி வந்துவிடுவேன் என்று லக்ஷ்மி தேவியிடம் உறுதியளிக்கிறார். அவர் திரும்பி வராதபோது, இரண்டு - மூன்று நாள்கள் காத்திருந்த பின்னர், தனது கணவன் தன்னை அலட்சியப்படுத்துவதாக அவள் உணரத் தொடங்குகிறாள். அதனால் இயற்கையாகவே அவள் கடும் கோபம் கொள்கிறாள். தன்னை பிரம்மாண்டமாக அலங்கரித்துக் கொண்டு தனது தோழியர்களுடன் அவள் கோயிலை விட்டு வெளியே வந்து கோயிலின் முக்கிய வாசலின் முன்பாக நிற்கின்றாள். பகவான் ஜகந்நாதரின் முக்கிய சேவகர்கள் அனைவரும் அப்போது அவளது பணிப்பெண்களால் கைது செய்யப்பட்டு, அவளுக்கு முன்பாக அழைத்து வரப்பட்டு, அவளது தாமரைத் திருவடிகளில் விழும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.


ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏






Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more