பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனனும் துவாரகையைச் சேர்ந்த ஒரு பிராமணரின் இறந்த புத்திரிகளை மீட்டிய லீலை

 



ஒருசமையம் துவாரகையில் ஒரு பிராமணரின் மனைவிக்குக் குழந்தை பிறந்து உடனே இறந்துவிட்டது. பிராமணரும் உயிரற்ற தன் மகனை மன்னர் மகாசேனரின் சபைக்கு எடுத்துச் சென்று, அரசரைப் பின்வருமாறு திட்டினார். பீராமணர்களைப் பகைப்பவனும், வஞ்சகனுமான இவன் தன் கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறியதால் தான் என் மகன் இறந்து போனான். அந்த பிராமணரின் இந்த துர்பாக்கியமான நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது. பிராமணர் ஒவ்வொரு முறையும் தன் இறந்த குழந்தையை அரச சபைக்குக் கொண்டு வந்து போட்டு முன்போலவே அரசரைத் திட்டினார். அம்மாதிரியே அவரது ஒன்பதாவது குழந்தையும் இறந்து போய், அவரது புலம்பலைக் கேட்க நேர்ந்த அர்ஜுனன் பிராமணரே இனி உண்டாகும் உமது குழந்தையை நான் காப்பாற்றுவேன். இதை நான் செய்யத் தவறினால், அக்கினிப் பிரவேசம் செய்து அதனால் என் பாவத்தைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினார்.

சில காலத்திற்க்குப் பிறகு அந்த பிராமணரின் மனைவி பத்தாவது குழந்தையை ஈன்றெடுக்கும் தறுவாயிலிருந்தாள். அதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன், பிரசவ அறைக்குச் சென்று, தமது அம்புகளால் பாதுகாப்பான ஒரு சரக்கூட்டை அமைத்தார். ஆனால் அவரது முயற்சிகள் வீணாயின. ஏனெனில், பிறந்ததும் ஓயாமல் அழுது கொண்டே இருந்த அக்குழந்தை உடனே ஆகாயத்தில் சென்று மறைந்தது போயிற்று. அப்பொழுது அந்த பிராமணர் அர்ஜுனனை மிகவும் ஏளனம் செய்ததால் அர்ஜுனன் மரண தேவனான யமராஜனின் உலகிற்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அந்த பிராமண புத்திரனை அர்ஜுனன் அங்கு காணவில்லை. பதினான்று லோகங்களிலும் தேடிய பிறகும் அவரால் அக்குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு பிராமண புத்திரனைக் காப்பாற்றத் தவறிய அர்ஜுனன் அக்கினிப் பிரவேசம் செய்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அப்பொழுது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அங்கு வந்து அவரைத் தடுத்து, அந்த பிராமண புத்திரர்களை உனக்கு நான் காட்டுகிறேன். எனவே உன்னை நீயாகவே இகழ்ச்சிக்கு உள்ளாக்கிக் கொள்ளாதே என்று கூறினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறகு அர்ஜுனனைத் தமது தெய்வீகமான தேரில் ஏற்றிக்கொண்டு, ஏழு சமுத்திரர்களுடன் கூடிய ஏழு பிரபஞ்சத் தீவுகளைக் கடந்து, பிறகு லோகாலோக மலைப் பர்வதத்தையும் கடந்து இருளடர்ந்த பிரதேசத்தினுள் பிரவேசித்தார். குதிரைகளால் தங்களுடைய வழியைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதனால் கிருஷ்ணர் கொழுந்து விட்டெரியும் தமது சுதர்சன சக்கரத்தை முன்னால் அனுப்பி அந்த இருளை துளைக்கச் செய்தார். படிப்படியாக அவர்கள் காரணக் கடலை அடைந்தனர். அதற்குள் பகவான் மகா விஷ்ணுவின் நகரம் இருப்பதையும், அங்கு ஆயிரம் தலை நாகமான அனந்தனின் மேல் மகா விஷ்ணு சயனித்திருப்பதையும் கண்டனர். ஸ்ரீ கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் வரவேற்ற பகவான் மகா விஷ்ணு உங்களிருவரையும் நான் காண விரும்பினேன். அதற்காகத்தான் அந்த பிராமண புத்திரர்களை நான் இங்கு கொண்டுவந்தேன். தயவு செய்து நர நாராயண ரிஷி என்ற உங்களுடைய ரூபங்களில் சமய ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக விளங்கி பொது ஜனங்களுக்குத் தொடர்ந்து நன்மை செய்து வாருங்கள் என்று கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனனும் பிறகு பிராமண புத்திரர்களை அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்று, அவர்களை அவர்களது தந்தையிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமையை நேரிடையாக அனுபவித்து அர்ஜுனன் ஆச்சரியமடைந்தார். பகவானின் கருணையால் மட்டுமே ஒரு ஜீவனால் சக்தியையோ ஐசுவரியத்தையோ காட்ட முடியும் என்று அர்ஜுனன் முடிவு செய்தார்.



ஶ்ரீமத் பாகவதம் 10.89 அறிமுகம்



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more