பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும்.

 


பாகவத-தர்மத்தில் எந்த முரண்பாடும் இல்லை. “உன் மதம்”, “என் மதம்” என்ற வாசனைகூட பாகவத-தர்மத்தில் இல்லை. ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று பகவத்கீதை கூறுவதுபோல், பாகவத தர்மம் என்பது பரமபுருஷராகிய பகவானால் கொடுக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றுவதாகும். கடவுள் ஒருவரே. அவர் அனைவருக்கும் உரியவர். ஆகவே அனைவரும் கடவுளிடம் சரணடைய வேண்டும். அதுவே சமயம் என்பதன் உண்மையான கருத்தாகும். எதைக் கடவுள் கட்டளையிடுகிறாரோ அதுவே தர்மம் எனப்படும் (தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம்). பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். ஆனுகூல்யேன க்ருஷ்ணானுசீலனம்: எதையெல்லாம் கிருஷ்ணர் கூறுகிறாரோ, எதையெல்லாம் கடவுள் கூறுகிறாரோ-அதையெல்லாம் நேரடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவே தர்மம் (மதம்) எனப்படும்.


ஒருவன் உண்மையில் கிருஷ்ண உணர்வினனாக இருப்பின், அவனுக்கு எதிரிகள் இருக்க முடியாது. கிருஷ்ணரிடம், அல்லது கடவுளிடம் சரணடையும்படி மற்றவர்களைத் தூண்டுவதுதான் அவரது ஒரே ஈடுபாடு என்பதால், அவருக்கு எவ்வாறு எதிரிகள் இருக்க முடியும்? ஒருவன் இந்து மதத்தையோ, முஸ்லிம் மதத்தையோ, கிருஸ்துவ மதத்தையோ, இந்து மதத்தையோ அல்லது அந்த மதத்தையோ பரிந்து பேசுவனாயின் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கடவுளைப் பற்றிய தெளிவான கருத்தில்லாத சமய முறைகளைப் பின்பற்றுபவர்களுக்கிடையில் சண்டைகள் நிகழ்ந்துள்ளதை சரித்திரம் காட்டுகிறது. மனித வரலாற்றில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் பரமனுக்குச் சேவை செய்வதில் மனதைக் குவிக்காத சமய முறைகள் தற்காலிகமானவையாகும். அவற்றில் பொறாமை நிறைந்திருப்பதால் அவற்றினால் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியாது. எனவே, “என் நம்பிக்கை”, “உன் நம்பிக்கை” என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். அனைவரும் கடவுளிடம் நம்பிக்கைக் கொண்டு அவரிடம் சரணடைய வேண்டும். அதுவே பாகவத-தர்மமாகும்.


ஶ்ரீமத் பாகவதம் 6.16.41 / பொருளுரை



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more