மொழிபெயர்ப்பு
பரமபுருஷராகிய நான் சாதாரண புலன் உணர்வினால் அறியப்பட முடியாதவனாவேன். இருப்பினும், மனித வாழ்வில் இருப்பவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆராய்ந்து அறியப்பட்ட அறிகுறிகளால் நேரடியாக என்னைத் தேடுவதற்குத் தங்களுடைய புத்தியையும், பிறபுலன்களின் சாமர்த்தியத்தையும் உபயோகிக்கலாம்.
பொருளுரை
ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தியின் கருத்துப்படி, இச்சுலோகத்தில யுக்தா: என்ற சொல், பக்தி-யோகத்தின் கட்டுப்பாடான பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களைக் குறிக்கிறது. சில மூடர்கள் நினைப்பது போல், பகவத் பக்தர்கள் மத வெறியர்களாகித் தங்க்ள் புத்தியை விட்டுவிடுபவர்களல்ல. அனுமானத: மற்றும் குணைர் லிங்கை: என்ற சொற்களால் சுட்டிக் காட்டப்படுவதுபோல், பக்தி-யோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பக்தன் மனித மூளையிலுள்ள எல்லாப் பகுத்தறிவுப் பிரிவுகளாலும் தீவிரமாக பரமபுருஷரைத் தேடுகிறான். ஆனால் “தேடுதல்” என்று பொருள்படும் ம்ருகயந்தி என்ற சொல், ஒழுங்கற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத முறையை குறிப்பிடுவது ஆகாது. ஒரு குறிப்பிட்ட நபரின் தொலைபேசி எண்ணைத் தேடும் நாம், அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி செய்திப்புத்தகத்தில் பார்க்கிறோம். அவ்வாறே, நாம் ஒரு குறிப்பிட்ட பொருளைத் தேடும்பொழுது, அப்பொருளைப் பிரத்தியேகமாக விற்பனை செய்யும் கடைக்குச் சென்றால் நாம் தேடும் பொருள் நிச்சயம் கிடைக்கும். பரமபுருஷர் கற்பனையில் உருவான ஒரு பொருளலல்ல என்பதால், பகவானின் நிலையை நாம் மனம்போனபடி கற்பனை செய்து கொள்ள முடியாது என்று ஸ்ரீல ஜீவகோஸ்வாமி குறிப்பிடுகிறார். எனவே, பரமபுருஷரைப் பற்றிய தகவலைச் சேகரிக்க ஒருவன் அதிகாரப்பூர்வமான வேத சாஸ்திரங்களில் ஒழுங்கான பரிசோதனையை நடத்தவேண்டும். சாதாரண மன ஊகத்தினாலோ, ஜடப் புலன்களின் செயல்களினாலோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடையவோ, அறியவோ முடியாது என்பதையே இச்சுலோகத்திலுள்ள அக்ராஹ்யம் என்ற சொல் சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத ஸிந்து (1.2.234) என்ற நூலில் பின்வரும் சுலோகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“எவராலும் தனது பௌதிக மாசுடைய புலன்களால் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகளின் உன்னத தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒருவன் உன்னதமான பகவத் சேவையில் தன்னை ஆழ்த்திவிடும் போதுதான் பகவானின் உன்னத நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகள் அவனுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன.”
க்ராஹ்யமாணைர் குணை: என்ற சொற்கள், மனித மூளையின் பகுத்தறிவு மற்றும் புத்திக்கூர்மை ஆகிய பிரிவுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. பகவானை நேரடியாகவும், மறைமுகமாகவும் உணர்வதற்கு இவைகளை உபயோகிக்க முடியும் பகவானுடைய சிருஷ்டியின் மூலம் அவரை மறைமுகமாக உணர முடியும். நம்முடைய புத்தியினால் (மற்றும் புலன்களால்) இவ்வுலகை நாம் உணர்வதால், நம் சொந்த புத்திக்கும் ஒரு சிருஷ்க் கர்த்தா இருக்கவேண்டும் என்றும், எனவே அநத் சிருஷ்டிக் கர்த்தா அதி புத்திசாலி என்றும் நாம் முடிவு செய்யலாம். எனவே சாதாரண பகுத்தறிவைக் கொண்டே, அனைத்தையும் ஆளும் பரமபுருஷர் ஒருவர் இருப்பதை நிதான புத்தியுள்ள ஒருவனால் புரிந்து கொள்ள முடியும்.
பகவானின் புனித நாமங்கள் பெருமைகளைக் கேட்பதாலும், பாடுவதாலும் அவரை நேரடியாக உணர முடியும். ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: என்றால், எப்பொழுதும் ஒருவன் பகவானின் பெருமகளைப் பாடவும், கேட்கவும் வேண்டும் என்று பொருள். பகவானின் பெருமைகளைச் சிறப்பாகப் பாடுபவனும், கேட்பவனும் அவரை நேருக்கு நேராகக் காண்பது நிச்சயம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். எனவே அவரை எல்லா இடங்களிலும் ஒருவ்ன் தேடவேண்டும். பக்தி -யோகத்தினால் தூய்மையடைந்த உன்னதமான புலன்களால் பரமபுருஷரை நேரடியாக உணரமுடியும். இச்சுலோகத்தில் அத்தா என்ற சொல்லால் சுட்டிக் காட்டப்படுவது போல், இவ்வுணர்வு நேரடியானது, கற்பனையானது அல்ல. இக்கருத்த ஸ்ரீல பிரபபுாதரால் பின்வரும் ஸ்ரீமத் பாகவத சுலோகத்தின் (2.2.35) பொருளுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
“பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனிப்பட்ட ஆத்மாவுடன் ஒவ்வொரு ஜீவராசியிலும் இருக்கிறார். நாம் காணும் செயலிலும், புத்தியிடமிருந்து உதவி பெறும் செயலிலும் இவ்வுண்மையை நம்மால் உணரவும், அனுமானிக்கவும் முடியும்.”
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment