ஸம்ப்ரதாய விஹினா யே மந்த்ராஸ் தே நிஷ்ஃபலா: மத:
அத: கலௌ பவிஷ்யந்தி சத்வார: ஸம்ப்ரதாயின:
ஸ்ரீ-ப்ரஹ்ம-ருத்ர-சனகா வைஷ்ணவா: க்ஷிதி-பாவனா:
சத்வாரஸ் தே கலௌ பாவ்யா ஹி உத்கலே புருஷோத்தமாத்
ராமானுஜம் ஸ்ரீ: ஸ்வீ-சக்ரே மத்வாசார்ய சதுர்முக:
ஸ்ரீவிஷ்ணு-ஸ்வாமினாம் ருத்ரோ நிம்பாதித்யம் சது:ஸன:
குருசீடப் பரம்பரையில் இடம்பெறாத மந்திரங்கள் பலனை அளிக்காது. ஆகையால் நான்கு சீடப் பரம்பரையின் ஸ்தாபகர்களான ஸ்ரீலக்ஷ்மி, பிரம்மதேவர், ருத்திரர் (சிவபெருமான் ), நான்கு குமாரர்கள் ஆகியோர் கலியுகத்தில் இவ்வுலகினைத் தூய்மைப்படுத்த புருஷோத்தம க்ஷேத்ரமான உத்கலத்தில்(ஒரிஸா )தோன்றி லக்ஷ்மி ராமானுஜரையும் நான்கு முகம் கொண்ட பிரம்ம தேவர் மத்வாசாரியரையும் ருத்ரர் விஷ்ணுஸ்வாமியையும் நான்கு குமாரர்கள் நிம்பாதகத்யரையும் ஏற்றுக் கொள்வர் (பத்ம புராணம் )
ருத்ர சம்பிரதாயம்:
💐💐💐💐💐💐💐💐💐💐💐
இது சிவபெருமானால் விஷ்ணு ஸ்வாமியை ஆச்சாரியராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதாகும். மிகச்சிறந்த வைஷ்ணவரான சிவபெருமான் எப்பொழுதும் ராம நாமத்தை ஜபம் செய்வதாகவும் அதுவே தனக்கு திருப்தியளிப்பதாகவும் பார்வதி தேவியிடம் (பத்ம புராணத்தில்) கூறியுள்ளார். மேலும், வைஷ்ணவானாம் யதா ஷம்பு, வைஷ்ணவர்களில் மிகச்சிறந்தவர் சிவபெருமான் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (12.13.16) குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணு ஸ்வாமி சுத்தாதுவைத-வாதம் என்னும் தத்துவத்தை நிலைநாட்டியவர்.
ஸ்ரீ_சம்பிரதாயம்
💐💐💐💐💐💐💐💐
இது லக்ஷ்மி தேவியினால் தோற்றுவிக்கப் பட்டு ஆதிஷேசனின் அவதாரமான இராமானுஜாசாரியரால் பரப்பப்பட்டது. ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஸ்ரீ சம்பிரதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. விசிஷ்டாத்வைத-வாதம் என்பது ஸ்ரீ சம்பிரதாயத்தின் தத்துவமாகும்.
குமார சம்பிரதாயம்
💐💐💐💐💐💐💐💐💐
பிரம்மதேவரின் நான்கு சனகாதி குமாரர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்பிரதாயம், நிம்பார்க ஆச்சாரியரால் பரப்பப்பட்டது. துவைதாத்வைத-வாதம் என்னும் தத்துவத்தை நிலைநாட்டிய நிம்பார்க சம்பிரதாயம், தற்போது பெரும்பாலும் அவருக்குப் பின் வந்த வல்லபாசாரியரின் பெயரில் அறியப்படுகிறது.
பிரம்ம சம்பிரதாயம்
💐💐💐💐💐💐💐💐💐
பிரம்மதேவரால் தோற்றுவிக்கப்பட்டு மத்வாசாரியரின் மூலமாக பரப்பப்பட்டது பிரம்ம சம்பிரதாயம், அல்லது பிரம்ம-மத்வ சம்பிரதாயம். ஆச்சாரியர் மத்வர் சுத்த-த்வைத-வாதத்தை தனது தத்துவமாக நிலைநாட்டினார்.
நான்கு சம்பிரதாயங்களுக்கு இடையில் தத்துவ நுணுக்கங்களில் வேறுபாடு உள்ளபோதிலும், அடிப்படையில் நான்கு தத்துவங்களும் பகவான் விஷ்ணுவை அல்லது கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று, அவருக்கு தொண்டு செய்யும் பக்திப் பாதையைப் பயிற்சி செய்பவர்களாக உள்ளனர். வாழ்வில் பக்குவமடைய விரும்புவோர் இந்த நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றில் வரும் குருவிடம் சரணடைய வேண்டும். இந்த நான்கு பரம்பரையில் வராத எந்தவொரு நபரும் ஆன்மீக குருவாக முடியாது.
இருவகையான சந்நியாசிகள் துறவு வாழ்வில் ஈடுபட்டுள்ளனர். மாயாவாத சந்நியாசிகள் ஸாங்கிய தத்துவத்தைப் படிப்பதிலும், வைஷ்ணவ சந்நியாசிகள் வேதாந்த சூத்திரத்திற்கு முறையான விளக்கம் கொடுக்கக்கூடிய பாகவத தத்துவத்தைப் படிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். மாயாவாத சந்நியாசிகளும் வேதாந்த சூத்திரத்தைப் படிக்கின்றனர். ஆனால் அவர்கள் சங்கராசாரியரால் எழுதப்பட்ட ஷா ரீரிக-பா ஷ்ய எனப்படும் உரையைப் படிக்கின்றனர். பாகவத பள்ளியின் மாணவர்கள் பஞ்சராத்ர நெறிகளின்படி இறைவனின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதால், வைஷ்ணவ சந்நியாசிகளுக்கு பகவானின் திவ்யமான தொண்டில் பலதரப்பட்ட ஈடுபாடுகள் உள்ளன. வைஷ்ணவ சந்நியாசிகளைப் பொறுத்த வரையில், அவர்களுக்கும் பௌதிகச் செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றபோதிலும், அவர்கள் இறைவனின் பக்தித் தொண்டில் பற்பல செயல்களைச் செய்கின்றனர். ஆனால் ஸாங்கிய, வேதாந்த கல்வியிலும், மனக் கற்பனையிலும் ஈடுபடும் மாயாவாத சந்நியாசிகளால் இறைவனின் திவ்யமான தொண்டினைச் சுவைக்க முடியாது. அவர்களின் ஆய்வுகள் மிகவும் கடினமானதால்., சில நேரங்களில் அவர்கள் பிரம்மனைப் பற்றிய கற்பனைகளில் களைப்புற்று, முறையான அறிவின்றி பாகவதத்திடம் தஞ்சமடைகின்றனர். விளைவு- இவர்களது பாகவத கல்வி தொல்லை அளிப்பதாகிவிடுகிறது. மாயாவாத சந்நியாசிகளின் செயற்கையான வறட்டு கற்பனைகளும் அருவவாத விளக்கங்களும் சற்றும் பயனற்றவையாகி விடுகின்றன. பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள வைஷ்ணவ சந்நியாசிகளோ, தங்களது திவ்யமான கடமைகளை ஆற்றுவதில் ஆனந்தத்துடன் உள்ளனர். மேலும் இறுதியில் இறைவனின் திருநாட்டை அடைவதற்கான உத்திரவாதமும் அவர்களிடம் உள்ளது. மாயாவாத சந்நியாசிகள், சில சமயங்களில் தன்னுணர்வுப் பாதையிலிருந்து வீழ்ச்சியடைந்து, மக்கள் தொண்டு சமூக சேவை போன்ற பௌதிகச் செயல்களில் மீண்டும் நுழைகின்றனர். அச்செயல்கள் பௌதிக ஈடுபாடுகளே. எனவே, எது பிரம்மன், எது பிரம்மனல்ல என்பதைப் பற்றிய வறட்டு கற்பனைகளில் ஈடுபட்டிருக்கும் சந்நியாசிகள் பற்பல பிறவிகளுக்குப் பின் கிருஷ்ண பக்திக்கு வரலாம் என்றபோதிலும், அவர்களைக் காட்டிலும் கிருஷ்ண பக்தியின் செயல்களில் ஈடுபட்டுள்ள வைஷ்ணவர்கள், நன்நிலையில் உள்ளனர் என்பதே முடிவு.
அனாஸக்தஸ்ய விஷயான்
யதார்ஹம் உபயுஞ்ஜத:
நிர்பந்த: க்ருஷ்ண-ஸம்பந்தே
யுக்தம் வைராக்யம் உச்யதே
கிருஷ்ணருடன் தொடர்பில்லாத எந்தச்செயலையும் யாரும் செய்யக்கூடாது. இதுவே க்ருஷ்ண-கர்ம என்று அழைக்கப்படுகின்றது. ஒருவன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் தனது செயல்களின் விளைவில் அவனுக்கு பற்றுதல் இருக்கக் கூடாது; பலனை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். உதாரணமாக, ஒருவன் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அச்செயலை கிருஷ்ண உணர்வாக மாற்றுவதற்கு அவன் கிருஷ்ணருக்காக வியாபாரம் செய்ய வேண்டும்
"ப்ராயேணைதத் பகவத ஈஷ்வரஸ்ய விசேஷ்டிதம்" பாகவதம் 1.5.24
அனைத்தும் பகவான் கிருஷ்ணரது விருப்பத்தினாலேயே நடைபெறுகின்றது பௌதிக இன்பத்தை ஏற்பதென்பது பௌதிக துன்பங்களில் தன்னை இன்னும் ஆழமாக பிணைத்துத் கொள்வது என்பதாகும்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment