தூய பக்தனோருவன் குழப்பங்களை உண்டாக்குவதற்குப் பதிலாக, பகவானின் தாமரைப் பாதங்களை இதய பூர்வமாக ஏற்று இடைவிடாமல் பூஜிக்கிறான்.
மொழிபெயர்ப்பு
பரமபுருஷரான விஷ்ணுவுடன் அனைத்தும் சம்பந்தப்பட்டுள்ள, அந்த மிகவுயர்ந்த நிலையை ஆன்மீகிகள் அறிந்திருப்பதால், தெய்வீகமற்ற அனைத்தையும் விலக்கிவிட அவர்கள் விரும்புகின்றனர். எனவே
பகவானோடு பரிபூரண இணக்கம் கொண்டுள்ள தூய பக்தனோருவன் குழப்பங்களை உண்டாக்குவதற்குப் பதிலாக, பகவானின் தாமரைப் பாதங்களை இதய பூர்வமாக ஏற்று இடைவிடாமல் அவற்றைப் பூஜிக்கிறான்.
பொருளுரை
பகவத் கீதையில், மத்-தாம (எனது வசிப்பிடம்) எனும் சொல் ஒரு சில தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருத்துப்படி, எல்லையற்ற ஆன்மீக வெளி ஒன்றுள்ளது. அதிலுள்ள உலகங்கள் வைகுண்டங்கள், அல்லது முழுமுதற் கடவுளின் வசிப்பிடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பௌதிக வானிற்கும் அதை மறைத்துள்ள ஏழு திரைகளுக்கும் மிகவும் தூரத்திலுள்ள அந்த ஆன்மீக வானத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ தேவையில்லை. அவ்வுலகங்கள் சுய ஒளியுடையவையாக இருப்பதைலும், பௌதிக சூரியன்களை விட அதிக ஒளியுள்ளவையாகவும் இருப்பதாலும் ஒளியூட்டுவதற்கு அங்கு மின்சாரம் தேவைப்பட வில்லை. முழுமுதற் கடவுளின் தூய பக்தர்கள் அவருடன் இணங்கி வாழ்கின்றனர். அதாவது அவர்கள் எப்பொழுதும் பகவானை அவர்களது ஒரே நம்பிக்கைக்குரிய நண்பராகவும், தங்கள் நலத்தில் அக்கறை கொண்டவராகவும் எண்ணுகின்றனர். பிரபஞ்சத்தின் தலைவராகிய பிரம்மாவின் அந்தஸ்து வரையுள்ள எந்த இகலோக ஜீவன்களைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு மட்டுமே வைகுண்ட லோகங்களைப் பற்றிய தெளிவானதொரு காட்சி இருக்க முடியுமென்பதில் சந்தேகமில்லை. அத்தகைய தூய பக்தர்கள் பரமபுருஷரால் பக்குவமான வழியில் நடத்தப்படுவதால், எது பிரம்மம் எது மாயை என்பதைப் பற்றி விவாதித்து காலத்தை வீணாக்குவதன் மூலமாக, ஆன்மீக தன்னுணர்வில் எவ்விதமான
குழப்பத்தையும் உண்டாக்குவதில்லை. அல்லது பகவானோடு தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்றோ, அல்லது பகவானுக்கு தனித்தன்மை இல்லை என்றோ, அல்லது பகவானே இல்லை என்றோ, அல்லது ஜீவராசிகளே பகவான் என்றோ, அல்லது பகவான் அவதாரம் ஏற்று வரும் பொழுது அவர் ஒரு ஜட உடலை ஏற்கிறார் என்றோ அவர்கள் தப்பாக எண்ணுவதில்லை. அல்லது ஆன்மீக பாதையில் உண்மையில் பல்வேறு இடையூறுகளாக இருக்கும், தங்களுக்குப் புரியாத ஆதாரமற்ற தத்துவவாதங்களைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அருவவாதிகளும், பக்தரில்லாதவர்களும் ஒரு
புறமிருக்க, தங்களை பக்தர்களாக காட்டிக் கொண்டு, அருவ பிரம்மத்தோடு இரண்டறக் கலப்பதன் மூலமாக முக்தியடையும் கருத்தை இதயத்தில் தேக்கி வைத்திருக்கும் மற்றொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள் தீயொழுக்கத்தினால், தங்களின் சொந்த பக்தித் தொண்டு முறையை தவறான முறையில் உருவாக்கிக் கொண்டு, அறிவீனங்களையும், தங்களைப் போலவே தீயொழுக்கம் கொண்ட பிறரையும் தவறான பாதையில் வழி நடத்துகின்றனர். விஸ்வநாத சக்ரவர்த்தியின் கூற்றிற்கு இணங்க, பக்தரற்றவர்களும் சிற்றின்ப வெறியர்களுமான இவர்கள் அனைவரும் மகாத்மாக்களின் உடையிலுள்ள துராத்மாக்கள் ஆவர். இத்தகையவர்கள் சுகதேவ கோஸ்வாமியால் வழங்கப்பட்ட இக் குறிப்பிட்ட பதத்திற்கிணங்க, ஆன்மீகிகளின் பட்டியலிலிருந்து முற்றிலும் விலக்கப்படுகின்றனர்.
எனவே வைகுண்ட
லோகங்கள், பரம்
பதம் என்றழைக்கப்படும்
மிகச் சிறந்த
வசிப்பிடங்களாகும். சூரியப்
பிரகாசம் சூரியனிலிருந்து
வரும் கதிர்களாக
இருப்பதைப் போலவே,
வைகுண்ட லோகங்களிலிருந்து
வரும் கதிர்களாக
இருப்பதால், அருவமான
பிரம்மஜோதியும் பரம்
பதம் என்றே
அழைக்கப்படுகிறது. அருவ
பிரம்மஜோதி பகவானின்
உருவாம்சத்தைச் சார்ந்துள்ளது
என்று பகவத்
கீதையில் (14.27) தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது. மேலும்
அனைத்தும் நேராகவோ
அல்லது மறைமுகமாகவோ
பிரம்மஜோதியைச் சார்ந்திருப்பதால்,
அவையனைத்தும் பகவானிடமிருந்தே
உண்டுபண்ணப் படுகின்றன,
அனைத்தும் அவரையே
சார்ந்துள்ளன. மேலும்
அழிவுக்குப்பின் அனைத்தும்
அவரிலேயே ஒடுங்குகின்றன.
எனவே எதுவுமே
அவருக்குச் சுதந்திரமானதல்லை.
பரபிரம்மமாகிய பகவான்
தமது பிரம்ம
சக்தியால் அனைத்திலும்
ஊடுருவி பின்னிப்
பிணைந்திருக்கிறார். இதனால்
அனைத்தும் பகவானின் உடைமை என்பதை தூய பக்தனொருவன் உண்மையாக அறிந்திருப்பதால், மாயையிலிருந்து பிரம்மத்தை வேறுபடுத்திப் பார்ப்பதில் விலைமதிப்பற்ற நேரத்தை அவன் வீணாக்குவதில்லை. பக்தன் எல்லாவற்றையும் பகவத் சேவையில் ஈடுபடுத்த முயல்கிறான். பகவானின் சிருஷ்டியைப் பொய்யாக அடக்கியாள முயன்று குழப்பங்களை அவன் விளைவிப்பதில்லை. அவன் அதிக விசுவாசம் உள்ளவனாக இருப்பதால், தன்னை மட்டுமல்லாமல், மற்றனைத்தையும் கூட உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுத்துகிறான்.
அனைத்திலும் பகவான்
இருப்பதையும், அனைத்தும்
அவருக்குள் இருப்பதையும்
பக்தன் காண்கிறான்.
திவ்யமான பகவானின்
உருவம் பௌதிகமான
ஏதோ ஒன்று
என்று துராத்மா
ஒருவன் எண்ணுவதே
அவன் விளைவிக்கும்
குழப்பங்களுக்குக் காரணமாகும்.
ஶ்ரீமத் பாகவதம் 2.2.18 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment