புருஷோத்தம விரதத்தை கடைபிடிக்க
வேண்டிய வழிமுறைகள்
(வழங்கியவர் :- மஹாநிதி ஸ்வாமி)
********************************************************************************
v
உங்களுடைய சக்திக்கேற்ப சங்கல்பங்களை மேற்கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரை திருப்தி படுத்த முயலுங்கள். உங்களுடைய சக்தியை மீறிய சங்கல்பங்களை மேற்கொண்டு, மாதத்தின் பாதியில் விரதத்தை முறியடிப்பதை காட்டிலும் அது சிறந்தது.
v
மாதம் முழுவதும் பிரம்மச்சர்ய விரதம் கடைபிடிக்க வேண்டும். தரையில் உறங்க வேண்டும்.
v
அதிகாலை பிரம்ம முஹுர்த்த நேரத்தில் எழுந்திரிக்க வேண்டும்.
v
ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ராதா கிருஷ்ணரின் ரூப மற்றும் குண லீலைகளை ஸ்மரணம் செய்ய வேண்டும். கூடுதல் மாலைகள் ஜபம் செய்ய வேண்டும்.
v
தினமும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு நெய் தீபம் ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும்.
v
தினமும் துளசி மகாராணியை வலம்வர வேண்டும்.
v
ஆலயத்தை தினமும் நான்கு முறை பிரதக்ஷணம் (பரிக்ரமம்) செய்ய வேண்டும்.
v
தினமும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு ரோஜா, தாமரை மற்றும் ஒரு லட்சம் துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். (அல்லது இயன்ற அளவு).
v
தினமும் சூரிய உதயத்திற்கு முன்னரே புனித தீர்த்தத்தில் குளிக்க வேண்டும்.
v
தினமும் ஸ்ரீமத் பாகவதம் ராதா கிருஷ்ண லீலைகளை படிக்க வேண்டும். (10 காண்டம் / அத்தியாயம்
14 )
v
தினமும் ஜெகன்னாத அஷ்டகம், சோராஷ்டகம், நந்த நந்தனாஷ்டகம், ஜெய ராதா மாதவ மற்றும் இதர வைஷ்ணவ ஆச்சார்யாரைகளின் பஜனைகளை பாட வேண்டும்.
v
இந்த மாதம் முழுவதும் அமைதியாக இருப்பேன் மற்றும் உண்மையாக இருப்பேன் என்று உறுதி எடுக்க வேண்டும்.
v
பக்தர்கள், பிராமணர்கள், சாதுக்கள், கோமாதா மற்றும் சாஸ்திரங்கள் - இவைகளை நிந்திக்க கூடாது.
v
தரையில் அமர்ந்து வாழை இலையில் பிரசாதத்தை உட்கொள்ளுங்கள். (கட்டாயம் கிடையாது)
v
நகத்தையும் முடியையும் வெட்டாதீர்கள். (கட்டாயம் கிடையாது)
v
தினமும் கிருஷ்ணரையோ பிராமணர்களையோ 33 முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
v
ஒரு முகமாக தினமும் காலையும் மாலையும் பகவானை பற்றி நினைத்து அவர்களின் நாமம், ரூபம், லீலைகள் போன்றவற்றை ஸ்மரணம் செய்ய வேண்டும். ஹரே கிருஷ்ணா மகா மந்திரத்தை ஜபம் செய்து, மகா பிரசாதத்தை மட்டுமே ஏற்க வேண்டும். என்று பக்தி வினோத் தாகூர்: "நிரபேக்ஷ விரதத்தின் முறை பற்றி கூறியுள்ளார்.
v
எண்ணையில் சமையல் செய்ய கூடாது மற்றும் எண்ணை உடலிலோ அல்லது தலையிலோ தேய்க்க கூடாது (குறிப்பாக கடுகு எண்ணை).
v
ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். கிழ்கண்ட பத்தியங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்:
·
பால் மட்டும்
·
பழங்கள் மட்டும் (பால் மட்டும் காய்கறிகள் கிடையாது)
·
பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் (தானியங்கள் கிடையாது)
·
சாதுர்மாச விரதத்தின்படி அணைத்து உணவுகளும்
v
ஹரி பக்தி விலாசம் (4 .437 ): புருஷோத்தம மாதத்தில் பகவான் கிருஷ்ணரை வழிபட்டு, 33 பால்கோவாக்களை கிரஹஸ்தர்கள் பிராமணர்களுக்கு
வழங்க வேண்டும். இல்லையெனில் முந்தைய வருடம் கடைபிடித்த விரதத்தின் பலன்களை இழக்க நேரிடும்".
கீழ்க்கண்ட கௌண்டின்ய முனிவரின் இந்த மந்திரத்தை தினமும் ஜபம் செய்ய வேண்டும்:
"கோவர்தன தரம் வந்தே கோபாலம் கோப
ரூபிணம்
கோகுலத்சவ மே ஈசானம் கோவிந்தம் கோபிகா ப்ரியம்
கோவர்தன மலையை தன் விரலால் தூக்கியவரை நான் வணங்குகின்றேன். அவர் ஒரு அழகிய ஆயர்குல சிறுவனின் வடிவத்தை கொண்டவர்.
அவர் கோபர்களுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்..
தினமும் திருவிழா காணும் அந்த கோகுலத்தின் இறைவன் அவரே.
வந்தே நவகண. ஷியாம் த்விபுஜம் முரளிதரம்
பீதாம்பர தரம் தேவம் சரதாம் புருஷோத்தமம்
இரண்டு கரங்களில் புல்லாங்குழலை தாங்கியிருக்கும் நவகணஷியாம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு
( புத்தம் புதிய மழை மேகத்தின் நிறத்தை கொண்டிருக்கும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) நான் என் வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன். மஞ்சள் நிற பீதாம்பரம் அணிந்து மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும் புருஷோத்தமரான முழுமுதற்கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகின்றேன்.
v
தானம் கொடுக்க சிறந்த நாட்கள்
·
ஏகாதசி, துவாதசி, பௌர்ணமி, அமாவாசை, சரவண நக்ஷத்திர நாள்.
v
தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள்
·
செல்வம், தங்கம், ஆடைகள், காலணிகள், பழங்கள்.
புருஷோத்தம விரதத்தை முடிக்க வேண்டிய முறை:
****************************************************************
v
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, ஸ்ரீ ஸ்ரீ ராதா சியாமசுந்தரை வழிபாடு செய்து, பின்வருமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்: "முழுமுதற் கடவுளே! சியாமசுந்தரரே! சனாதனரே! புருஷோத்தமரே !
என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்கள். என்னுடைய இந்த விரதத்தை நீங்களும், ஸ்ரீமதி ராதாராணியும் ஏற்றுக்கொள்ளுங்கள். என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்களை பொன்னிற ஆடையணிந்த சியாமசுந்தரருக்கு
சமர்ப்பிக்கிறேன்.".
v
ஸ்ரீ ஸ்ரீ ராதா சியாம்சுந்தரருக்கு புஷ்பாஞ்சலி மற்றும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.
v
பிராமணர்களுக்கு உணவளித்து தானமாக தங்களுக்கு இயன்றவற்றை கொடுக்க வேண்டும் (ஆடைகள், செல்வம், காலணிகள்). ஸ்ரீமத் பாகவதத்தை, கிரஹஸ்த வைஷ்ணவ பிராமணருக்கு வழங்குவது மிகவும் சிறப்பாகும். இந்த செயல், அணைத்து முன்னோர்களையும் விடுவித்து பகவானின் சங்கத்தில் கொண்டு சேர்க்கும்.
v
நீங்கள் அரிசி, கோதுமை, நெய் போன்றவற்றை உட்கொண்டிருந்தால் அதையே பிராமணர்களுக்கு
தானமாக வழங்குங்கள்.
v
நீங்கள் தரையில் உறங்கியிருந்தால், மெத்தையையும் தலையணையையும் பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.
v
நீங்கள் வாழை இலையில் சாப்பிட்டிருந்தால், நெய்யும் சர்க்கரையும் பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.
v
நீங்கள் முடியையும் நகத்தையும் வெட்டாமல் இருந்திருந்தால்,
கண்ணாடியை பிராமணர்களுக்கு தானமாக வழங்குங்கள்.
v
நீங்கள் நெய் தீபம் ஏற்றி தீப ஆராதனை செய்திருந்தால், விளக்கு மற்றும் பானைகளை பிராமணர்களுக்கு
தானமாக வழங்குங்கள்.
v
நீங்கள் ஏதேனும் சங்கல்பத்தை விரதத்தின் போது உடைத்திருந்தால், பல்வேறு விதமான பழ ரசங்களை பிராமணர்களுக்கு
தானமாக வழங்குங்கள்.
புராணங்களைப் படித்து அதில் இருக்கும் ஒவ்வொரு நெறிமுறையையும்
பின்பற்றுவது இந்த கலியுகத்தில் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உதாரணமாக கங்கையில் நீராட வேண்டுமெனில் நாம் வட இந்தியா செல்ல வேண்டும். இது நம்மில் பல பேருக்கு இயலாத காரியம் ஆகும். ஆகவே கலியுக தர்மமான ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் ஒன்றை மட்டுமே ஜெபித்து ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடமான ஶ்ரீ கோலோக விருந்தாவனத்திற்கு செல்ல முடியும். ஆதலால் கீழ்க்கண்ட ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அதிக எண்ணிக்கையில் ஜபம் செய்வது சிறந்தது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment