அதிகாலை பொழுதில் இமயமலைப் பகுதியில் உள்ள பத்ரிகாஸ்ரமத்தில் சூரியன் உதிக்கும் நேரம். அவ்வேளையில் வியாச முனிவர் சரஸ்வதி நதியில் குளித்து தனது நித்யானுஷ்டானங்களை முறையாக செய்த பின்னர், தனியாக அமர்ந்து தியானம் செய்தார். முக்காலமும் அறிந்த மகாமுனியான அவர் ஞான திருஷ்டியில் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவரால் பார்க்க முடிந்தது. அப்போது துவாபர யுகத்தின் முடிவு காலம் . வெகுவிரைவில் கலியுகம் நெருங்கிக் கொண்டிருப்பதையும், கலியுகத்தில் பிறக்கப்போகும் மக்களிடம் பல்வேறு குறைகளைக் கண்டார்.
மாமுனிவர் வியாசர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சத்யாவேஷ அவதாரம். கலியுக மக்களுக்கு நன்மை செய்ய நினைத்த அவர் "கலியுகத்தின் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், அதிர்ஷ்டமற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர் என்பதை கண்ட அவர், மனிதகுலத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகள் மற்றும் நல்வழிகள் வேதங்களில் மட்டுமே சிறப்பாக உள்ளது, ஆதலால், வேதங்களின் அறிவை மிகவும் எளிமையான வடிவத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
பின்னர் வியாச தேவர் வேதங்களை எழுத திட்டமிட்டார். முன்பு வேதங்கள் எழுத்து வடிவில் புத்தகங்களாக இல்லை. சக்தி வாய்ந்த குருவிடம் இருந்து மாணவர்கள் வேதங்களை எளிமையாகக் கற்றுக் , அதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வார்கள். அவர்களின் கூர்மையான புத்திசாலித்தனமும், நல்ல நினைவாற்றலும் கொண்டிருந்ததே இதற்குக் காரணம். ஆனால் கலியுகத்தில் உள்ளவர்களுக்கு நினைவாற்றல் குறைவு. எனவே, கலியுக மக்களின் நன்மைக்காக வேத அறிவை எழுத்து வடிவில் அளிக்க விரும்பினார்.
சிருஷ்டியின் தொடக்கத்தில், பிரம்மா, நான்கு வேதங்களைப் தனது நான்கு வாய்களில் கூறி அருளினார். இந்த வேதங்களின் மந்திரங்கள் , பல்வேறு வகையான ரத்தினங்கள் வரிசைப்படுத்தப்படாமல் ஒர் இடத்தில் சேகரிக்கபட்டுள்ளதை போல இருந்தது .மேலும் பலவிதமான நகைகளை அவற்றின் நிறம் அல்லது அளவைப் பொறுத்து பல்வேறு குவியல்களாக வரிசைப்படுத்துவதை போல வியாசதேவர் வேதங்களை நான்கு பிரிவுகளாக ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வ வேதம். என்று வகைபடுத்தி பிரித்து தந்தார். அதன்பிறகு வியாசர் புராணங்களையும் மகாபாரதத்தையும் கதைகள் மூலம் மனிதகுலத்திற்கு அறநெறிகளைப் போதிக்க எழுதினார். எனவே, புராணங்களில் உள்ள வரலாறுகள் மற்றும் கதைகள் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகின்றன.
பின்னர் வியாசர் தனது சீடர்களை வேதங்களின் பேராசிரியராக்கி, இந்த தெய்வீக அறிவைப் அணைவரும் கற்றுணரும் படி பரப்புங்கள்" என்று அறிவுறுத்தினார். பைல முனிவர் ரிக் வேதத்திற்கும், ஜைமினி முனிவர் - சாம வேதத்திற்கும், வைசம்பாயன முனிவர் யஜுர் வேதத்திற்கும், சுமந்து முனிவர் - அதர்வ-வேதத்திற்கும், மேலும் ரோமஹர்ஷண முனிவர் புராணங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த அறிஞர்கள் வேதங்களை சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து தங்கள் சீடர்கள் மற்றும் பேரறிஞர்கள் மூலம் அகிலத்தின் எல்லா திசைகளிலும் பரப்பினர்.
இக்கதை மூலம் நாம் கற்று கொள்ளும் பாடம்.:- கருணை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஒவ்வொருவரும் ஒருவரின் நலனுக்காக உழைக்கிறார்கள். ஆனால் இரக்கமுள்ளவர்கள் அனைவரின் நலனுக்காகவும் உழைக்கிறார்கள். வியாச முனிவர், பொறுப்பான வாழ்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் புத்தகங்கள் தருவதன் மூலம் உலகிற்கு நன்மை செய்ய விரும்பினார். இப்படிப்பட்ட தன்னலமற்ற ஞானிகள்தான் மனிதகுலத்தின் உண்மையான நண்பர்கள். பொதுவாக மக்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட அசௌகரியங்களைக் கூட அனுபவிக்க தயாராக இருக்கிறார்கள். அத்தகைய ஞானிகளிடமிருந்து கருணை உணர்வைக் கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவ முயற்சிக்க வேண்டும்.
தொடரும் . . . .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment