இருப்பவை அனைத்தும் பரமபுருஷரின் சக்தியும்,
உடமையும் ஆகும். அனைத்தும் அவரது அன்புத் தொண்டில் உபயோகிக்கப்படவேண்டியவையே. ஜடப்
பொருட்களை பகவானிலிருந்து வேறுபட்டவையாகப் பார்த்து, தன்னால் அவை அனுபவிக்கப்பட வேண்டியவை
என்று எண்ணுவது பிரமையாகிய ஜட இருமை (வைகல்பிகம் ப்ரமம்) எனப்படுகிறது. உணவு, உடை,
வசிப்பிடம், அல்லது வாகனம் போன்ற புலன் நுகர்ப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது,
அவற்றின் நன்மை தீமைகளை ஒருவன் கருத்திற்கொள்கிறான். இதன் விளைவாக ஜட வாழ்வில் ஒருவன்
சொந்த சுகத்திற்காக மிகச் சிறந்த புலன் நுகர்ப் பொருளைப் பெற முயல்வதில் இடைவிடாத கவலைக்கு
உள்ளாகிறான். ஆனால் அனைத்தும் பகவானின் உடமை என்பதை ஒருவன் உணர்வானாயின், அனைத்தும்
பகவானின் திருப்திக்காகவே உள்ளன என்பதைக் காண்பான். அவனுக்குச் சொந்த கவலை எதுவும்
இருக்காது. ஏனெனில் பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுவதிலேயே அவன் முழு திருப்தியடைகிறான்.
பகவானின் உடமையை துஷ்பிரயோகம் செய்யும் அதே சமயம் தன்னுணர்விலும் முன்னேறுவது சாத்தியமில்லை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment