பாவக்ராஹீ ஜனார்தனர் (தூய பக்தர் ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி)

 



ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்ல உள்ளார் என்பதை ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி கேள்விப்பட்டபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று தமது மனதினால் அந்தப் பாதையினை அலங்கரிக்கத் தொடங்கினார். (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.155 )


முதலில் நரசிம்மானந்த பிரம்மசாரி குலியா நகரத்திலிருந்து தொடங்கும் ஓர் அகலமான சாலையினை தியானித்தார். அவர் அச்சாலையினை இரத்தினங்களால் அலங்கரித்து, அதன்மீது காம்பு இல்லாத மலர்களின் படுக்கையை விரித்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.156)



அவர் தமது மனதாலேயே சாலையின் இரு புறங்களையும் மலர்கள் மிகுந்த மகிழ மரங்களினால் அலங்கரித்தார், இடையிடையே இரு புறங்களிலும் தெய்வீகத் தன்மையைக் கொண்ட ஏரிகளை வைத்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.157 )



அந்த ஏரிகளின் படித்துறைகள் இரத்தினங்களால் கட்டப்பட்டிருந்தன, ஏரிகளோ மலர்ந்த தாமரை மலர்களால் நிரம்பியிருந்தன. அங்கே பலவிதமான பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன, அங்கிருந்த நீரானது அமிர்தம் போன்று இருந்தது.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.158 )



சாலை முழுவதும் குளிர்ந்த இளங்காற்று நிறைந்திருந்தது, அது பல்வேறு மலர்களின் நறுமணங்களைத் தாங்கி வந்தது. அவர் தமது சாலையின் கட்டமைப்பினை கானாய் நாடசாலா வரை கொண்டு சென்றார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.159 )



மனதினுள் விருந்தாவனப் பாதையினை அமைத்த நரசிம்மானந்த பிரம்மசாரியினால் கானாய் நாடசாலாவிற்கு அப்பால் அதனை வடிவமைக்க முடியவில்லை. சாலையின் கட்டுமானப் பணியினை ஏன் நிறைவு செய்ய இயலவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல், அவர் ஆச்சரியமடைந்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.160 )



அதன் பிறகு, ஸ்ரீ சைதன்யர் இம்முறை விருந்தாவனத்திற்குச் செல்ல மாட்டார் என்று அவர் மிகுந்த உறுதியுடன் இதர பக்தர்களிடம் உரைத்தார்.


பொருளுரை


ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகச் சிறந்த பக்தராவார்; எனவே. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு குலியாவிலிருந்து விருந்தாவனத்திற்குச் செல்கிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது, அவரிடம் எந்த பௌதிகச் செல்வமும் இல்லை என்றபோதிலும், அவர் தமது மனதினுள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பயணத்திற்காக மிகவும் அற்புதமான சாலையினை அமைக்கத் தொடங்கினார். அப்பாதையின் சில வர்ணனைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஆயினும், மனதினால்கூட கானாய் நாடசாலாவிற்கு அப்பால் அவரால் சாலையை அமைக்க முடியவில்லை. எனவே, சைதன்ய மஹாபிரபு இம்முறை விருந்தாவனத்திற்குச் செல்ல மாட்டார் என்று அவர் முடிவு செய்தார்.


ஒரு தூய பக்தனுக்கு வெளிப்புறமாக சாலை அமைப்பதும் மனதினுள் அமைப்பதும் ஒன்றாகும். ஏனெளில், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளான ஜனார்தனர், பா,வ-க்ராஹீ அல்லது உணர்ச்சிகளை ஏற்பவர் என்று அழைக்கப்படுகிறார். அவரைப் பொறுத்தவரையில், உண்மையான இரத்தினங்களால் அமைக்கப்பட்ட சாலையும் மனதில் இரத்தினங்களால் அமைக்கப்பட்ட சாலையும் ஒன்றுதான். சூட்சுமமாக உள்ளபோதிலும் மனதும் ஜடப் பொருளே. எனவே, ஸ்தூலப் பொருளானாலும் சரி, சூட்சுமப் பொருளாளாலும் சரி, பகவானின் தொண்டில் ஈடுபடுத்தப்படும் எந்தவொரு பாதையும் பரம புருஷ பகவானால் சமமாக ஏற்கப்படுகிறது. பகவான் தம்முடைய பக்தன் தமக்கு சேவை செய்வதற்கு எவ்வளவு தயாராக உள்ளான் என்பதைப் பார்த்து, அவனுடைய மனப்பான்மையினை அங்கீகரிக்கின்றார். பக்தன் பகவானுக்கு ஸ்தூலப் பொருளை வைத்தும் சேவை செய்யலாம் அல்லது சூட்சுமப் பொருளை வைத்தும் சேவை செய்யலாம்-அஃது அவனது சுதந்திரம். அந்த சேவையானது பரம புருஷ பகவானின் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே முக்கியமான கருத்தாகும். இது பகவத் கீதையில் (9.26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


பத்ரம்' புஷ்பம்' பலம்' தோயம்' யோ மே பக்த்யா ப்ரயச்சதி 

தத் அஹம் பக்த்யுபஹ்ருதம் அஷ்னாமி ப்ரயதாத்மன:


"அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ பூவோ பழமோ நீரோ அளித்தால், அதனை நான் ஏற்கின்றேன்." உண்மையான மூலப்பொருள் பக்தியே. தூய பக்தி ஜட இயற்கையின் குணங்களினால் களங்கமடைவதில்லை. அஹைதுக்யப்ரதிஹதா, எதையும் எதிர்பார்க்காத பக்தித் தொண்டானது எந்தவொரு பெளதிகச் சூழ்நிலையினாலும் தடுக்கப்பட இயலாததாகும். அதாவது, பரம புருஷ பகவானுக்கு சேவை செய்வதற்கு ஒருவன் செல்வந்தனாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மிகமிக ஏழ்மையில் உள்ளவன்கூட, அவனிடம் தூய பக்தி இருந்தால், பரம புருஷ பகவானுக்கு சமநிலையில் சேவை செய்ய முடியும். அந்த சேவையில் எந்தவொரு பௌதிக உள்நோக்கமும் இல்லாமல் இருந்தால், பக்தித் தொண்டானது எந்தவொரு பெளதிகச் சூழ்நிலையினாலும் தடுக்கப்பட முடியாததாகும்.


(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.161  மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரை )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more