அளவுக்கதிகமான தவத்திலோ அல்லது அளவுக்கதிகமான புலன் நுகர்விலோ ஈடுபடுபவனால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாது
ஒருவன் தன் மனதைக் கிருஷ்ண உணர்வில் உறுதியாக ஈடுபடுத்தினாலும், மிகவும் சஞ்சலமுள்ள மனமானது திடீரென்று அதன் ஆன்மீக நிலையிலிருந்து வழுவிடக்கூடும். அப்பொழுது ஒருவன் தன் மனதைக் கவனமாக தன் வசப்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான தவத்திலோ அல்லது அளவுக்கதிகமான புலன் நுகர்விலோ ஈடுபடுபவனால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாது என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது. சிலசமயம் ஜடப் புலன்களுக்கு ஓரளவு திருப்தியைக் கொடுப்பதால் ஒருவன் தன் மனதைத் தன் வசம் கொண்டுவரக்கூடும். உதாரணமாக, ஒருவர் அதிகமான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளக்கூடும் என்றாலும், அவ்வப்போது போதுமான அளவு மகா-பிரசாதத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளலாம். இதனால் மனம் சஞ்சலப்படாமல் இருக்கும். அதுபோலவே, ஒருவன் பிற பக்தர்களோடு நகைச்சுவை, நீச்சல் போன்றவை மூலம் அவ்வப்போது ஓய்ந்திருக்கலாம். ஆனால் இவை அளவுக்கதிகமாக செய்யப்படுமானால், ஆன்மீக வாழ்வில் பிற்போக்கான நிலை ஏற்படும். தீய உறவு அல்லது மது அருந்துதல் போன்ற பாவச் செயல்களை மனம் விரும்பினால் மனதின் அந்த முட்டாள்தனத்தை ஒருவன் சகித்துக்கொண்டு, பெருமுயற்சியோடு கிருஷ்ண உணர்வைத் தொடரவேண்டும். இதனால் மதிமயக்க அலைகள் விரைவில் தணிந்து, முன்னேற்றப் பாதை மீண்டும் திறந்து கொள்ளும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment