பகவான் ஏன் ஒரு
பௌதிக உருவினால் மூடப்பட்டவராக, அல்லது ஒரு மனிதனைப் போல்
பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார் என்பதற்கு, அக்ரூரர் இங்கு இரு
காரணங்களைக் குறிப்பிடுகிறார். முதல் காரணம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் லீலைகளை நிகழ்த்தும்பொழுது, அவரிடம் அன்புபூண்ட பக்தர்கள் அவரைத் தங்களது அன்புக் குழந்தையாகவோ அல்லது நண்பராகவோ அல்லது காதலராகவோ அல்லது வேறுமாதிரியாவோ நினைக்கின்றனர். இந்த
அன்புப் பரிமாற்றத்தின் பரவசத்தில் ஸ்ரீ
கிருஷ்ணரை அவர்கள் கடவுளாக நினைப்பதில்லை. உதாரணமாக, கிருஷ்ணரிடமுள்ள அசாதாரணமான அன்பின் காரணத்தால் வனத்தில் அவருக்குத் தீங்கு ஏற்பட்டு விடும் என்று தாய்
யாசோதை கவலைப்படுகிறாள். அவள் இவ்வாறு உணர வேண்டுமென்பது பகவானின் விருப்பமாகும். இது இங்கு
நிகாம: எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் பௌதிகமானவராக காணப்படக் கூடும் என்பதற்கான இரண்டாவது காரணம், அவி வேக:
எனும் சொல்லால் சுட்டிக் காட்டப்படுகிறது: அறியாமையின் காரணத்தால், பரமபுருஷரின் நிலையை ஒருவன் தவறாக
புரிந்து கொள்ளக்கூடும். பாகவதத்தின் பதினொன்றாம் காண்டத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஸ்ரீ
உத்தவருக்கும் இடையிலான உரையாடலில் பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் மேற்பட்ட தமது
உன்னத நிலையை பகவான் விரிவாக விவாதிக்கிறார். வேத இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: தேஹி-தேஹி-விபாகோ ’யம் நேஸ்வரே வித்யதே க்வசித்: “பரமபுருஷருக்கு உடல்
என்றும், ஆத்மா என்றும் சொல்லக்கூடிய எந்த ஒரு வேறுபாடும் இல்லை.” அதாவது, ஸ்ரீ
கிருஷ்ணரின் உடல் நித்தியமானதும், ஆன்மீகமானதும், எல்லாம் அறிந்ததும், பரிபூரண ஆனந்தக் களஞ்சியமுமாகும்.
ஶ்ரீமத் பாகவதம் 10.49.22 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment