தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு
மாம் அனுஸ்மர யுத்ய ச
மய்-யர்பித- மனோ புத்திர்
மாம் ஏவைஷ்யஸ்-யஸம்ஷய:
மொழிபெயர்ப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
எனவே, அர்ஜுனா, என்னை இந்த (கிருஷ்ண) உருவில் எப்போதும் எண்ணிக் கொண்டு, அதே சமயம் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் செய்வாயாக. உன்னுடைய செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்துவதன் மூலம், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை.
பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
அர்ஜுனனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரை, பௌதிகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் மிக முக்கியமானதாகும். விதிக்கப்பட்ட கடமையையும் தொழிலையும் விட்டுவிடும்படி கடவுள் கூறவில்லை. அவற்றை தொடர்ந்து செய்து கொண்டே, ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் கிருஷ்ணரை நினைக்க முடியும். இஃது ஒருவனை பௌதிகக் களங்கங்களிலிருந்து தூய்மைப்படுத்தி, அவனது மனதையும் புத்தியையும் கிருஷ்ணரில் ஈடுபடுத்தும். கிருஷ்ணரின் திருநாம உச்சாடனத்தின் மூலம், உன்னத லோகமான கிருஷ்ண லோகத்திற்கு ஒருவன் மாற்றப்படு.
ஶ்ரீமத் பகவத்கீதை (உண்மையுருவில்) 8.7 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment