ஆத்மானம் ரதினம் வித்தி
ஷரீரம் ரதம் ஏவ ச
புத்திம் து ஸாரதிம் வித்தி
மன: ப்ரக்ரஹம் ஏவ ச
இந்த்ரியாணி ஹயான் ஆஹுர்
விஷயாம்ஸ் தேஷு கோசரான்
ஆத்மேந்த்ரிய-மனோ-யுக்தம்
போக்தேத்-யாஹுர் மனீஷிண:
"ஜடவுடல் எனும் ரதத்தில் ஆத்மா பிரயாணி, புத்தியே சாரதி. மனமே ஓட்டும் உபகரணம், புலன்களே குதிரைகள். இவ்வாறு மனம் மற்றும் புலன்களின் சேர்க்கையால் ஆத்மா இன்புறவோ, துன்புறவோ செய்கின்றான். பெரும் சிந்தனையாளர்கள் இவ்வாறே எண்ணுகின்றனர்." மனம் புத்தியினால் வழிகாட்டப்பட வேண்டும். ஆனால் சில சமயங்களில் மோசமான வியாதி சிறப்பான மருந்தையும் வென்று விடுவதைப்போல, பலமானதும் அடங்காததுமான மனம் ஒருவனது சுய புத்தியையும் அடிக்கடி வென்று விடுகிறது. இத்தகு பலமிக்க மனம் யோகப் பயிற்சியால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஆனால் அர்ஜுனனைப் போன்ற சாதாரண மனிதனுக்கு இஃது என்றும் அசாத்தியமே. அப்படியிருக்க நவீன மனிதனைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? இங்கு கூறப்பட்டிருக்கும் உவமை பொருத்தமானது: வீசும் காற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. குழம்பிய மனதைக் கட்டுப்படுத்துவது அதை விடக் கடினமானதாகும். பகவான் சைதன்யரால் கூறப்பட்டபடி, மனதைக் கட்டுப்படுத்த எளிதான வழி, முக்திக்கு மிகவும் உகந்த "ஹரே கிருஷ்ண" மஹாமந்திரத்தைப் பணிவோடு ஜபிப்பதுதான். பரிந்துரைக்கப்படும் வழிமுறை, ஸ வை மன: க்ருஷ்ண பதாரவிந்தயோ:—மனதை முழுவதுமாக கிருஷ்ணரில் ஈடுபடுத்த வேண்டும். இதன்பின் மட்டுமே கிளர்ச்சியூட்டும் ஈடுபாடுகளிலிருந்து மனம் விடுபட முடியும்.
கட உபநிஷத் 1.3.3-4
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment