முன்பொரு சமயம், சரஸ்வதி நதிக்கரையில் அநேக ரிஷிகள் சேர்ந்து ஒரு ஸ்ரயாகம் செய்தார்கள். அப்பொழுது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுள் யார் சிறந்தவர் என்ற விவாதம் எழுந்தது. இவ்விஷயத்தை அறிந்து வருவதற்காக அவர்கள் பிருகு முனிவரை அனுப்பி வைத்தனர்.
பொறுமை என்பது உயர்வைக் குறிக்கும் நிச்சயமான ஓர் அறிகுறி என்பதால், அதைக் கொண்டே மும்மூர்த்திகளையும் சோதிப்பதென அவர் முடிவு செய்தார். முதலில் அவர் தம் தந்தையான பிரம்மதேவரின் சபைக்குச் சென்று அவரை வணங்காமலிருந்தார். இதனால் பிரம்மா அதிக கோபமடைந்தார். ஆனால் பிருகு தன் புத்திரன் என்பதால் தன் கோபத்தை அவர் தனித்துக் கொண்டார். அடுத்து பிருகு, தன் தமையனான சிவபெருமானிடம் சென்றார். அவரும் தம் தம்பியை தழுவிக் கொள்ள அவரது ஆசனத்திலிருந்து எழுந்தார். ஆனால் நீ ஆசாரத்திலிருந்து நழுவியவன் என்று கூறி, அவரது ஆலிங்கனத்தை பிருகு ஏற்க மறுத்துவிட்டார். இதனால் கோபங்கொண்ட சிவன் தன் கணவரைத் தடுத்து அவரை சமாதானப்படுத்தினாள். பிறகு பிருகுமுனி பகவான் நாராயணரை சோதிப்பதற்காக வைகுண்டத்திற்குச் சென்றார். லக்ஷ்மி தேவியின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்த பகவானிடம் சென்ற பிருகு தன் காலால் பகவானின் மார்பில் உதைத்தார். இதனால் கோபப்படுவதற்க்குப் பதிலாக, பகவானும் அவரது நாயகியும் எழுந்து நின்று பிருகுவை வணங்கினர். பிறகு பகவான் அவருக்கு நல்வரவு கூறி, தயவு கூர்ந்து அமர்ந்து சற்று இளைப்பாருங்கள். தங்கள் வரவை கவனிக்காத குற்றத்திற்காக எங்களை மன்னித்தருள வேண்டும் என்று கூறினார். பிருகு முனிவர்களின் சபைக்கு திரும்பிச் சென்று நடந்ததைக் கூறிய பொழுது, நிச்சயமாக பகவான் விஷ்ணுதான் உயர்ந்தவர் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
ஶ்ரீமத் பாகவதம் 10.89 அறிமுகம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment