பகவான் அனைவருடைய இதயத்திலும் சாட்சியாக அமர்ந்திருக்கிறார் என்பதை பகவத்கீதை உறுதி செய்கிறது. இதனால் அவரே உத்தரவிடும் பரம வழிகாட்டியாவார். செயலின் பலன்களை அனுபவிப்பவர் வழிகாட்டியல்ல. ஏனெனில் பகவானின் உத்தரவு இல்லாமல் ஒருவரும் அனுபவிக்க முடியாது. உதாரணமாக, குடிப் பழக்கத்திற்கு அடிமையானவன், தடை விதிக்கப்பட்ட ஒரிடத்தில் குடிப்பதற்கு. நிர்வாகியிடம் மனு செய்கிறான், நிர்வாகியும் அவனுடைய நிலையை கருத்திற்கொண்டு, ஒரு குறிப்பிட்ட அளவு மதுவை மட்டுமே அருந்த வேண்டும் என்ற விதியுடன் அவனை அனுமதிக்கிறார். அதைப் போலவே, ஜட உலகம் முழுவதும் குடிப்பழக்கமுள்ளவர்களால் நிரப்ப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஜீவராசிக்கும் அவனுடைய மனதில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. தங்களுடைய ஆசைகள் நிறைவேற வேண்டுமென்று ஒவ்வொருவரும் தீவிர விருப்பம் கொண்டுள்ளனர். தந்தை மகனிடம் அன்பு கொண்டிருப்பதைப் போல், சர்வல்லமை பொருந்திய பகவான், ஜீவராசிகளிடம் உள்ள அன்பினால் அவர்களின் குழந்தைத்தனமான திருப்திக்காக அவர்களுடைய ஆசைகளை கொண்டுள்ள ஜீவராசி உண்மையில் அனுபவிப்பவனல்ல. உடலின் சலன சித்தத்திற்கு அவன் தேவையில்லாம்ல் சேவையாற்றுகிறான். குடிகாரன் குடிப்பதால் எந்த நன்மையையும் அடைவதில்லை. ஆனால் குடிப்பழக்கத்திற்கு அவன் அடிமையாகி விட்டதுடன், அதிலிருந்து விடுபட அவன் விரும்பாததால், கருணா மூர்த்தியான பகவான் அத்தகைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வசதிகளை அவனுக்கு அளிக்கிறார்.
ஒருவன் ஆசயைற்றவனாக ஆகவேண்டும் என்று அருவவாதிகள் சிபார்சு செய்கின்றனர். மற்றும் சிலர் ஆசைகளை முற்றிலும் ஒழித்து விட சிபார்சு செய்கின்றனர். அது சாத்தியமல்ல; ஆசைப்படுவதே உயரின் அடையாளமாகையால், ஆசைகளை முற்றிலும் ஒழித்து விட ஒருவராலும் முடியாது. ஆசைகள் இல்லையெனில் ஜீவராசியொருவன் இறந்து விட்டவனாவான். ஆனால் அவன் இறந்து விடவில்லை. எனவே, உயிர்வாழ்ச் சூழ்நிலைகளும், ஆசைகள் இணைந்தே செயற்படுகின்றன. ஜீவராசிகள் பௌதிக ஆசைகளைத் துறந்து, பகவானின் ஆசைகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைக்க வேண்டும். அதுவே பகவத் கீதையின் முடிவான உபதேசமாகும். இக்கருத்துக்கு பிரம்ம தேவர் உடன்பட்டார். இதனால் காலியாக உள்ள பிரபஞ்சத்தில் சந்ததிகளைப் படைக்கும் பொறுப்புள்ள பதவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே பகவானுடைனான ஒற்றுமை என்பது, தனது ஆசைகளை பரமபுருஷரின் ஆசைகளோடு பொருந்துமாறு இணைப்பதாகும். இது ஆசைகளின் பூரணத்துவத்திற்கும் வழியமைக்கிறது.அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் பரமாத்மாவாக உள்ள பகவான், ஒவ்வொரு ஜீவராசியின் மனதிலும் உள்ள எண்ணங்களை அறிவார். அவருக்குத் தெரியாமல் யாராலும் எதையுமே செய்ய முடியாது. பகவான் தமது பரமான மதிநுட்பத்தினால், ஒவ்வொருவரும் தங்களுடைய ஆசைகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் அவற்றிற்குரிய பலன்களையும் அளிக்கிறார்.
ஶ்ரீமத் பாகவதம் 2.9.25 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Great
ReplyDelete