அரண்மனையில் பணிபுரியும் ஒரு சாதாரன சேவகர் எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டான் அரசன்.
பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள், மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி…! மகிழ்ச்சி…!இவனுக்கு இருப்பது எப்படி.? என அவனையே நேரில் விசாரித்தார் அரசர்.
மேன்மை தங்கிய மன்னரே…, நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை…, வயிறு நிரம்ப சிறிதளவு உணவு…, மானம் காக்க ஆடை …, இதற்கு என் வருமானம் போதுமானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை…, அதனால், நிம்மதியாக இருக்கிறேன்... என்று பணிவுடன் கூறினான் சேவகன்..
இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர்.....
வேண்டுமேயானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்..! என்று சிரித்தார் அமைச்சர்.
அதென்ன கவலைப்படுவோர் சங்கம்.? என்று வியப்புடன் கேட்டார் மன்னர்.
அரசே…! ஒரு பையை எடுத்து அதில் 99 தங்கக் காசுகளைப் போட்டுக் அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..! என்று சிரித்தார் அமைச்சர். அப்படியே செய்யுங்கள்…என்று உத்தரவிட்டார் அரசர்.
தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன்.
ஒன்று குறைகிறதே...
ஒன்று குறைகிறதே...
என்று புலம்பினான்..
எங்கே போயிருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அவனது அமைதி போய் விட்டது. எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக்காசாக மாற்றி நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்று அவனுக்குள் வெறி ஏற்பட்டுவிட்டது..
அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது..
அதிகம் உழைத்தான், பட்டினி கிடந்தான்.. தன் குடும்பத்தவரை, பொறுப்பற்றவர்கள், ஊதாரிகள் என்று சப்தம் போட்டான்.. பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறிவிட்டது..!
இந்த செய்தி அரசருக்குத் தெரிந்தது.
அப்போது அமைச்சர் அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான் என்று சொன்னார்..!
கதையின் கருத்து :
அனுபவிக்க ஏகப்பட்ட (99)விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்குகிறது
இந்த உலக எண்ணங்கள் நமக்கு திருப்தி தராது துளி அளவு பௌதீக ஆசையும் நம்முடைய உறுதியை பரீட்சை செய்து பார்கும்.
பக்தி தொன்டின் மூலமாகவே இந்த மாயையின் பரீட்சையில் சுலபமாக வெற்றி பெற்ற இயலும்.
*************************************
இவ்வுண்மையினை பாகவதம்(4.22.39) பின்வருமாறு உறுதி செய்கின்றது.
யத்-பாத-பங்கஜ-பலாஷ-விலாஸ-பக்த்யா
கர்மாஷயம் க்ரதிதம் உத்க்ரதயந்தி ஸந்த:
தத்வன் ந ரிக்த-மதயோ யதயோ (அ)பிருத்த
ஸ்ரோதோ-கணாஸ் தம் அரணம் பஜ வாஸுதேவம்
"பக்தி தொண்டின் மூலம் பரம புருஷ பகவானான வாஸூதேவரை வழிபட முயற்சி செய். பலன்நோக்குச் செயல்களுக்கான ஆழமான ஆசைகளை வேரறுத்து, இறைவனின் பாத கமலங்களுக்கு சேவை செய்து, திவ்யமான ஆனந்தத்தில் ஆழ்ந்திருக்கும் பக்தர்கள், தங்களது புலன்களின் உந்துதல்களை திறம்பட கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் மிகச்சிறந்த சாதுக்களாலும் அதுபோன்று கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல."
செயலின் பலனை அனுபவிப்பதற்கான ஆசைகளைக் கட்டுப்படுத்த, மிகச்சிறந்த சாதுக்களும் பெருமுயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் கடினமாகத் திகழுமளவிற்கு, இவ்விருப்பங்கள் கட்டுண்ட ஆத்மாவினுள் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன. கிருஷ்ண உணர்வின் மூலம் இடையறாது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, தன்னுணர்வில் பக்குவமடைந்துள்ள கிருஷ்ண பக்தன், வெகு விரைவில் பரத்தில் முக்தியடைகிறான். தன்னுணர்வின் முழு ஞானத்தையுடைய அவன், எப்போதுமே ஸமாதி நிலையிலிருக்கிறான்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment