எதை ஒருவன் சுயப் புலன் நுகர்வுக்கு உபயோகிக்க
எண்ணுகிறானோ அதுவே ஜட சொத்து எனப்படுகிறது. ஆனால் பகவானின் அன்புத் தொண்டில் உபயோகிக்கப்படுகின்ற
பொருட்கள் ஆன்மீகமானவையாகும். ஒருவன் தன் ஜட சொத்துக்களையெல்லாம் பகவத் தொண்டில் முழுமையாக
உபயோகிப்பதன் மூலம் அவற்றிடமுள்ள பற்றை விட வேண்டும். சொகுசான ஒரு மாளிகையைப் பெற்றிருப்பவன்
அதில் பகவானின் திருவிக்கிரகத்தை ஸ்தாபித்து, கிருஷ்ண உணர்வைப் பரப்ப அடிக்கடி பிரார்த்தனை
நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதுபோலவே, பகவானுக்கு ஆலயம் கட்டவும், பரமபுருஷரைப் பற்றி
விளக்கும் விஞ்ஞானப்பூர்வமான இலட்சியங்களை அச்சிடவும் செல்வம் உபயோகிக்கப்பட வேண்டும்.
தன் சொத்துக்களை பகவத் தொண்டில் உபயோகிக்காமல் குருட்டுத்தனமாக அவற்றைத் துறப்பவன்,
அனைத்தும் பரமபுருஷருக்குச் சொந்தம் என்பதைப் புரிந்து கொள்ளாதவனாவான். இத்தகைய குருட்டுத்தனமான
துறவு, “இந்த சொத்து என்னுடையதாக இருக்கலாம், ஆனால் இது எனக்கு வேண்டாம்” என்ற பௌதிக
எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். உண்மையில் அனைத்தும் பகவானுக்குச் சொந்தமானதே;
இதை அறிந்துள்ள ஒருவன் இவ்வுலகிலுள்ள பொருட்களை அனுபவிக்கவோ அல்லது விலக்கவோ முயல்வதில்லை.
மாறாக இவற்றை அவன் அமைதியாக பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுத்துகிறான்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment